
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அதே சமயம் குழந்தை சருமத்தை போல மிருதுவாக இருக்க வேண்டும் என்றும் எண்ணுவோம். ஆனால் நம்முடைய முகமோ பொலிவிழந்து சோர்வாக காணப்படும். இதை மாற்றுவதற்கும் பொலிவான மிருதுவான சருமத்தை ஒருசேர தருவதற்கு பலவிதமான வீட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் என்ன அதை எப்படி பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயார் செய்ய வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
நம்முடைய முகம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பொலிவற்ற நிலையில் இருந்தாலும் அதை மாற்றுவதற்கு பலவிதமான ஃபேஸ் பேக்குகள், ஃபேஸ் க்ரீம்கள் என்று இருக்கின்றன. நம் அனைவரின் வீட்டிலும் இருக்கக்கூடிய சாதாரண பொருட்களை வைத்து நாம் இழந்த பொலிவான முகத்தையும், குழந்தை போல் மிருதுவான சருமத்தையும் எளிதில் பெற முடியும். அந்த ஃபேஸ் பேக்கை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த ஃபேஸ்பேக்கை இரவு படுக்கச் செல்வதற்கு முன் பயன்படுத்தி விட்டு படுத்தால் விரைவிலேயே எதிர்பார்த்ததை விட அதிக அளவு பொலிவான மிருதுவான சருமத்தை பெற முடியும். இதற்கு நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அரிசி மாவு வேண்டும். அரிசி மாவுடன் இன்னும் இரண்டு பொருட்களை நாம் சேர்த்து ஃபேஸ் பேக் ஆக தயார் செய்து பயன்படுத்த வேண்டும். அவை தான் காய்ச்சாத பால் மற்றும் தேன்.
நம்முடைய சருமத்திற்கு தேவையான அளவு அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை பேக்காக தயார் செய்வதற்கு தேவையான அளவு காய்ச்சாத பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் ஃபேஸ்பேக் தயாராகி விட்டது. இதை நம்முடைய முகத்தில் நன்றாக தடவி பத்து நிமிடம் மட்டும் வைத்திருந்தால் போதும். பிறகு குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இப்படி நாம் தொடர்ச்சியாக செய்யும்பொழுது நம்முடைய சோர்வான சருமமும் பொலிவான சருமமாக மாறிவிடும். மேலும் மிருதுவான சருமத்தையும் நம்மால் பெற முடியும்.
இதில் நாம் சேர்க்கக்கூடிய அரிசி மாவு நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. பசும்பால் என்பது நம்முடைய சரும துவாரங்களில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்கக்கூடியதாக திகழ்கிறது. மேலும் தேனில் அதிக அளவு ஆன்டிஆக்சைடு இருப்பதால் நம்முடைய சருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைத்து இளமையான தோற்றத்தை தர உதவுகிறது.
இதையும் படிக்கலாமே: முடி அடர்த்தியாக வளர பேக்
அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய இந்த எளிமையான மூன்று பொருட்களை மட்டும் சேர்த்து நாம் ஃபேஸ் பேக் போடும் பொழுது நம்முடைய சருமமும் நடிகர் நடிகைகளை போல பொலிவான மிருதுவான இளமையான சருமமாக மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.