
முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பித்தளை செம்பு பாத்திரங்களை தேய்க்க புளி, சாம்பல், போன்ற பொருட்களை பயன்படுத்தி தான் தேப்பார்கள். இதற்கு செங்கல் தூளையும் சிலர் பயன்படுத்துவார்கள். இப்போதெல்லாம் அப்படி அதிக நேரம் செலவழித்து தேய்க்க எல்லாம் யாருக்கும் நேரம் இருப்பதில்லை. அதனாலேயே சுலபமாக பீதாம்பரி பவுடரை வாங்கி தேய்த்து விடுகிறார்கள் இந்த பவுடரையே இப்பொழுது நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை சுலபமாக செய்து விடலாம்.
இந்த பீதாம்பரி பவுடரை நாம் கடையில் வாங்கி பயன்படுத்துவதை காட்டிலும் நாம் தாயாரிக்கும் இந்த பவுடர் அதிக நாட்கள் வரும். அது மட்டும் இன்றி அதை காட்டிலும் விலையும் நமக்கு குறைவாக வரும் அதை விட இதில் பாத்திரங்களும் பளிச்சென்று மாறி விடும். நமக்கு நேரம் பணம் எல்லாமே மிச்சமாகும். வாங்க இப்ப அதை எப்படி செய்யறதுன்னு இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பீதாம்பரி பவுடர் தயாரிக்கும் முறை
இந்த பவுடரை தயாரிக்க முதலில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு கோதுமை மாவு, மைதா மாவு, கடலை மாவு, அரிசி மாவு என உங்கள் வீட்டில் எந்த மாவு இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த மாவை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு விடுங்கள்.
இத்துடன் கால் கப் சிட்ரிக் ஆசிட், இது டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். விலையும் மிகவும் குறைவு தான். அதே போல் கால் கப் தூள் உப்பு, கால் கப் சமையலுக்கு பயன்படுத்தும் ஆப்பசோட மாவு, கால் கப் துணி துவைக்கும் பவுடர் கடைகளில் கிடைக்கும் பீதாம்பாரி பவுடரில் இந்த துணி பவுடர் அவ்வளவாக சேர்க்க மாட்டார்கள். ஆனால் நாம் இதில் சேர்ப்பதால் பாத்திரங்களை தேய்க்கும் போது எண்ணெய் பிசுக்கு போக தனியாக தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை.
மிக்ஸி ஜாரில் இந்த பவுடரை எல்லாம் ஒன்றாக சேர்த்த பிறகு கொஞ்சமாக ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அப்போது தான் கடைகளில் கிடைக்கும் பீதாம்பரி கலரில் கிடைக்கும் இல்லை என்றால் இது வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரை ஒரே ஒரு சுற்று மட்டும் விட்டால் போதும் அனைத்தும் கலந்து நமக்கு தரமான பீதாம்பரி பவுடர் கிடைத்து விடும்.
இதையும் படிக்கலாமே: இரும்பு தோசை கல்லை வாங்கினால் அதை எப்படி பழக்கறதுன்னு கவலையே இனி வேணாம். புது கல்லை கூட வாங்கின உடனே பழக்கி நல்ல மொறு மொறுன்னு தோசை ஊற்ற புதிய எளிய வழி.
இதை தண்ணீர் இல்லாத ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பாட்டில் போட்டு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். நீங்கள் பாத்திரங்கள் தேய்க்கும் சிறிது நேரத்திற்கு முன்பாக இதை எடுத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பாத்திரத்தை தேய்க்க ஆரம்பிங்கள். இனி உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரம் பித்தளை பாத்திரம், செம்பு என அனைத்துமே பளபளவென்று மின்னும்.