
நம்முடைய அழகை வெளிப்படுத்துவதற்கு நம்முடைய முகம் எந்த அளவிற்கு முக்கியமோ அதை விட இரண்டு மடங்கு நம்முடைய தலைமுடியும் முக்கியமான பங்கு வகிக்கிறது. தலைமுடி எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நாமும் ஆரோக்கியமாக இருப்போம். நம்முடைய உடலில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அதை வெளிப்படுத்தக்கூடிய ஒரு காரணியாகவே தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது ஏற்படுகிறது.
முதலில் தலைமுடி உதிர ஆரம்பித்ததும் நாம் அது எதனால் உதிர்கிறது என்பதை கண்டறிந்து அதை சரி செய்தால் நம்முடைய தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நின்றுவிடும். அப்படி அதை கவனிக்காமல் விடும் பட்சத்தில் தலைமுடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் முளைக்காமல் வழுக்கை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அப்படி வழுக்கை ஏற்பட்ட இடத்திலும் புதிதாக முடி வளர்வதற்கு செய்யக்கூடிய வழிமுறையை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக நம்முடைய முன்னோர்கள் காலத்தில் வழுக்கை தலையுடன் இருப்பவர்களை பார்ப்பது என்பது மிகவும் அரிதாகவே இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே வழுக்கை பிரச்சினை என்பது பலருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. இதனாலேயே பலருக்கும் திருமணம் ஆகாத சூழ்நிலை கூட உண்டாகி அவர்களுடைய வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் செயற்கையாக முடிகளை வளரச் செய்ய பல வழிமுறைகளை அதிக செலவில் மேற்கொள்கிறார்கள். அதற்கு பதிலாக இந்த எளிமையான வழிமுறைகளை பின்பற்றினாலே அவர்களுடைய வழுக்கை தலையில் முடி முளைக்க ஆரம்பித்து விடும்.
முதலில் வழுக்கை ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது நம்முடைய பெருங்குடல் சுத்தம் இல்லாததுதான். வழுக்கை ஏற்பட்ட நபர்கள் பலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை என்பது இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினை இருந்தால் வழுக்கை விழுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். அதனால் நம்முடைய பெருங்குடலை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ வயிற்றை சுத்தம் செய்வதற்கு இயற்கையான பேதி முறைகளை பின்பற்ற வேண்டும்.
அடுத்ததாக வழுக்கை ஏற்படுவதற்கு காரணமாக திகழ்வது உடல் உஷ்ணம். இந்த உடல் உஷ்ணம் என்பது பலருக்கும் அவர்களுடைய வேலை ரீதியாக ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கோ அதிக உஷ்ணத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலையாலும் உடல் சூடு ஏற்பட்டு அதனால் முடி உதிர்தல் என்பது ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றால் வாரத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
மேலும் தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதன் மூலமும் உடல் உஷ்ணத்தை நம்மால் குறைக்க முடியும். மேலும் உடலை குளிர்ச்சியாக்க கூடிய பூசணி சாறு, பாதாம் பிசின் போன்ற இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய உடலை குளிர்விக்க கூடிய பொருட்களை உண்ண வேண்டும். அடுத்ததாக இவற்றை பின்பற்றுவதோடு நம்முடைய தலையில் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி புதிய முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு ஒரு வழிமுறையை நாம் பின்பற்ற வேண்டும்.
இந்த வழிமுறையையும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயன்படுத்த விரைவிலயே புதிய முடி வளர ஆரம்பிக்கும். இதற்கு மிளகை நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அந்த வெங்காயத்தில் இந்த மிளகுத்தூளை நன்றாக தடவி அதை எடுத்து அப்படியே வழுக்கை விழுந்த இடத்தில் அழுத்தி தேய்க்க வேண்டும். இப்படி தேய்ப்பதன் மூலம் வழுக்கை விழுந்த இடத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள், கிருமிகள் இவை அனைத்தும் நீங்கும் மேலும் ரத்த ஓட்டம் அங்கே அதிகரித்து புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே முகம் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்க
மிகவும் எளிமையான இந்த வழிமுறைகளை பின்பற்றி வழுக்கை தலையை அடர்த்தியான கூந்தல் நிறைந்த தலையாக மாற்ற முடியும். உடலையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும்.