- Advertisement -
சமையல் குறிப்புகள்

இட்லி, தோசைக்கு ஆரோக்கியமான எள்ளுத் துவையல் டேஸ்டியாக இப்படி செய்து பாருங்கள் இரும்புச் சத்தை அதிகரிக்கும்!

- Advertisement -

இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள எள்ளுத் துவையல் அடிக்கடி உணவில் சேர்த்து வருவதால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். உஷ்ணம் என்று எதையும் ஒதுக்கி விடாமல் ஓரளவுக்கு உணவில் அடிக்கடி சேர்த்து வருவதன் மூலம் உடல் வலிமை அதிகரிக்கும். உஷ்ணத்தை சமன்படுத்த பார்க்கணுமே தவிர எந்த ஒரு ஆரோக்கியம் நிறைந்த பொருளையும் முற்றிலுமாக தவிர்த்து விடக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருப்பது எள்ளு! சுவையான எள்ளு துவையல் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எள்ளு துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
கறுப்பு எள் – அரை கப், வர மிளகாய் – 5, பூண்டு பற்கள் – 2, தேங்காய் துருவல் – அரை கப், கறிவேப்பிலை – ஒரு கொத்து, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

எள்ளுத் துவையல் செய்முறை விளக்கம்:
எள்ளு துவையல் செய்யும் பொழுது வெள்ளை எள்ளை பயன்படுத்துவதை விட கருப்பு எள் பயன்படுத்துவது மிகவும் நல்லது. எள்ளில் மக்னீசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். எனவே குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே எள்ளை பயன்படுத்தலாம். முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கருப்பு எள் சேர்த்து வாசம் வர நன்கு சூடேற வறுத்துக் கொள்ள வேண்டும். எள்ளை வறுக்கும் பொழுது நல்ல ஒரு மணம் வீசும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து நன்கு வறுத்த பின்பு அதனை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதே வாணலியில் வர மிளகாய் சேர்த்து கருகி விடாமல் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். 2 நிமிடம் வதக்கியதும் தனியாக எடுத்து அதையும் ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காய் துருவல் அரை கப் அளவிற்கு சேர்த்து லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு கறிவேப்பிலை, புளி மற்றும் பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக போட்டு இரண்டு நிமிடம் லேசாக வதக்கி எடுத்தால் போதும், அதிகம் வதக்க வேண்டிய அவசியமில்லை.

- Advertisement -

எல்லா பொருட்களையும் தனித்தனியாக வறுத்து எடுத்த பின்பு நன்கு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வறுத்த எல்லா பொருட்களையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு தண்ணீரை கொஞ்சமாக தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த இந்த விழுதுடன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கினாலும் சரி அல்லது அப்படியே இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டாலும் சரி அவ்வளவு அருமையாக இருக்கும்.

மேலும் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடும் பொழுது ரொம்பவே சுவையாக இருக்கும். வயதுக்கு வந்த பெண்களுக்கு கருப்பை பலப்படுத்த எள்ளு உருண்டை செய்து கொடுப்பார்கள். எள்ளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய் தான் நல்லெண்ணெய். எள்ளு சூட்டை உண்டாக்கக் கூடியதாக இருந்தாலும், அதிலிருந்து பிரித்தெடுக்கும் நல்லெண்ணெய் என்னவோ குளிர்ச்சி பொருந்தியதாக இருக்கிறது. கெட்ட கொழுப்பை நீக்கி செல்களுக்கு ஊட்டம் அளிக்கும் இந்த எள்ளுத் துவையல் இப்படி செய்து அசத்துங்கள்.

- Advertisement -