உங்க வீட்டு டாய்லட்டை இனி கஷ்டப்பட்டு கை வலிக்க தேய்த்து சுத்தம் செய்ய வேண்டாம்! ரொம்ப ஈசியாக பளிச்சுன்னு இருக்க இத செய்யுங்க.

toilet-soap-lemon
- Advertisement -

கிருமிகள் எளிதாக பரவக்கூடிய டாய்லெட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். டாய்லெட்டை வாரம் ஒரு முறையேனும் கண்டிப்பாக கழுவி சுத்தம் செய்து விட வேண்டும். அப்படி இல்லை என்றால் கிருமிகள் பெருக துவங்கிவிடும். இப்படி டாய்லட்டை கழுவும் பொழுது கை வலிக்க கஷ்டப்பட்டு தேய்க்கிறீங்களா? இனி அந்த சிரமம் உங்களுக்கு இல்லை. ரொம்ப சூப்பராக கிருமிகள் இல்லாத நல்ல நறுமணம் உள்ள டாய்லெட் எப்பொழுதும் பளிச்சுன்னு இருக்கக்கூடிய டாய்லெட் வேணும்னா, இத செஞ்சாலே போதும். அப்படி நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பதை தான் இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அந்த காலத்தில் எல்லாம் ப்ளீச்சிங் பவுடர் போட்டு தான் பாத்ரூம் சுத்தம் செய்வார்கள். தரைகளில் எல்லாம் இருக்கக்கூடிய கிருமிகள் நீங்கவும், பூஞ்சை பிடிக்காமல், வழுக்கி விழாமல் இருக்கவும் இது போல செய்வது உண்டு. ஆனால் இப்பொழுது டைல்ஸ் போட்ட பாத்ரூம் மற்றும் டாய்லெட் எல்லா வீடுகளிலும் இருக்கிறது. இதற்கென பிரத்தியேக லிக்விட்கள் பயன்படுத்தி தான் சுத்தம் செய்கின்றோம் ஆனால் அதிக செலவில்லாமல் இப்படி ஒரு லிக்விட் நாம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து செய்து வைத்துக் கொண்டால் கை வலிக்க உப்பு கறைகளை தேய்த்து கழுவ வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

இதற்கு முதலில் ஐந்து சாதாரண எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கக்கூடிய சாறை பிழிந்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். மூடியை அப்படியே ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளுங்கள் கெட்ட வாடை நீங்கும். இந்த எலுமிச்சை சாறுடன் ஐந்து ரூபாய் துணி துவைக்கும் சோப் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதை கேரட் துருவியில் போட்டு நன்கு பவுடர் போல துருவி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல நாலு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஆப்ப சோடா எனப்படும் சமையல் சோடாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நன்கு கலந்து விட்ட பின்பு, கொதிக்க கொதிக்க தண்ணீரை ஒரு லிட்டர் அளவிற்கு சேருங்கள். சூடான தண்ணீரில் இவை அனைத்தும் நன்கு கரைந்து விடும். பின் நன்கு ஆறிய உடன் இதை ஒரு ஏர்டைட் கேனில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதிலிருந்து தினமும் ஒரு கப் அளவிற்கு லிக்விடை நீங்கள் தூங்க போகும் முன்பு உங்களுடைய டாய்லெட்டில் பேசின் முழுவதும் படும்படி தெளித்துவிட்டு மூடி வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் நீங்கள் எழுந்து பிரஷர் ஷவரில் தண்ணீரை ஊற்றி கழுவினால் போதும், தேய்க்க கூட அவசியம் இல்லை. மஞ்சள் கறை, உப்பு கறை போன்ற எல்லா கறையும் ஒரே நாள் இரவில் அற்புதமாக நீங்கி இருக்கும். நல்ல ஒரு நறுமணமும் உங்களுக்கு கிடைக்கும். தேய்க்காமலே இவ்வளவு சுத்தம் என்றால், லேசாக தேய்த்து விட்டு கழுவினால் எப்படி இருக்கும்?

இதையும் படிக்கலாமே:
காப்பர் பாட்டம் பாத்திரங்கள் மற்றும் காப்பர் பொருட்கள் புதிதாக வாங்கியது போல நீண்ட நாட்களுக்கு இருக்க, உங்ககிட்ட இந்த பொருள் இருந்தா இனி தூக்கி போடாதீங்க இப்படி மட்டும் செய்யுங்க!

கொஞ்சம் கூட பக்க விளைவுகள் இல்லாத, நெடி எடுக்காத இந்த அற்புதமான லிக்விட் டாய்லெட் மட்டும் அல்லாமல் உப்பு கறை படிந்துள்ள எல்லா இடங்களையும் சுலபமாக கழுவி சுத்தம் செய்ய பயன்படுகிறது. உப்பு கறை படிந்துள்ள கிட்சன் சிங்க், வாஷ்பேஷன், பிளாஸ்டிக் வாலிகள், பாத்ரூம் டோர், பாத்ரூம் டைல்ஸ் போன்றவற்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து லேசாக தேய்த்து கழுவினாலே மொத்த பாத்ரூமும் புதிது போல பளிச்சுன்னு இருக்கும்.

- Advertisement -