நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வயதை வெளிப்படுத்தும் காரணிகளை வெளிப்படையாக காட்ட மாட்டோம். நம்முடைய வயதை குறைத்து இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். இருப்பினும் நம்மை அறியாமலேயே நம்முடைய முகம் நம் வயதை வெளிப்படுத்தி விடும். இதை சரி செய்வதற்கு செய்யக்கூடிய எளிமையான குறிப்புகளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
வயது முதிர்ச்சி காரணமாக முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு வறண்ட சருமம் உண்டாகும். இன்னும் சிலருக்கோ கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். இவற்றை காணும் பொழுதே அவர்களுக்கு வயதாகிவிட்டது என்ற உணர்வு ஏற்பட்டு விடும். இதை நீக்கி முகத்தை இளமையாகவும் அதேசமயம் பளபளப்பாகவும் மாற்றுவதற்கு உதவக்கூடிய சில வழிமுறைகளை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வறன்ட சருமம் ஏற்பட முக்கியமான காரணம் உடலின் இருக்கக்கூடிய சூடு தான். இந்த சூட்டை சரி செய்ய வேண்டும் என்றால் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் வறண்ட சருமம் இருப்பவர்கள் விளக்கெண்ணெயுடன் கஸ்தூரி மஞ்சள் தூளை கலந்து முகத்தில் நன்றாக தடவி 15 நிமிடம் விட்டுவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ முகத்தில் இருக்கக்கூடிய வறட்சி மாறும்.
இதோடு மட்டுமல்லாமல் முகத்தில் தேவையற்ற ரோமங்கள் இருக்கிறது. முகமும் முதிர்ச்சியடைந்த நிலையை அடைந்து விட்டது என்பவர்கள் குப்பைமேனி இலை பொடியை வாங்கிக் கொள்ளுங்கள். இதே போல் வசம்பு பொடியையும் வாங்கிக் கொள்ளுங்கள். இதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள் மஞ்சிஸ்டான் பொடியையும் வாங்கி சம அளவு கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
நம்முடைய முகத்திற்கு தேவையான அளவு எடுத்து ஒரு பவுலின் போட்டு அதில் தேன், எலுமிச்சம் பழச்சாறு, பன்னீர் இவை மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக தயார் செய்து முகத்திலும் கழுத்திலும் நன்றாக தடவ வேண்டும். இது நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ச்சியாக செய்து வர முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்கும். இதோடு கண்ணுக்கு கீழே இருக்கக்கூடிய கருவளையம் கழுத்தில் இருக்கக்கூடிய கருமை நீங்குவதோடு தேவையற்ற முடிகளும் உதிரும்.
மேலும் நம்முடைய சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சிட்ரஸ் பழங்களின் சாறுகளை அதிக அளவில் குடிக்க வேண்டும். தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அண்ணாச்சி பழத்தை சாப்பிடும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் ரத்த சந்தனம் என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அந்த சந்தனத்துடன் கஸ்தூரி மஞ்சளையும் கலந்து நன்றாக பேஸ்ட் ஆக தயார் செய்து வாரத்திற்கு இரண்டு முறை என்ற வீதம் முகத்தில் நாம் போட்டு வரும் பொழுது முகத்திற்கு இயற்கையிலேயே ஒருவித பொலிவு ஏற்படும் முகம் பளபளப்பாகவும் அழகாகவும் தென்பட ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே முடி உதிர்வதை தடுக்கும் உணவுகள்
மிகவும் எளிமையான இந்த குறிப்புகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். அதே சமயம் நம்முடைய சரும ஆரோக்கியத்தை அதிகரித்து அழகாகவும் இளமையாகவும் தோற்றமளிக்க உதவும்.