- Advertisement -
சமையல் குறிப்புகள்

பேக்கரியில் வாங்காமல் ஹெல்தியான ஸ்நாக்ஸ் ஈசியாக எப்படி குழந்தைகளுக்காக நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்? இப்படி ஒருமுறை செஞ்சு வச்சுகிட்டா தேவைப்படுறப்போ சாப்பிடலாமே!

- Advertisement -

சாயங்காலம் ஆனாலே ஏதாவது சாப்பிட இருக்கிறதா? என்று கேட்டு நச்சரிக்கும் பிள்ளைகள் ஒரு புறம், வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பெரியவர்களும் காபி, டீயுடன் ஏதாவது சாப்பிட விரும்புவது உண்டு எனவே அந்த சமயங்களில் ஆரோக்கியமாக கடைகளில் இருந்து வாங்காமல், நம் வீட்டிலேயே எப்படி புது வகையான ஸ்னாக்ஸ் தயாரிக்கலாம்? ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த ஸ்நாக்ஸ் நாமும் எப்படி செய்யப் போகிறோம்? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஸ்நாக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், பொட்டுக்கடலை – ஒரு கப், ஓமம் – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, முந்திரி பருப்பு – 10, காஷ்மீரி மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன், உளுந்த மாவு – மூன்று டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

ஸ்னாக்ஸ் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு கெட்டியான மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் கால் ஸ்பூன் அளவுக்கு ஓமம் எடுத்து கைகளால் நன்கு கசக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதே போல சீரகத்தையும் கையால் நன்கு கசக்கி சேர்க்க வேண்டும்.

பின்னர் விருப்பம் உள்ளவர்கள் முந்திரி பருப்புகளை உடன் சேர்க்கலாம். இது ஆப்ஷனல் தான், உங்களுக்கு தேவை இல்லை என்றால் விட்டு விடுங்கள். உங்கள் விருப்பம் போல முந்திரிப் பருப்பு சேர்த்து, இதற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த பவுடரை நீங்கள் கரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இதனுடன் காரத்திற்கு வெறும் மிளகாய் தூள் மற்றும் நிறத்திற்கு காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் தூள் இல்லை என்றால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள் பரவாயில்லை. காஷ்மீரி மிளகாய் அவ்வளவு காரம் கொடுக்காது, நிறம் மட்டுமே கொடுக்கும். பின்னர் இதனுடன் மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு உளுத்தம் பருப்பு மாவு சேர்க்க வேண்டும். ஏற்கனவே உளுத்தம் பருப்பை வறுத்து மாவு போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள், இந்த சமயத்தில் சுலபமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
கீரை ஆயும் பொழுது சத்துள்ள தண்டை வீணாக இனி தூக்கி எறிய வேண்டாம்! ஹெல்த்தியான ‘கீரை ரசம்’ இப்படி செஞ்சா யார் தான் வேண்டாம் என்று சொல்லுவாங்க?

பின்னர் எல்லாவற்றையும் நன்கு கலந்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைய வேண்டும். பின்னர் முறுக்கு சுடும் குழலில் இட்டு உங்கள் விருப்பம் போல எந்த வடிவங்களில் வேண்டுமோ அந்த வடிவங்ககளில் சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் சூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் ரெடி! இந்த ஹெல்தியான முறுக்கு அல்லது ஸ்னாக்ஸ் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ருசியான இந்த ஈவினிங் ஸ்நாக்ஸ் நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்திடுங்க!

- Advertisement -