- Advertisement -

அதி சக்தி வாய்ந்த குரு பூர்ணிமா வழிபாடு

- Advertisement -

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள். நாளைய தினம் குரு பூர்ணிமா. குரு பூர்ணிமா வருடா வருடம் தான் வரும். நாளை என்ன அதிசக்தி வாய்ந்த குருப் பூர்ணிமா. குருவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையோடு சேர்ந்து குருபூர்ணிமா வந்திருப்பது அதிசிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் குருவுக்கு நன்றி தெரிவிக்க, குருமார்களை வழிபாடு செய்ய, நாம் மறக்கவே கூடாது.

வேதவியாசர் அவர்களின் பிறந்த நாளாக இந்த நாளை போற்றி தான், இந்த குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இது நம்முடைய இந்து மதத்தில் மட்டுமல்ல. புத்தர்களும் ஜெயின் மதத்தை சார்ந்தவர்களும் இந்த புத்த பூர்ணிமாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட சில சமூகத்தினருடைய முன்னேற்றத்திற்கு காரணமாக இருப்பது இந்த குரு வழிபாடு. ஆக நாமும் இந்த குருபூர்ணிமா வழிபாட்டை மன நிறைவுடன் மேற்கொள்வோம். குருவுக்கு நமஸ்காரம் செய்வோம். வாழ்வில் முன்னேற்றத்தை அடைவோம்.

- Advertisement -

குரு பூர்ணிமா வழிபாடு

இந்த குரு பூர்ணிமா வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே எப்படி சிறப்பாக செய்வது. நாளை காலை வியாழக்கிழமை. எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய குருவை மனதார நினைத்துக் கொண்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றுங்கள். இந்த விளக்கு குறைந்தது 7 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் உங்கள் வீட்டில் எரியட்டும்.

காலை 6:00 மணிக்கு விளக்கு ஏற்றினால் மாலை 6:00 மணி வரை வீட்டில் ஒளிரட்டும். உங்களுடைய குருவுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொருவர் வீட்டிலும் இந்த விளக்கை ஏற்றி வைப்பது அதி சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும். வியாழக்கிழமை பகல் பொழுது, 12 மணி நேரமும் இந்த விளக்கை ஏற்றி வைத்தாலும் தவறு கிடையாது. 24 மணி நேரம் ஏற்றி வைத்தாலும் தவறு கிடையாது. அது உங்களுடைய சூழ்நிலையை பொருத்தது.

- Advertisement -

நாளைய தினம் வள்ளலாரை நினைத்து “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்ற இந்த மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபாடு செய்வது சிறப்பு. உதாரணத்திற்கு நீங்கள் சாய்பாபாவை குருவாக வணங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.”ஓம் சாய்ராம்” என்ற மந்திரத்தை 108 முறை எழுதலாம். மகா பெரியவா அவர்களை நீங்கள் குருவாக வழங்கினால், “மகா பெரியவா போற்றி போற்றி” என்ற மந்திரத்தை 108 முறை எழுதலாம்.

உங்களுக்கு யார் குருஸ்தானத்தில் இருக்கிறார்கள். அந்த மகான்களின் பெயரை 108 முறை நாளைய தினம் எழுதி, அவர்களிடம் என்ன வரம் கேட்டீர்கள் என்றாலும், அது உடனே கிடைக்கும். அறிந்தோ அறியாமலோ நீங்கள் குருவிற்க்கு ஏதேனும் தீங்கு நினைத்திருந்தால், துரோகம் செய்து இருந்தால், அதற்கான மன்னிப்பையும் இந்த நாளில் கேட்கலாம். உங்களுடைய குரு யார். நீங்கள் யாரை நாளை வழிபாடு செய்யப் போகிறீர்கள், என்பதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

- Advertisement -

பார்க்கும் மற்றவர்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். சில பேர் சித்தர்களை குருவாக நினைத்து கூட வழிபாடு செய்வார்கள். அதுவும் தவறு கிடையாது. அந்த சித்தரின் பெயரை 108 முறை நாளைய தினம் எழுதி, வழிபாடு செய்ய, உங்கள் வாழ்வில் இருக்கும் இருள்நிலை நீங்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: ஆனி பௌர்ணமி வழிபாடு

நாளை உங்கள் வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால், இந்த குரு பூர்ணிமா வழிபாட்டில் நம்பிக்கை இருந்தால், மேல் சொன்ன வழிபாடுகள் அனைத்தும் உங்களுக்கு நல்ல வழியை காட்டித் தரும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -