- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முகத்தை என்றும் இளமையாக வைத்திருக்க உதவும் வெள்ளரிக்காய் ஃபேஸ் க்ரீம்

- Advertisement -

என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். வயதாகும் தோற்றம் விரைவிலேயே தெரியக்கூடாது என்பதற்காக பலரும் பல வழிமுறைகளை பின்பற்றி வருவார்கள். அவற்றில் மிகவும் எளிமையாக வீட்டிலேயே வெள்ளரிக்காயை வைத்து எப்படி ஃபேஸ் க்ரீம் மற்றும் பேக் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக அழகு நிலையங்களிலும் வீட்டில் ஏதாவது ஃபேஸ் பேக் போடும் பொழுதும் வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைக்கும் பழக்கம் இருக்கிறது. இதற்கு காரணம் வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியானது என்பதால் கண்களில் இருக்கக்கூடிய சூட்டை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையம் போக்குவதற்கும் வெள்ளரிக்காய் உதவும் என்பதால் தான்.

- Advertisement -

நீர்ச்சத்து அதிகம் கொண்டிருக்கும் இந்த வெள்ளரிக்காயில் ஆன்டி ஆக்சைடு அதிகமாக இருக்கிறது. மேலும் ஃபோலிக் ஆசிட் மற்றும் விட்டமின் சி இருப்பதால் இது சருமத்திற்கு மிகவும் சிறந்த ஒன்றாக திகழ்கிறது. வெள்ளரிக்காவை நாம் சருமத்திற்கு பயன்படுத்துவது மூலம் சூரிய ஒளியில் இருக்கக்கூடிய புற ஊதா கதிர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்குகிறது. வறட்சித் தன்மை நீங்கி ஈரப்பதத்துடன் இருக்கவும் உதவி செய்கிறது. மேலும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குவதற்கும் இது வழி வகை செய்கிறது.

ஒரு வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்வோம். அதை நன்றாக கழுவி விட்டு கேரட் துருவுவது போல் துருவி சாரை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளரிக்காயில் இருக்கும் சக்கையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சக்கையில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சர்க்கரையும், ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆலிவ் எண்ணெயையும் சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்பொழுது வெள்ளரி சாரில் மூன்று ஸ்பூன் அளவிற்கு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் மூன்று ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜூலை சேர்க்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு பாதாம் எண்ணெய், இரண்டு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் இவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை அடித்து கலக்கும் பொழுது இது ஒரு வித கிரீம் பதத்திற்கு உருவாகும். நன்றாக கிரீம் பதத்திற்கு வந்த பிறகு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இதுதான் வெள்ளரிக்காய் ஃபேஸ் க்ரீம். இந்த கிரீமை நாம் இரவு படுக்க செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தம் செய்து விட்டு இந்த கிரீமை தடவி நன்றாக வட்ட வடிவில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும். இந்த கிரீமை போடுவதற்கு முன்பாக நாம் ஏற்கனவே வெள்ளரிக்காய் சக்கை ஃபேஸ் பேக் செய்வதற்காக தயார் செய்து வைத்திருக்கும் அல்லவா? அதை முகத்தில் தடவிய பிறகு இந்த க்ரீமை பயன்படுத்தினால் கண்கூடான பலனை உடனே காண முடியும்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை எடுத்து முகத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடுங்கள். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளுங்கள். வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்பதால் தான் சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதை தவிர்ப்பது நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே: முடி பிளவு நீங்க டிப்ஸ்

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இந்த வெள்ளரிக்காயை பயன்படுத்தி நம் முகத்தையும் அழகுப்படுத்தி என்றும் இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -