
பெண்கள் என்றாலே அழகுதான். அந்தப் பெண்களின் அழகை மேலும் அதிகமாக காட்டுவதற்கு அவர்களுடைய தலைமுடி உதவுகிறது. ஆரோக்கியமாகவும், அழகாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் ஒருவருக்கு முடி இருந்தால், அந்த பெண்கள் அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்கள் என்று அர்த்தம். அப்படி ஆரோக்கியமாக இருக்கக்கூடிய பெண்கள் எப்போதுமே அழகாக தான் இருப்பார்கள். இந்த அழகையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடிய ஒரு ஹேர் டோனரை எப்படி வீட்டிலேயே தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தலைமுடி என்றதும் நம் நினைவிற்கு வருவது ஆறடி கூந்தல் தான். அந்த ஆறடி கூந்தலை பின்னி போட்டு தலை நிறைய பூ வைத்து ஒரு பெண் நடந்து வந்தால் அதன் அழகே தனியாக தான் இருக்கும். அந்த அழகை ரசித்த அனைவருமே தாங்களும் அந்த அளவிற்கு முடியை வளர்க்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அந்த ஆசையால் பல கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்தி தங்களுடைய முடிவை மேலும் பாழாக்கி விடுவார்கள்.
அதை தவிர்த்து இயற்கையிலேயே நம் சமையலறையில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து ஒரு ஹேர் டோனரை நாம் தயார் செய்து தினமும் நம் தலையில் மசாஜ் செய்து வந்தால் நம்முடைய முடி மிகவும் அடர்த்தியாகவும், நீளமாகவும், அழகாகவும் வளரும்.
முதலில் நன்றாக கொதிக்க வைத்த ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ அல்லது கண்ணாடி பாட்டிலிலோ ஊற்ற வேண்டும். பிறகு அதில் நாம் மூன்று பிரியாணி இலைகளை கசக்கி போட வேண்டும். அடுத்ததாக அதில் இரண்டு பட்டை துண்டுகளை போட வேண்டும். மூன்றாவதாக நாம் அதில் பத்து கிராம்பை போட வேண்டும். இவற்றை ஒன்றிரண்டாக தட்டியும் போடலாம். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான விளக்கெண்ணையை ஊற்ற வேண்டும்.
இப்பொழுது ஒரு தட்டை போட்டு அதை மூடி வைத்து விட வேண்டும். இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் அதை எந்த தொந்தரவும் செய்யாமல் விட்டுவிடுங்கள். அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் அந்த நீரில் இறங்கி விடும். இப்பொழுது அந்த நீரை நாம் தனியாக வடிகட்டி நம் தலைக்கு ஹேர் டோனராக உபயோகப்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: முகம் எப்போதுமே இளமையாகவும், வசீகரமாகவும் இருக்க இரவு தூங்கும் முன் இந்த ஆயிலை மட்டும் முகத்தில் தேய்த்தாலே போதும். அப்புறம் ஆயுள் முழுவதும் நீங்க பியூட்டி குயினாகவே இருக்கலாம்.
பிரியாணிக்கு உபயோகப்படுத்தும் இந்த அனைத்து பொருட்களுமே நம் முடியை பேணி காப்பதில் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடியதாக நிகழ்கிறது. இந்த அற்புதமான ஹேர் டோனரை பயன்படுத்தி நம்முடைய முடியை நாம் நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்த்து சந்தோஷப்படுவோம்.