- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கீரை ஆயும் பொழுது சத்துள்ள தண்டை வீணாக இனி தூக்கி எறிய வேண்டாம்! ஹெல்த்தியான 'கீரை...

கீரை ஆயும் பொழுது சத்துள்ள தண்டை வீணாக இனி தூக்கி எறிய வேண்டாம்! ஹெல்த்தியான ‘கீரை ரசம்’ இப்படி செஞ்சா யார் தான் வேண்டாம் என்று சொல்லுவாங்க?

- Advertisement -

நம் உணவில் ரசம் என்பது ஆரோக்கியம் நிறைந்த ஒரு உணவாக கருதப்படுகிறது. மிளகு ரசம், தக்காளி ரசம் என்று விதவிதமான ரசங்கள் இருந்தாலும், இது போல கீரை ரசம் ஒரு முறை செஞ்சு பாருங்க, விரும்பி சாப்பிடுவீங்க! கீரையின் தண்டுகளின் சத்து வீணாகாமல் செய்யக்கூடிய இந்த ரசம் சுவையில் அட்டகாசமாக இருக்கப் போகிறது. ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் வைத்து விடக்கூடிய இந்த கீரை ரசம் எப்படி நாமும் வைக்கப் போகிறோம்? என்பதை இனி தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கீரை ரசம் செய்முறை விளக்கம்:
எந்த கீரை நீங்கள் ஆய்ந்து எடுத்தாலும் அதில் இருக்கக்கூடிய தண்டுகளில் ஏகப்பட்ட சத்துக்கள் ஒளிந்திருக்கும். சொல்லப் போனால் கீரையை விட கீறையில் இருக்கும் தண்டுகளில் தான் சத்துக்கள் என்றும் கூறுகின்றனர் எனவே இந்த தண்டை வீணாக்காமல் சிறு சிறு துண்டுகளாக கத்தரிக்கோல் கொண்டு கத்தரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதை நீங்கள் ரசம் வைக்க எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ, அவ்வளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் சேர்த்து இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். கால்வாசி நன்கு கொதித்து சுண்டியதும், அடுப்பை அணைத்து இந்த சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் தண்டு ஆறியதும் ஒரு மிக்ஸியில் போட்டு இதே தண்ணீரை ஊற்றி பேஸ்ட் போல அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் இருக்கும் சாறையும் இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போது தண்டில் இருக்கும் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைத்து விட்டது.

இந்த தண்ணீரில் பழுத்த தக்காளி பழங்கள் இரண்டை சுத்தம் செய்து நன்கு கைகளால் கரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, 10 பல் பூண்டு போட்டு கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் நீங்கள் அரைத்து வைத்துள்ள மிளகு, சீரக விழுதை சேர்த்து ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு ஒரு வரமிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெறும் 5 நிமிடத்தில் சூப்பரான கார அப்பம் தயார். செஞ்ச உடனே இதில் ஒன்று கூட மிச்சம் இருக்காது. சோடா உப்பு, தயிர் கூட வேண்டாம்.

லேசாக இவை பச்சை வாசம் போக வதங்கியதும், நீங்கள் கரைத்து வைத்துள்ள கீரை தண்ணீரை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு கொதி வர இறக்கி விட வேண்டும். நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி சுடச்சுட சாதத்துடன் பரிமாறி பாருங்கள். ஆரோக்கியமான இந்த கீரை ரசம் ரெசிபி உங்களுக்கும் நிச்சயம் பிடித்து போய்விடும். உடனே இதே மாதிரி ட்ரை பண்ணி நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்திருங்க!

சற்று முன்