- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilபார்லர் போகாமலே முகம் பளிச்சின்னு மாற சிம்பிளா இதை செய்யங்க

பார்லர் போகாமலே முகம் பளிச்சின்னு மாற சிம்பிளா இதை செய்யங்க

- Advertisement -

இன்றளவும் முகத்தை பிரகாசமாக பளிச்சென்று மாற்ற எத்தனையோ வகையான குறிப்புகள் உள்ளது. அதில் சிலவற்றை வீட்டில் இருந்தே செய்யலாம். பல அழகு குறிப்புகளை நாம் பார்லர் சென்று தான் செய்து கொள்ள முடியும். இதில் நீங்கள் என்ன தான் பார்லர் சென்று உங்களை அழகுப்படுத்திக் கொண்டாலும் அதனுடைய பலன் ஒரு சில நாட்களில் குறைந்து விடும்.

மறுபடியும் நீங்கள் அழகு நிலையம் சென்று இது போன்றதொரு அழகு சாதனத்தை பயன்படுத்தினால் மட்டுமே மீண்டும் அந்த அளவிற்கு பிரகாசமான முகத்தை பெற முடியும். இது ஒரு புறம் இருந்தாலும் இதற்கு எவ்வளவு பணம் செலவாகும் என்பது இன்னொரு கவலை. அதே நேரத்தில் இதை அனைவராலும் செய்யவும் முடியாது.

- Advertisement -

அதற்கான ஒரு எளிய தீர்வை தான் இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். வீட்டில் எப்பொழுதும் இருக்கக் கூடிய ஒரு சில பொருட்களை வைத்து முகத்தை நிமிடத்தில் பளிச்சென்று மாற்றக் கூடிய ஒரு குறிப்பு பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். வாங்க அந்த பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

முகம் பளிச்சென்று மாற பேஸ் பேக்

இந்த பேக் தயாரிக்க நமக்கு தேவையான மூன்றே பொருள் உருளைக்கிழங்கு, கடலை மாவு, எலுமிச்சை பழம். இந்த மூன்று பொருளை வைத்து முகத்தை பிரகாசமாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பேக்கை தயாரிக்க முதலில் ஒரு உருளைக்கிழங்கை சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அதன் சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கடலை மாவை சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரே ஒரு சொட்டு எலுமிச்சை பழச்சாறை மட்டும் கலந்து விடுங்கள்.

இப்போது முகத்திற்கு தேவையான அந்த பேக் தயாராகி விட்டது. அடுத்து உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு ஈரம் இல்லாமல் இப்போது முகத்திற்கு தேவையான அந்த பேக் தயாராகி விட்டது. அடுத்து உங்கள் முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு ஈரம் இல்லாமல் துடைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவி அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீர் வைத்து துடைத்து விடுங்கள் போதும். ஒரு வேளை உங்களுக்கு வறட்சியான சருமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக தயிர் சேர்த்து கொள்ளுங்கள். இந்த பேக்கை போட்ட உடனே முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: முகத்தின் பொலிவை கெடுக்கக்கூடிய முகப்பருக்கள் நீங்க எளிமையான வீட்டு வைத்தியம்.

இதை வாரம் ஒரு முறை போட்டால் போதும். முகம் எப்போதும் பார்லர் போய் வந்தது போல பிரகாசமாக இருக்கும். இந்த எளிமையான ஃபேஸ் பேக் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்