- Advertisement -
- Advertisement -

சில குடும்பங்களில் தீர்க்க முடியாத பெரிய பெரிய கஷ்டங்கள் இருக்கும். அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்று அலசி ஆராய்ந்து பார்த்தால், யாரோ எப்பவோ விட்ட சாபம் காரணமாக வந்து நிற்கும். யார் சாபம் விட்டாலும் பலிக்குமா? என்ற கேள்வியை எழுப்பினால், நிச்சயம் கிடையாது.

நம் பக்கம் உண்மையிலேயே தவறு இருந்து நம்மால் அடுத்தவர்கள், பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான சாபம் நமக்கு கிடைத்திருந்தால், நிச்சயம் அது பலிக்கும். ஆனால் போன போக்கில் யார் வேண்டுமென்றாலும் யாருக்கு வேண்டும் என்றாலும் சாபம் கொடுக்கலாம். அந்த வகையில் நம் மீது தவறு இல்லை எனும் பட்சத்தில், பிறர் விட்ட சாபம் நமக்கு பலிக்காது.

- Advertisement -

ஆனால் நம்முடைய முன்னோர்கள் நமக்கு இன்னொரு விஷயத்தை சொல்லி வைத்துள்ளார்கள். நம்மை சுற்றி கண்ணுக்கு தெரியாமல் தேவதைகள் இருக்கும். நாம் சில சமயம் பேசும்போது அந்த தேவதைகள் ததாஸ்து என்று வாழ்த்தும். அப்படி வாழ்த்தினால் சொன்ன வார்த்தைகள் பலித்தது விடும் என்று சொல்லுவார்கள்.

உங்களுக்கு யாராவது சாபம் விடும்போது, அப்படி தேவதைகள் ததாஸ்து என்று சொல்லிவிட்டால், அந்த சாபம் பலிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சரி, எதுவாக இருந்தாலும் விட்ட சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்க என்ன செய்வது.

- Advertisement -

சாபத்திலிருந்து விடுபட பரிகாரம்

உங்களுக்கு யார் சாபம் கொடுத்தாங்க, அவர்களுடைய காலில் விழுவதுதான் ஒரே வழி. அவர்களுடைய காலில் விழுந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அவர்கள் மனது குளிரும்படி நடந்து கொண்டால், அந்த சாபத்தின் தாக்கம் குறையும். உங்களுடைய குடும்பத்தின் கஷ்டம் குறையும். அதற்கு வாய்ப்பே கிடையாது. சாபம் விட்டவரிடம் நம்மால் போய் பேசவே முடியாது என்பவர்கள், இரண்டாவது இடத்தில் ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தன் கோவிலுக்கு சென்று விளக்கு போட வேண்டும். உங்களுடைய குடும்பம் சாபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவருக்கு எத்தனை வயசு ஆகிறது, அத்தனை விளக்கு ஏற்ற வேண்டும். சித்திரகுப்தன் கோவிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த விளக்கை ஏற்ற வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரம், ஞாயிற்றுக்கிழமைகள் இப்படி விளக்கு போட்டு சித்திரகுப்தனிடம் வேண்டுதல் வைத்தால், உங்கள் சாபத்திலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

நமக்கு அடுத்தவர்களின் மூலம் எவ்வளவு பெரிய பாதிப்பு இருந்தாலும், கொஞ்சம் கூட யோசிக்காமல், அடுத்தவர்கள் பரம்பரையை பாதிக்கும் அளவுக்கு மனநோகம் அளவுக்கு, சாபம் கொடுப்பது என்பது ரொம்ப ரொம்ப தவறு. கோபத்தில் வார்த்தைகளை விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் பிரச்சினை தீர விநாயகர் தீபம்

சாபத்தை கொடுப்பதன் மூலம், சாபம் பெற்ற குடும்பத்திற்கு பிரச்சினை வருவது எந்த அளவுக்கு உண்மையோ, அதேபோல சாபத்தை கொடுத்தவர்களுடைய குடும்பத்திற்கும் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சாபம் கொடுப்பதும் தவறு. சாபம் கொடுக்கும் அளவுக்கு தவறுகளை செய்வதும் தவறு என்ற தகவலையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -