முகம் எப்போதுமே இளமையாகவும், வசீகரமாகவும் இருக்க இரவு தூங்கும் முன் இந்த ஆயிலை மட்டும் முகத்தில் தேய்த்தாலே போதும். அப்புறம் ஆயுள் முழுவதும் நீங்க பியூட்டி குயினாகவே இருக்கலாம்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் குறிப்பிட்ட வயதை கடந்தவர்கள் கூட தங்களை எப்போதும் இளமையாகவே காட்டிக் கொள்ள பெரிதும் முயற்சி செய்கிறார்கள். இதை தவறு என்று சொல்ல முடியாது. வயது என்பது நம்முடைய உடல் அமைப்பை பொறுத்தது அன்று, மனதையும் உடலையும் எப்போதும் இளமையாக வைத்திருப்பது தான் நமக்கு உற்சாகத்தை தரும். அந்த வகையில் முகத்தை எப்போதும் இளமையாகவும் அழகாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க இந்த அழகு குறிப்பு பதிவில் உள்ள எண்ணெய் தயாரிப்பு முறை உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். வாங்க அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே ஒவ்வொருவருடைய முக அமைப்பு ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சிலருக்கு வறண்ட சருமம், ஒரு சிலருக்கு ஆயில் சருமம் இப்படி வித்தியாசமானதாக தான் இருக்கும். ஆகையால் ஒருவருக்கு ஏற்றுக் கொள்ளும் முறை மற்றவருக்கு ஏற்றுக் கொள்ளாது. இப்படியான சிக்கல்கள் இதை பயன்படுத்துவதில் இல்லை. இந்த ஒரு ஆயில் அனைத்து வகை சருமத்தினரும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முகத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க
இந்த ஆயில் தயாரிக்க நீங்கள் இரண்டு கேரட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கேரட் நல்ல பிரஷ்ஷாக புதிதாக வாங்கிய கேரட்டாக இருக்க வேண்டும். இதை துருவி வீட்டு நிழலில் ஆற வைத்து கொள்ளுங்கள். இதை வெயிலில் காய வைக்க கூடாது வீட்டு நிழலில் தான் ஆற வைக்க வேண்டும். இப்படி ஆற வைத்த பிறகு அதில் கொஞ்சம் கூட ஈரப்பசை இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து 250 கிராம் சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் தரமற்ற பொருட்களை வாங்கி அதில் இந்த முறையை செய்தால் நிச்சயம் பலன் அளிக்காது. ஆகையால் இந்த எண்ணெய் தயாரிக்க சுத்தமான தேங்காய் எண்ணெயும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் எண்ணெய்யை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அதன் பிறகு தேங்காய் எண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் கிண்ணத்தை அந்த தண்ணீர் பாத்திரத்தில் வைத்து துருவிய கேரட்டை அதில் போடுங்கள். 10 நிமிடம் வரை மிதமான தீயில் இப்படியே விடுங்கள். இது டபுள் பாயில் முறையில் அப்படியே சூடாக வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு இந்த எண்ணையை எடுத்து வெளியே வைத்து விடுங்கள். இரவு முழுவதும் கூட அப்படியே இருக்கட்டும். கேரட்டில் இருக்கும் இந்த சாறு முழுவதும் எண்ணெயில் இறங்கிய பிறகு அந்த எண்ணெய் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியே ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம் தவறில்லை. இந்த எண்ணையை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தை சுத்தம் செய்த பிறகு ஈரமில்லாமல் துடைத்துவிட்டு முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து லேசாக மசாஜ் செய்து அதன் பிறகு முகத்தை சுத்தம் செய்து விடுங்கள்.

முகத்தை கழுவும் போது சோப்பு பயன்படுத்தாமல் கடலை மாவு பயித்த மாவு போன்ற இயற்கையான பொருட்களை வைத்து முகத்தை கழுவ வேண்டும். சோப்பை பயன்படுத்தினால் இதற்கு முன் பயன்படுத்திய அந்த எண்ணெய் உங்களுக்கு பலன் தராது. இதை மட்டும் நீங்கள் தினமும் தவறாமல் கடைப்பிடித்தால் போதும் எத்தனை வயது ஆனாலும் உங்கள் முகம் எப்போதும் இளமையாகவும் பிரகாசமாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்ல நெல்லிக்காய் இருந்தா இளநரையை பத்தி நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல. இளநரை மறைவதோடு சேர்த்து முடியும் நல்லா அடர்த்தியாக, செழிப்பாக வளரும்.

இந்த அழகு குறிப்பில் உள்ள எண்ணெய் தயாரிப்பு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இது போல செய்து  நீண்ட நாட்களுக்கு உங்கள் அழகை தக்க வைத்து கொள்ளலாம்.

- Advertisement -