- Advertisement -
- Advertisement -

சாதாரணமாக பராமரிக்கப்படாத நம்முடைய சருமம் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால் இயல்பாகவே சொரசொரப்பு தன்மையை பெற்றிருக்கும். கண்ணுக்குத் தெரியாத சின்ன சின்ன புள்ளிகள் போல, நம் முகத்தில் இந்த சொரசொரப்பு தன்மை ஆட்சி செய்யும். கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், குட்டி குட்டியாக இருக்கும் பூனை முடிகள் நம்முடைய சருமத்தை பொலிவிழக்க செய்து விடும். இவை எல்லாம் நீங்கி முகம் பளிங்கு போல மிருதுவான தன்மையுடன் சிவப்பாக மாற என்ன செய்ய வேண்டும்? என்னும் அழகு குறிப்பு சார்ந்த தகவல்களை இப்பதிவை தொடர்ந்து காண்போம் வாருங்கள்.

சருமம் மட்டுமல்ல, நம் உடலில் எந்தெந்த இடங்களுக்கு அதிகம் வேலை கொடுக்கிறோமோ, அந்தந்த இடங்களில் ரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஆரோக்கியமாக இருக்கும். வேலை செய்யாத உறுப்புகளும், இடங்களும் ரத்த ஓட்டத்தை சீராக பெறுவது கிடையாது. இதனால் அந்த இடங்கள் பிரச்சனைகளை சந்திக்கிறது. உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலையில் இருப்பவர்கள், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு தான் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமனும், பானை போல தொப்பையும் வந்துவிடுகிறது.

- Advertisement -

ஒல்லியாக இருப்பவர்கள் அதிகம் சாப்பிடக் கூடியவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் அதற்கு ஏற்ப உழைப்பு கொடுப்பதால், அவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் வருவதில்லை. சருமமும் அது போல தான். கைகளால் சருமத்திற்கு அடிக்கடி மசாஜ் கொடுக்க வேண்டும். கண்களுக்கு கீழே வெண்மையாக ஒரு விரலால் மூக்கின் நுனியில் இருந்து புருவத்தின் நுனி வரை இழுத்து மசாஜ் செய்வதால் எளிதாக கருவளையத்தை விரட்டலாம். நல்ல ஆரோக்கியமான உணவும், ஓய்வும் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. எதுவுமே செய்யாமல் முகம் பொலிவிழந்து சொரசொரப்பாக இருப்பதால் நம்மிடம் இருக்கும் தன்னம்பிக்கையும் நம்மை விட்டு விலகி விடுகிறது. இதிலிருந்து மீண்டு நாம் நமக்கு பிடித்தபடி நம் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள, ஆரோக்கியமாக இருக்க இந்த குறிப்பை பயன்படுத்துவோம்.

தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு சாறு – ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
படிகாரத்தூள் – கால் டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – அரை ஸ்பூன்
கடலை மாவு – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

- Advertisement -

செய்முறை விளக்கம் :
முதலில் ஒரு பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு உருளைக்கிழங்கு சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு, அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். அரை ஸ்பூன் கடலை மாவு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கடைசியாக படிகாரத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். படிகாரம் சரும ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஒரு அற்புதமான பொருள். இதை தூள் செய்து வைத்து பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
ஸ்கின் அண்ட் ஹேர் கேர் டிப்ஸ்

எல்லாவற்றையும் ஒன்று போல கலந்த பின்பு முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். புருவம், கண்கள், உதடுகள் ஆகிய இடங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் தடவி உலர வைக்க வேண்டும். உலர்ந்து நன்கு காய்ந்து முகம் இறுக்கமடையும் வரை காத்திருங்கள். முகம் இறுகி உலர்ந்ததும் கைகளில் தண்ணீரை தொட்டுக் கொண்டு மென்மையாக அதிகம் அழுத்தம் கொடுக்காமல் மசாஜ் செய்ய வேண்டும். காய்ந்திருப்பதால் சொரசொரவென்று இருக்கும். ஒரு ஸ்கிரப்பர் போல இது செயல்படும். நன்றாக ஸ்கரப் செய்த பின்பு ஈரத்துணியால் துடைத்து எடுங்கள். இப்படி செய்வதால் குட்டி குட்டியாக இருக்கக் கூடிய புள்ளிகள், வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள், பூனை முடிகள் ஆகியவை வெளியேறும். ஏழு நிமிடம் வரை இந்த மசாஜ் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை இதை செய்ய சருமம் நல்ல ஆரோக்கியமும், வசீகரமும் அடையும்.

- Advertisement -