- Advertisement -

பிறவிப் பிணியை அழித்து சிவகதியை அடையச் செய்வதற்கு உதவும் சிவபெருமானை நாம் பல வேண்டுதலுக்காக வழிபடுவோம். அவருக்குரிய தினங்களில் அவரை நினைத்து விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வோம். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அவருக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக திகழக்கூடியது சோமவார விரதம். அதாவது திங்கட்கிழமையில் இருக்கக்கூடிய விரதம். இந்த விரதத்தை எப்படி எளிய முறையில் மேற்கொள்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

நினைத்த காரியம் நிறைவேற சிவபெருமான் வழிபாடு

பொதுவாக சோமவார விரதம் என்றதும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை தான் ஞாபகத்திற்கு வரும். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை மட்டும் சோமவார விரதம் இருக்க வேண்டும் என்று இல்லை வருடம் முழுவதும் வரக்கூடிய ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாம் சோமவார விரதம் இருக்கலாம். அதில் மிகவும் சிறப்புக்குரியது தான் கார்த்திகை, ஆனி, ஆவணி மாதங்களில் வரக்கூடிய திங்கட்கிழமை. இந்த மாதங்களை தவிர்த்து மற்ற மாதங்களிலும் நாம் விரதம் இருக்கலாம்.

- Advertisement -

நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கும் பொழுது சிவபெருமானை நோக்கி நாம் இருக்கக்கூடிய விரதம் தான் சோமவார விரதம். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் ஏதாவது ஒரு திங்கட்கிழமையை தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த நாளில் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்க வேண்டும். அன்றைய தினம் விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு தீபம் ஏற்றி வைத்து சிவபுராணத்தை ஒரு முறை படிக்க வேண்டும்.

அன்றைய தினம் முழுவதும் தங்களால் இயன்ற அளவு விரதத்தை கடைபிடிக்க வேண்டும். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவ தரிசனத்தை மேற்கொள்ள வேண்டும். மாலை 6 மணிக்கு வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கம் நந்தி அல்லது சிவபெருமானின் படத்திற்கு வில்வம், சங்குப்பூ, அரளிப்பூவை பயன்படுத்தி சிவ மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து படைக்க வேண்டும். மறுபடியும் சிவ புராணத்தை ஒரு முறை படிக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.

- Advertisement -

நெய்வேத்தியமாக வைத்த பொருளை சாப்பிட்டு விரதத்தையும் பூர்த்தி செய்து விட வேண்டும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பொழுது அன்றைய தினம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலங்களை இந்த மாதவிடாய் காலங்களில் இந்த விரதத்தை இருப்பதை தவிர்த்து விட வேண்டும். அன்றைய தினம் வயதில் முதிர்ந்த தம்பதிகளிடம் அல்லது சிவனடியார்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும். தங்களால் இயன்ற தானத்தை பிறருக்கு செய்ய வேண்டும்.

தொடர்ந்து 21 வாரங்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பொழுது நாம் என்ன வேண்டுதலை முன்வைத்து விரதம் இருந்தோமோ அந்த வேண்டுதல் நடைபெறும். திருமண வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். நினைத்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். இதோடு சிவபெருமானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட வராகி அம்மன் வழிபாடு

மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த இந்த சோமவார வழிபாட்டை நம்பிக்கையுடன் மேற்கொள்பவர்களுக்கு சிவபெருமானின் அருளானது பரிபூரணமாக கிடைப்பதோடு வேண்டிய வரமும் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

- Advertisement -