- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதை மாத செவ்வாய் கிழமை படிக்க வேண்டிய துர்கா அஷ்டகம்

தை மாத செவ்வாய் கிழமை படிக்க வேண்டிய துர்கா அஷ்டகம்

- Advertisement -

இந்த பூமியில் பெண்ணாக பிறந்து விட்டாலே, அவர்கள் வாழ்க்கையில் துன்பம் தான் பின் தொடரும் என்று சொல்லுவார்கள். பெண்கள் என்றாலே வாழ்க்கையில் கஷ்டப்படத்தான் வேண்டும் என்ற அந்த தலையெழுத்து மாற வேண்டும் என்றால், பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு துர்கை வழிபாடு. அதுவும் செவ்வாய்க்கிழமையில், ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை பெண்கள் வழிபாடு செய்தால் அவர்களுடைய வாழ்க்கையில் தென்றல் வீசும்.

புயல் வீசிக்கொண்டிருக்கும் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அந்த புயலை தடுத்து நிறுத்தி, தென்றலை வீச செய்ய வேண்டிய வேலையை அந்த அம்பாள் பார்த்துக் கொள்வாள். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியாமல், எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் அலைமோதி கொண்டு இருக்கும் பெண்களுக்காக இந்த பதிவு. மேலே புகைப்படத்தில் கொட்டுத்திருக்க கூடிய இந்த அஷ்டபுஜ துர்கையை பார்த்து இந்த பாடலை படித்தால் ரொம்ப ரொம்ப நல்லது. 16 கரங்களைக் கொண்ட இந்த துர்க்கை அம்மன் மிக மிக சக்தி வாய்ந்த துர்க்கை அம்மன்.

- Advertisement -

பெண்கள் மட்டும் தான் இந்த பாடலை படிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது ஆண்களும் இந்த பாடலை படிக்கலாம். தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் வாழ்க்கையில் கடன் இல்லாமல் வாழ வேண்டும் கண்திருஷ்டி விழாமல் வாழ வேண்டும், சில பொறாமை குணம் கொண்டவர்கள், எதிர்மறை சக்தியை ஏவி விடுபவர்களிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் சரி, செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். சில பெண்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் இருக்கும் அந்த குறிக்கோள் நிறைவேற வேண்டும் என்றாலும் நீங்கள் துர்க்கை அம்பாளிடம் இன்று வேண்டுதல் வைக்கலாம்.

இன்று ராகு கால நேரத்தில் வீட்டில் இருந்தபடியே, வீட்டில் இருக்கும் அம்மனின் திருவுருவப்படத்திற்கு முன்பாக விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பாடலை படிக்கலாம். உங்கள் வீட்டு பக்கத்தில் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் சன்னிதானம் திறந்திருக்குமா. அந்த கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனுக்கு விளக்கு போடுங்கள்.

- Advertisement -

செவ்வரளி பூக்களை வாங்கிக் கொடுங்கள்‌. அந்த துர்க்கை அம்பாளை ஏழு முறை வலம் வந்து துர்க்கை அம்மன் கோவிலிலேயே அமர்ந்து, அந்த அம்பாளை பார்த்தவாறு இந்த பாடலை படியுங்கள். எதுவுமே முடியாது என்பவர்கள் உங்கள் கைபேசியில் வந்திருக்கும் இந்த அஷ்ட தச புஜ துர்க்கையை பார்த்து இந்த பாடலை படித்தால் போதும் வேண்டிய வரம் கிடைத்துவிடும்.

ராகு கால துர்க்கா அஷ்டகம்.

வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத்தாங்கும் துர்க்கையே

- Advertisement -

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உலகை யீன்றவள் துர்க்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக்காப்பவள்

நிலவில் நின்றவள் துர்க்கா நித்திய மானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மையானவள் துர்க்கா ஜெயமுமானவள்
ஆம்மையானவள் அன்புத் தந்தை யானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
உயிருமானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமை யானவள்

பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையு மானவள் இன்பத் தோனி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே

தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே

திருவு மானவள் துர்க்கா திரிசூலி யானவள்
திலகமாய் என்றும் திகழும் துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே

அன்னை துர்க்கையே! என்றும் அருளும் துர்க்கையே!
அன்பு துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
கன்னி துர்க்கையே! இதயக் கமல துர்க்கையே!
கருணை துர்க்கையே! இதயக் கமல துர்க்கையே!

கருணை துர்க்கையே! வீர சுகுண துர்க்கையே!
தேவி துர்க்கையே! ஜெய தேவி துர்க்கையே!
தேவி துர்க்கையே ஜெய தே
ஜெய தேவி துர்க்கையே !

இதையும் படிக்கலாமே: ருண விமோசன தேய்பிறை அஷ்டமி வழிபாடு

துர்கையை போற்றும் வகையில் இருக்கும் இந்த பாடல் துர்க்கை அம்மனுக்கு மிக மிக உகந்த பாடல். துர்கா அஷ்டகம் என்று இந்த பாடலை சொல்லுவார்கள். நம்பிக்கையோடு ஒவ்வொரு வாரம் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையும் இந்த பாடலை படிப்பவர்களுக்கு நிச்சயம் வாழ்வில் நல்லது நடக்கும். குறிப்பாக பெண்கள் இந்த பாடலை செவ்வாய் கிழமை தோறும் வரும் ராகு காலம் நேரத்தில் படிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 9 வாரம் செவ்வாய்க்கிழமைகள் இந்த வழிபாட்டை யார் செய்கிறார்களோ அவர்கள் வாழ்வில் வெற்றி மட்டும் தான் இருக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்