
வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து துணிமணிகள் வரை அனைத்தையுமே கறை படாமல் சுத்தமாக வைத்திருந்தால் தான் நமக்கும் நல்லது. பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். இந்த வீட்டுக் குறிப்பு பதிவிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
முதலில் மஞ்சள் கறை படிந்த வெள்ளை துணிகளை எப்படி சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். மஞ்சள் கறை படிந்த வெள்ளை துணிகளின் கறை படிந்த இடத்தில் இந்த ஹார்பிக்கை கொஞ்சமாக தேய்த்து விடுங்கள். (ஹார்பிக் கையில் பட்டு விடாமல் தேய்த்துக் கொள்ளுங்கள்). ஐந்து நிமிடம் அப்படியே விட்ட பிறகு, பயன்படுத்தாத பழைய டூத் பிரஷ் எடுத்து கறை படிந்த இடத்தை லேசாக தேய்த்து விட்டால் போதும். கறை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடும்.
அதே போல் இந்த ஹார்ப்பிக் பாத்ரூம், சட்டையின் கறையை மட்டும் போக்குவதோடு, இல்லாமல் பாத்திரம் தேய்க்கும் சிங், டைல்ஸ், கிச்சன் ஷெல்ப் போன்ற அதிக கறை படியும் போன்ற இடங்களில் கூட இதை பயன்படுத்தி சுத்தம் செய்தால் கறைகள் அனைத்தும் காணாமல் நீங்கி விடும்.
நம் வீட்டில் பயன்படுத்தும் செப்பு பாத்திரங்களை வாரத்திற்கு ஒரு முறையாவது தேய்த்தால் தான் பளிச்சென்று இருக்கும். ஆனால் அதை தேய்ப்பது ஒன்றும் அத்தனை சாதாரணமான காரியமும் கிடையாது. எவ்வளவு அழுத்தி தேய்த்தாலும் அதன் பழைய நிறத்திற்கு வரவே வராது. அதையும் சுலபமாக சுத்தம் செய்ய, முதலில் செப்பு பாத்திரத்தின் மீது எலுமிச்சை பழத்தை நறுக்கி அதன் சாறை சுற்றிலும் தேய்த்து விடுங்கள். அதன் பிறகு வீட்டில் பயன்படுத்தும் தூள் உப்பை அதன் மேல் தேய்த்து எலுமிச்சை தோலை வைத்து லேசாக தேய்த்துப் பாருங்கள் செப்பு பாத்திரம் புதுசு போல மின்னும்.
எண்ணெய் பாத்திரங்களை என்ன தான் தேய்த்து சுத்தப்படுத்தினாலும் கூட அதன் பிசுபிசுப்பு தன்மை போகாமல் அப்படியே இருக்கும். இனி எண்ணெய் பாத்திரங்களை தேய்க்கும் போது இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. எண்ணெய் பாத்திரங்கள் மீது கொஞ்சமாக புளித்த இட்லி மாவு தேய்த்து வைத்து விடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து அப்படியே தேய்த்து கழுவி விடுங்கள். எண்ணெய் பிசுக்கு கொஞ்சம் கூட இருக்காது. இந்த முறையில் சில்வர், பிளாஸ்டிக், கண்ணாடி என எந்த வகை பாத்திரமாக இருந்தாலும் அதை சுத்தப்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு டாய்லட்டை இனி கஷ்டப்பட்டு கை வலிக்க தேய்த்து சுத்தம் செய்ய வேண்டாம்! ரொம்ப ஈசியாக பளிச்சுன்னு இருக்க இத செய்யுங்க.
இந்த பதிவில் உள்ள குறிப்புகள் அனைத்தும் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் இந்த முறைகளை ட்ரை பண்ணி பாருங்க.