முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளரச் செய்யும் அற்புதமான எண்ணெய்.

hair oil
- Advertisement -

தலைமுடி உதிர்தல் என்பது பலருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனை என்றாலும் அது பலரையும் பல விதங்களில் பாதிக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. வசதியானவர்களாக இருந்தால் இந்த முடி உதிர்தல் பிரச்சினைக்கு பணத்தை செலவு செய்து மாற்று வழியாக வேறு ஏதாவது ஒன்றை செய்து கொள்வார்கள். ஆனால் வசதி கம்மியாக இருப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு ஏதாவது ஒன்றை செய்தாவது முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே இருக்கக்கூடிய இரண்டே இரண்டு பொருட்களை மட்டுமே பயன்படுத்தி முடி உதிர்தல் பிரச்சனையை முற்றிலும் நிறுத்துவது எப்படி என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

அன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெங்காயமும் பூண்டும் இருந்தாலே போதும். முடி உதிர்தல் பிரச்சனையை தடுத்து நிறுத்தி முடி உதிர்ந்த இடத்தில் வேகமாக வளரச் செய்யக்கூடிய அற்புதமான ஆற்றல் வெங்காயத்திற்கு இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். வெங்காயத்தில் எந்த அளவிற்கு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது அதே அளவு தான் பூண்டிலும் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பூண்டையும் நாம் தலைக்கு பயன்படுத்தும் பொழுது தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது சரி செய்யப்படுகிறது.

- Advertisement -

அதோடு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியும் அது ஊக்குவித்து பொடுகு பிரச்சனைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்யக்கூடிய ஒரு பொருளாக தான் பூண்டும் திகழ்கிறது. அதனால் தான் அந்த காலத்தில் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்கும் பொழுது அதில் இரண்டு பூண்டை தட்டி போடும் வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து வந்தது. இன்றைய காலத்தில் யாரும் அதை பின்பற்றுவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஒரு வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை நீக்கக் கூடாது. வேரையும் நுனியையும் மட்டும் நறுக்கிவிட்டு அதன் தோளுடன் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒன்பது பல் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது டபுள் பாய்லிங் மெத்தடில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி தண்ணீர் சூடானதும் அதனுள் ஒரு பாத்திரத்தை வைத்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு இவை இரண்டையும் அந்த பாத்திரத்தில் சேர்த்து 250மிலி தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும்.

- Advertisement -

குறைந்த தீயில் 30 நிமிடம் அடுப்பில் இருக்க வேண்டும். அவப்பொழுது அந்த எண்ணெயை கிளறி விட வேண்டும். வெங்காயமும் பூண்டும் எண்ணெயில் நன்றாக வெந்து இருக்கும் அளவிற்கு அடுப்பிலேயே வைத்திருக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு அதை அப்படியே எடுத்து ஆற வைக்க வேண்டும். பிறகு அதை காற்று புகாத அளவிற்கு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து ஒரு வாரம் அப்படியே விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த வெங்காயம் மற்றும் பூண்டில் இருக்கக்கூடிய சாறுகள் அனைத்தும் எண்ணெயில் இறங்கிவிடும்.

இந்த எண்ணையை எடுத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். நம் தலை முடிக்கு பாதுகாப்பை தரக்கூடிய அற்புதமான தேங்காய் எண்ணெய் தயாராகிவிட்டது. இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு தேய்த்து லேசாக சூடு செய்து தலை வேர்க்கால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.

- Advertisement -

பூண்டு சேர்த்திருப்பதால் பூண்டு வாடை வரும் என்று நினைப்பவர்கள் தலைக்கு குளித்து கடைசியாக தலையை அலசும் பொழுது மட்டும் அரை எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் பிழிந்து அந்த தண்ணீரை தலைக்கு ஊற்றி அலசினால் பூண்டு வாடை எதுவும் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே: முகச்சுருக்கத்தை தடுக்கும் ஃபேஸ் க்ரீம்

அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய அத்யாவசிய பொருட்களான இந்த இரண்டு பொருட்களையும் வைத்து நம் தலை முடியின் ஆரோக்கியத்தை நம்மால் மேம்படுத்த முடியும்.

- Advertisement -