
இன்றைய காலத்தில் வெண்மை நிறத்திற்கு என்று ஒருவித மோகம் தோன்றியிருக்கிறது. வெண்மையாக இருப்பவர்கள் தான் அழகாக இருப்பார்கள் என்ற எண்ணமும் அனைவரின் மனதிலும் தோன்றி விட்டது. அதனால்தான் கருமையாக இருப்பவர்கள் கூட வெண்மையாக தங்களை மாற்றிக் கொள்வதற்காக பல கெமிக்கல்கள் நிறைந்த கிரீம்களை உபயோகப்படுத்தி அதனால் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி உபயோகப்படுத்தினால் தங்களின் கருமை நிறத்தை வெண்மையாக மாற்றிக் கொள்ள முடியும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய பல பொருட்கள் நம்முடைய தோலின் நிறத்தை மாற்றும் வல்லமை படைத்ததாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக வெயிலால் ஏற்படக்கூடிய கருமையை நீக்குவதற்கு பல வகைகளில் உதவி புரிகின்றன. அதோடு மட்டுமல்லாமல் கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை நீக்கி இளமையாக தக்கவைத்துக் கொள்ள பல இயற்கையான பொருட்கள் கிடைக்கின்றன.
கருமை நிறத்தை வெண்மையாக்கும் கிரீம்
முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை சீவி விட்டு அதை நன்றாக துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் சுத்தமான பசும்பாலை ஊற்றி அதில் நாம் துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு, குறைந்த தீயில் வைத்து உருளைக்கிழங்கு நன்றாக வேக விட வேண்டும்.
நாம் உபயோகப்படுத்தும் சோப்பை எடுத்து அதையும் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று ஸ்பூன் அளவிற்கு துருவிய சோப்பு கிடைத்தால் போதும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு துருவிய சோப்பை அதில் சேர்த்து சோப்பு கரையும் வரை நன்றாக கிளறி விட வேண்டும். சோப்பு அனைத்தும் நன்றாக கரைந்த பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த விழுதை மறுபடியும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு அல்லது ஆரஞ்சு பழச்சாறு இவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறை இரண்டு ஸ்பூன் ஊற்ற வேண்டும்.
பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சோளமாவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நன்றாக கலந்த பிறகு மறுபடியும் இதை அடுப்பில் வைத்து கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக குறைந்த தீயில் வைத்து கை விடாமல் கிளறி விட வேண்டும். இது கிரீம் பதத்திற்கு வந்தவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு சிறிது நேரம் ஆற வைத்து சுத்தமான காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து விட வேண்டும். நிறத்தை வெண்மையாக்க கூடிய க்ரீம் தயாராகிவிட்டது.
இந்த கிரீமை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். இந்த கிரீமை நாம் முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவை நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகச்சுருக்கத்தையும் நீக்குவதற்கு இது பெரிதும் துணை புரிகிறது. ஒரு முறை உபயோகப்படுத்தினாலேயே நல்ல பலனை தரக்கூடிய அற்புதமான கிரீமாக தான் இந்த கிரீம் திகழ்கிறது.
இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளரச் செய்யும் அற்புதமான எண்ணெய்.
இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த பொருட்களுடன் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பையும் சேர்த்து உபயோகப்படுத்துவதன் மூலம் நம் முகத்தின் நிறத்தை நம்மால் அதிகரித்துக் கொள்ள முடியும்.