- Advertisement -
வீட்டு குறிப்புகள்

கெட்டித் தயிர் வீட்டிலே சுலபமாக செய்வது எப்படி?

இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற அருமையான ஒரு உணவெனில் அது தயிர் தான். இந்த நேரத்தில் தினமும் நம்முடைய உணவில் தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்வது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். ஆகையால் இந்த நேரத்தில் பெரும்பாதம் அனைவரும் கடைகளில் தயிர் வாங்க தான் செய்வார்கள்.

அப்படி வாங்கக் கூடிய தயிர் பாலை விட விலை கூடுதலாகவே தான் இருக்கும். என்ன தான் நாம் வீட்டில் உறையூற்றி வைத்தாலும் கூட கடைகளில் கிடைப்பது போல கெட்டித் தயிர் கிடைக்காது. இதனாலேயே அனைவரும் கடைகளில் தயிர் வாங்குவதை விரும்புகிறார்கள். இந்த முறையில் பாலை காய்ச்சி உறை ஊற்றும் போது நிச்சயம் கெட்டித் தயிரை சுலபமாக வீட்டிலே தயார் செய்து விடலாம். வாங்க அது எப்படி என்று வீட்டு குறிப்பு குறித்த தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கெட்டித் தயிர் சுலபமாக செய்வது எப்படி?

இதற்கு முதலில் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். இதற்கு பயன்படுத்தக் கூடிய பால் எது வேண்டுமானாலும் இருக்கலாம் அது உங்களுடைய விருப்பம். அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி காய்ச்சல் தொடங்குங்கள். இந்தப் பால் நன்றாக சூடு ஏறி கொதிக்க வேண்டும். அப்படி கொதி வரும் நேரத்தில் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு பாலை அவ்வப்போது கரண்டி வைத்து கலந்து விடுங்கள்.

ஏனெனில் கெட்டித் தயிர் நமக்கு கிடைக்க வேண்டும் எனில் முக்கியமாக நாம் பின்பற்ற வேண்டியது பாலை ஆடை படிய விடக் கூடாது. அப்படி பாலில் ஆடை படிந்தால் தயிர் கட்டித் தன்மை குறைந்து விடும். ஆகையால் அடிக்கடி கரண்டி வைத்து கலந்து விட்டுக் கொண்டே இருங்கள். பால் ஓரளவுக்கு நன்றாக காய்ச்சி சுண்டியதும் அடுப்பிலிருந்து இறக்கி விட்டு ஆற விடுங்கள்.

- Advertisement -

இப்போதும் அடிக்கடி கரண்டி வைத்து பாலை கலந்து கொண்டே இருங்கள் இல்லை என்றால் ஆடை படிந்து விடும். அதன் பிறகு இந்த பால் மிதமான சூட்டில் இருக்கும் போதே வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்து விடுங்கள். இதற்கு மண் பாத்திரம் ஆக இருந்தால் இன்னும் தயிர் கெட்டியாகவும் அருமையாகவும் இருக்கும். இப்போது நம்முடைய கைப் பொறுக்கும் சூட்டிற்கு பால் வந்தவுடன் உரை உற்ற வேண்டும்.

உறை ஊற்றவும் நல்ல கெட்டியான தயிரை தான் ஊற்ற வேண்டும். உறை ஊற்றத் தானே என்று மோரோ, தண்ணீரோ ஊற்றக் கூடாது. நீங்கள் அதிகமான தயிர் தயார் செய்வதாக இருந்தால் இரவே உறை உற்றி வைத்து விடுங்கள். ஒரு வேளை கொஞ்சமாகத் தான் தயார் செய்ய வேண்டும் என்றால் காலையில் உற்றினால் மதிய சாப்பாட்டிற்கு தயிர் தயாராகி விடும்.

- Advertisement -

இதற்கு நீங்கள் பசும்பாலை பயன்படுத்தினால் மட்டும் சாதாரணமாக காய்ச்சும் நேரத்தை விட இன்னும் சற்று கூடுதலாக பாலை காய்ச்சுங்கள். ஏனெனில் பசும் பால் பொதுவாகவே தண்ணீர் ஆகத் தான் இருக்கும். ஆகையால் அது இன்னும் கொஞ்சம் அதிக நேரம் கொதித்து சுண்டினால் தான் தயிர் நன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மிக்ஸியை எளிமையாக சுத்தம் செய்யும் முறை

தயிர் காய்ச்சி ஊறை ஊற்றுவது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே என்று தோன்றலாம் இந்த முறையில் ஒரு முறை பாலை காய்ச்சி உறை ஊற்றி பாருங்கள்.தயிர் கெட்டியாக கல்லு போல இருக்கும். இனி எங்க கடைகளில் தயிர் வாங்கினாலும் எங்கள் வீட்டு தயிர் போல வராது என்று நீங்களே சொல்வீர்கள் அந்த அளவிற்கு அசத்தலாக இருக்கும்.

- Advertisement -