- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

10 நாட்களில் கிளாசி ஸ்கின் வேண்டுமா? பெஸ்ட் அழகு குறிப்பு.

- Advertisement -

அடுத்தவர்கள் பார்த்து கண் வைக்கும் அளவுக்கு பத்தே நாட்களில் அழகாக வேண்டும். என்பவர்கள் இந்த அழகு குறிப்பை தாராளமாக பின்பற்றி பார்க்கலாம். மிக மிக எளிமையான அழகு குறிப்பு. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இதை நீங்கள் செய்து கொள்ளலாம். முகத்தில் இருக்கும் கருமை நிறம் மறைந்து, முகத்தை பொலிவு பெற செய்ய இதைவிட பெஸ்ட் ஃபேஸ் பேக் நிச்சயமாக வேற இருக்க முடியாது. வாங்க அந்த அழகு குறிப்பு என்ன என்பதை நேரத்தை கடத்தாமல் பதிவிற்குள் சென்று படித்து விடுவோம்.

பளபளக்கும் சருமத்தை பெற அழகு குறிப்பு

ஒரு பவுல் எடுத்துக்கோங்க. அதில் கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், அளவோடு புளித்த கட்டி தயிர் 1 டேபிள் ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல் 1, பாதாம் ஆயில் 2 சொட்டு, தேன் 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் 2 சிட்டிகை, இந்த பொருட்களை எல்லாம் போட்டு 1 ஸ்பூனை வைத்து கட்டிகள் இல்லாமல் பேஸ்ட் ஆக இதை கலந்து கொள்ளவும்.

- Advertisement -

உங்களுக்கு ரொம்பவும் டிரை ஸ்கின் ஆக இருந்தால் மட்டும் பாதாம் ஆயில் சேர்த்துக் கொள்ளவும். ரொம்பவும் ஆயில் ஸ்கின் என்றால் அந்த எண்ணெயை தவிர்த்து விடுங்கள். இதை தவிர்த்து மேலே சொன்ன பொருட்களில் உங்களுக்கு வேறு ஏதாவது முகத்திற்கு அலர்ஜியை கொடுக்கும் என்றால் அந்த பொருளை நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.

கடலைமாவே உங்கள் முகத்திற்கு செட்டாகாது என்றால் இந்த குறிப்பை உங்களால் பயன்படுத்தவே முடியாது. ஏனென்றால் இதில் முதன்மையான பொருளே கடலை மாவு தான். சரி இப்போது பேக் தயாராகி விட்டது. இதை எப்போது வேண்டுமென்றாலும் முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். உங்களுக்கு ஃப்ரீ டைம் கிடைக்கும்போது இந்த பேக்கை முகத்தில் போடுங்கள்.

- Advertisement -

முகத்தை சுத்தமாக கழுவி விட்டு, துடைத்துக் கொள்ளுங்கள். மேக்கப் இல்லாத முகத்தில் இந்த பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்துவிட்டு கட்டாயம் ஒரு நிமிடம் வட்ட வடிவில் முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். ரொம்பவும் காய்ந்து போய் பேக் முகத்தை இழுத்துப் பிடிக்கும் அளவுக்கு விடக் கூடாது.

70 லிருந்து 75% பேக் காய்ந்ததும் கொஞ்சமாக ஈரத்தன்மை இருக்கும்போதே முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். அப்படி இல்லை என்றால் முகத்தில் தண்ணீரை ஸ்பிரே செய்து கொண்டே இருக்க வேண்டும். முகம் ரொம்பவும் இழுத்து பிடிக்கும் படி இருந்தால், சில சமயம் சில பேருக்கு சுருக்கம் வருவதற்கு சருமத்தில் வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

அதனால் அதை பார்த்துக் கொள்ளுங்கள். பத்து நாள் தொடர்ந்து இந்த பேக்கை நீங்கள் முயற்சி செய்து வாருங்கள். உங்களுடைய சருமத்தில் என்ன மாற்றம் தெரிகிறது என்பதை கண்ணாடி சொல்லும். உங்களுடைய நண்பர்கள் சொல்லுவார்கள். பத்து நாட்களில் எப்படி இவ்வளவு அழகா. எல்லோரும் நிச்சயம் ஆச்சரியப்படுவாங்க.

இதையும் படிக்கலாமே: பார்லர் போகாமலே முகம் பளிச்சின்னு மாற சிம்பிளா இதை செய்யங்க

நீங்க வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க. பத்து நாட்கள் தொடர்ந்து இந்த பேக்கை முகத்தில் போட்டுவிட்டு, பிறகு வாரத்தில் ஒரு நாள் போட்டாலும், சருமத்தின் அழகு நிலையாக இருக்கும். அழகின் மீது அதிக ஆர்வம் உள்ளவர்களுக்காக இந்த குறிப்பு.

- Advertisement -