
தலைமுடியில் வரக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ செயற்கையாகவோ அல்லது இயற்கையாகவோ தீர்வு காண முடியும். ஆனால் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு நம்மால் அந்த மாதிரி எந்தவித முயற்சியையும் மேற்கொள்ள முடியாது. என்னதான் மருத்துவரிடம் சென்று அதற்குரிய மாத்திரைகளை மருந்துகளை சாப்பிட்டாலும் நம்முடைய உடலுக்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே தான் முடியை நம்மால் வேகமாக வளரச் செய்ய முடியும். என்ன செய்தும் முடி வளரவே இல்லை என்று வருத்தப்படுபவர்கள் இந்த ஒரு ஹேர் சீரமை வீட்டில் தயார் செய்து உபயோகப்படுத்தினால் போதும். வளராத முடியும் வளர ஆரம்பித்து விடும். அந்த ஹேர் சீரமை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய உடலில் இருக்கக்கூடிய சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கு டானிக் குடிப்போம் அல்லவா? அது போல தான் நம்முடைய தலைமுடியில் இருக்கக்கூடிய சத்து குறைபாட்டை நீக்கி ஆரோக்கியமாக வளர வைப்பதற்கு ஹேர் சீரம் உதவும். இந்த ஹேர் சீரமை பல இயற்கையான பொருட்களை பயன்படுத்தி நாம் தயார் செய்ய முடியும். இந்த பதிவில் முடியை வேகமாக வளர செய்வதற்கு உதவக்கூடிய ஹேர் சீரமை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் இருந்தால் போதும். வேறு எதுவுமே தேவையில்லை. இவை இரண்டும் அனைத்து இல்லங்களிலும் இருக்கக்கூடியது தான். புதிதாக நாம் கடைக்கு சென்று வாங்க வேண்டியதும் கிடையாது. அதுதான் வெங்காயம் மற்றும் டீ தூள். வெங்காயத்தில் இருக்கக்கூடிய சத்து நம்முடைய தலையில் வழுக்கை விழுந்திருந்தாலும் அந்த வழுக்கை விழுந்த இடத்திலும் முடியை வளரச் செய்யும் என்று கேள்விப்பட்டு இருப்போம். அது முற்றிலும் உண்மையே.
முடி வளரவில்லை என்று வருத்தப்படுபவர்கள் வெங்காயத்தை தலைக்கு தேய்த்து குளிப்பதன் மூலம் முடி வளர்ச்சியை மேம்படுத்த முடியும். ஆனால் இதை அப்படியே நாம் அரைத்து தேய்க்கும் பொழுது சளி பிடிப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. ஹேர் பேக்காக போடுவதற்கு பதிலாக இப்படி ஹேர் சீரமாக நாம் உபயோகப்படுத்தலாம். இரண்டு வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த இந்த விழுதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி வெங்காய சாரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு டீத்தூளை சேர்த்து இரண்டு நிமிடம் அடுப்பில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி டீத்தூளை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த டிகாசத்துடன் நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் வெங்காயச்சாரையும் கலந்து மறுபடியும் இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள்.
இது இரண்டும் நன்றாக கொதித்த பிறகு இதை ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நம்முடைய தலைக்கு நாம் ஸ்பிரே செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த சீரமை நாம் தலைக்கு உபயோகப்படுத்திய பிறகு குளிக்க விருப்பம் இருப்பவர்கள் குளித்துக் கொள்ளலாம். அப்படி வேண்டாம் என்று நினைப்பவர்கள் அப்படியே தலையில் வைத்துக்கொள்ளலாம். அது அவர் அவர்களுடைய விருப்பம். எளிதில் வீட்டின் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே நாம் இந்த முறையில் ஹேர் சீரம் செய்து நம்முடைய தலைமுடிக்கு தடவுவதன் மூலம் முடி வளர்ச்சியை தடுக்க முடியாத அளவிற்கு வளர ஆரம்பித்து விடும்.
இதையும் படிக்கலாமே ஆரோக்கியமான கூந்தலைப் பெற ஹேர் பேக்
வீட்டில் இருக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை மட்டுமே பயன்படுத்தி ஹேர் சீரம் தயார் செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தலைமுடியின் வளர்ச்சி என்பது அதிகரிக்கும். விருப்பம் இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.