- Advertisement -
- Advertisement -

நம் தலை முடி இயற்கையாகவே கலரிங் செய்தது போல, நல்ல ஒரு சிவப்பான நிறத்துடன், அலைபாயும் அருமையான கூந்தலுடன் காட்சி தருவதற்கு இந்த ஒரு ஹேர் பேக் நல்ல உதவி செய்யும். தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, வலுவிழிந்த கேசத்தை வலிமையாக்கி, நீண்டு ஆரோக்கியமாக வளர செய்யக்கூடிய பொருட்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இது மைல்டான இயற்கையான நிறத்தையும், நம் கூந்தலுக்கு கொடுத்து பார்ப்பதற்கே ரம்யமாக காட்சி தர செய்யும் இந்த ஹேர் பேக் எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள் :
பீட்ரூட் – 1
வெந்தயம் – கால் கப்
தண்ணீர் – 1 கப்
ஹென்னா பவுடர் – 4 டேபிள்ஸ்பூன்
கற்றாழை ஜெல் – இரண்டு டேபிள்ஸ்பூன்

- Advertisement -

செய்முறை விளக்கம் :
முதலில் இந்த ஹேர் பேக் செய்ய தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முழு பீட்ரூட் ஒன்றை எடுத்து தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸர் ஜாரில் போடுங்கள். அதனுடன் கால் கப் அளவிற்கு வெந்தயத்தை சேர்த்து கொரகொரவென்று அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து வைத்த இந்த விழுதுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கொதித்து பாதி அளவிற்கு சுண்டி வந்ததும், அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது இதை நன்கு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கண்ணாடி பவுலில் தேவையான அளவிற்கு ஹென்னா பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஒரு வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி திக்கான பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த திக்கான பேஸ்டுடன் தேவையான அளவிற்கு கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். சுத்தமான கற்றாழை மடல் ஒன்றை எடுத்து கழுவி அதில் உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும் பிரித்து எடுத்து, ஆறெழு முறை தண்ணீரில் அலசி கொள்ள வேண்டும். அதன் பின்பு கூழ் போல கரைத்து இந்த பேஸ்டுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்பு இதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
தை மாத செவ்வாய் கிழமை படிக்க வேண்டிய துர்கா அஷ்டகம்

ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்த பின்பு மறுநாள் காலையில் தலையை அலச செல்லும் முன்னர், தலையை நன்கு வாரி விரித்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக முடியை எடுத்து தடவிக் கொண்டே வர வேண்டும். பகுதி பகுதியாக முடியை எடுத்து தடவி கொண்டை போல கட்டிக் கொள்ள வேண்டும். தலை முழுவதும் தடவி வைத்த பின்பு 20 லிருந்து 25 நிமிடம் வரை ஊற வையுங்கள். பிறகு தலையை உங்கள் உடல் வாகுக்கு ஏற்றவாறு வெதுவெதுப்பான தண்ணீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ அலசி சுத்தம் செய்யுங்கள். வாரம் ஒரு முறை இது போல ஹேர் பேக் போட்டு வந்தால் தலைமுடி நன்கு நீண்டு மிருதுவாக, ஆரோக்கியமாக நல்ல நிறத்துடன் அலைபாயும்.

- Advertisement -