இரும்பு தோசை கல்லை வாங்கினால் அதை எப்படி பழக்கறதுன்னு கவலையே இனி வேணாம். புது கல்லை கூட வாங்கின உடனே பழக்கி நல்ல மொறு மொறுன்னு தோசை ஊற்ற புதிய எளிய வழி.

- Advertisement -

பெரும்பாலும் அனைவரும் நாண் ஸ்டிக்கை பயன்படுத்துவதற்கு காரணம் அதில் அதிகமாக மெனக்கிட வேண்டாம். வாங்கி வந்து ஒரு முறை லேசாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தாலே போதும். உடனே அதில் தோசை ஊற்றி விடலாம். இரும்பு கல்லை பொருத்த வரையில் அப்படி கிடையாது வாங்கி அதை இரண்டு நாட்கள் வரை சுத்தம் செய்து கஞ்சி தண்ணீர் ஊற்றி பழகி அதன் பிறகு அதில் தோசை ஊற்ற வேண்டும். இது பெரும்பாலும் பலருக்கு தெரியாது சிலரால் அதற்கான நேரத்தை ஒதுக்க முடியாது. இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் புது தோசை கல்லை வாங்கிய உடனே எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

இரும்பு தோசை கல்லை எளிமையாக பழக்குவது எப்படி
முதலில் தோசை கல்லை வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும். அதாவது தோசைக்கல் அகலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அடியில் கொஞ்சம் குழி போலவும் இருக்க வேண்டும். அப்போது தான் தோசை ஊற்ற வரும். நல்ல மொறு மொறுப்பாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி பலரும் இரும்பு கல்லை வாங்கினாலும் கூட மெலிதான தோசைக்கல்லாக வாங்குவார்கள். அப்படியில்லாமல் தோசைக்கல் கொஞ்சம் தடிமனாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது வாங்கிய தோசை கல்லில் முதலில் நாம் பாத்திரம் தேய்க்கும் டிஷ்வாஷில் கொஞ்சமாக தண்ணீர் கலந்து வைத்து அதை தோசைக்கல்லின் மீது தெளித்து ஸ்பான்ச் வைத்து துடைக்க வேண்டும். இதற்கு எந்த காரணத்தை கொண்டும் கம்பி நாரை பயன்படுத்தவே கூடாது. தோசைக் கல்லை சுத்தம் செய்த பிறகு அடுப்பில் வைத்து நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்தால் அதன் மேல் கருப்பாக படித்திருப்பது வந்து விடும்.

இதை இரண்டு முறை இப்படி செய்த பிறகு மறுபடியும் தோசை கல்லை எடுத்து லேசான சூட்டுடன் இருக்கும் போது அதில் மீண்டும் தண்ணீர் தெளித்து மீண்டும் டிஷ்வாஷ் தண்ணீரை தெளித்து ஸ்பாஞ் வைத்து ஒரு முறை தேய்த்துக் கொள்ளுங்கள். இதை எல்லாம் செய்யும் போது கொஞ்சம் வெதுவெதுப்பான சூட்டில் இருக்க வேண்டும். அப்போது தான் மற்ற கசடுகள் அனைத்தும் வெளியேறும்.

- Advertisement -

இப்போது மறுபடியும் தோசைக்கல் அடுப்பில் வைத்து மறுபடியும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி டிஷ்யூ பேப்பர் வைத்து துடைக்கும் கொள்ளுங்கள. இந்த முறை இரண்டு அல்லது மூன்று முறை துடைக்க வேண்டும். அப்போது தான் அதை சுற்றிலும் இருக்கும் கருப்பு கசடு முழுவதுமாக வரும். நீங்கள் டிஷ்யூ பேப்பர் வைத்து துடைக்கும் போது எப்போது சுத்தமாக கசடு எதுவும் வராமல் பேப்பர் வெள்ளையாகவே இருக்கிறதோ அப்போது நீங்கள் தோசை ஊற்ற தொடங்கலாம். அவ்வளவு தான் இது மிக மிக எளிமையான முறை தான்.

தோசை கல்லை வாங்கி ஒரு நாள் முழுவதும் கஞ்சி தண்ணீரில் ஊற்றி வைத்து மறுநாள் முழுவதும் எண்ணெய் தடவி வெயில் வைத்து பழக்க வேண்டிய பழைய முறை எல்லாம் எதுவும் தேவையில்லை. இந்த முறையில் செய்தாலே போதும் தோசைக்கல் நன்றாக தோசை ஊற்ற வரும். பழைய தோசைக்கல் கூட தோசை ஊற்றும் போது வரவில்லை என்றால் இதே போல அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி டிஷ்யூ பேப்பர் வைத்து தேய்த்து மறுபடியும் டிஷ் வாஷ் வைத்து சுத்தம் செய்து ஊற்றலாம். அப்போதும் தோசை நன்றாகவே வரும்.

இதையும் படிக்காலமே: தோட்டத்தில், வீட்டில் எலி தொல்லையா? எலிகளை ஓட ஓட விரட்ட இதை செய்து வைத்தாலே போதும்! முற்றிலும் புதுமையான முறை.

இனி எல்லோருமே இரும்பு தோசை கல்லை பயன்படுத்தி அருமையாக தோசை சுட்டு ருசியாக சாப்பிடுவதுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்.

- Advertisement -