
தலைமுடி பெரியதாக வளர வேண்டும், நீளமாக வளர வேண்டும், அடர்த்தியாக வளர வேண்டும் என்றுதான் அனைவருமே ஆசைப்படுவோம். இது ஆண்களுக்கும் விதிவிலக்கல்ல. ஆனால் நம்மால் அதை செய்ய முடியாமல் போகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நம்முடைய ஆரோக்கியத்தில் நாம் கவனம் செலுத்தாதது தான் மிகவும் முக்கிய காரணமாக திகழ்கிறது. முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இயற்கையிலேயே வளர்ச்சியை தூண்டக்கூடிய சில டிப்ஸை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
ஒரு முடியின் ஆரோக்கியம் என்பது அந்த முடியை நாம் பராமரிப்பதை பொருத்து அமைகிறது. எந்த அளவிற்கு எண்ணெய் வைக்கிறோம், எந்த அளவிற்கு தலையை சுத்தம் செய்கிறோம், எந்த அளவிற்கு பராமரிக்கிறது, எந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் முடி ஆரோக்கியமாக இருக்கும் எந்த உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று இருக்கிறது. அவற்றைப் பற்றிய ஒரு வழிமுறையை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் என்பது மிகவும் நல்ல பழக்கம். அப்படி எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, இல்லாதவர்களாக இருந்தாலும் சரி, வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதற்கும் வழிமுறைகள் இருக்கிறது. தலைக்கு தேய்க்கும் எண்ணெயை சூடு செய்து அதற்கு சரிசமமாக தண்ணீரை கலந்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு வெதுவெதுப்பான சூட்டில் தலைக்கு எண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை வைத்திருந்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதுவே தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும் முறையாகும். இப்படி செய்வதன் மூலம் தலைமுடியின் வேர்க்கால்கள் ஈரப்பதத்துடனும் எண்ணெய் பதத்துடனும் நன்றாக இருக்கும்.
அடுத்ததாக தலைக்கு குளிக்கும் பொழுது எந்த அளவிற்கு நாம் ஷாம்புவை பயன்படுத்துகிறோமோ அதைவிட மூன்று மடங்கு தண்ணீரை அதிகமாக சேர்த்து கரைத்து பிறகுதான் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஷாம்புவில் இருக்கக்கூடிய கெமிக்கல் முடியில் நேராக பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் ஷாம்புவை நாம் நேரடியாக பயன்படுத்தும் பொழுது விரைவிலேயே நம்முடைய முடி வறண்டு போக வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி தண்ணீருடன் சேர்த்து உபயோகப்படுத்தும் பொழுது முடி வறட்சியை நம்மால் தடுக்க முடியும்.
அடுத்ததாக இன்றைய காலத்தில் பெண்கள் பலரும் ஹேர் ட்ரை பயன்படுத்துகிறார்கள். அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் முடி வலுவிழந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. முடிக்கு கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் கடைகளில் விற்கக்கூடிய கிரீம்களை பயன்படுத்தாமல் தேங்காய் பாலை எடுத்து அதை தலைக்கு தடவி குளிப்பதன் மூலம் இயற்கையாக முடி கண்டிஷனராக திகழும்.
அடுத்ததாக நாம் உண்ணக்கூடிய உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு கொய்யாப்பழம், ஒரு நெல்லிக்காய், ஒரு ஆப்பிள் இதை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு கீரை வகைகளையும் காய்கறிகளையும் எந்த அளவிற்கு அதிகமாக சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு முடியின் ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும். எண்ணெயில் பொரித்த பலகாரங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அசைவ உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் ஆவது தண்ணீர் அருந்த வேண்டும். ஆறு மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரம் வரை உறக்கம் வேண்டும். இந்த வழிமுறைகளை யார் ஒருவர் முறையாக பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு ஆறு மாதத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவு முடி வளர்ச்சி ஏற்படும்.
இதையும் படிக்கலாமே மிருதுவான அழகான முகத்தை பெற
நம்முடைய வாழ்க்கை சூழலை நாம் மாற்றினால் தான் நம்முடைய உடலின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இயற்கையான முறையில் நம்முடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அடர்த்தியாக வளரச் செய்வோம்.