- Advertisement -
- Advertisement -

நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு தான் நம்முடைய வாழ்க்கை அமையும். இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் கர்ம வினைக்கு ஏற்றவாறு தான் அடுத்த ஜென்மத்தில் நம்முடைய பிறப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நன்மைகளை மட்டுமே அனுபவித்துக் கொண்டு யாராலும் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கஷ்டங்கள் இருக்கும் .அந்த கஷ்டத்திற்கு காரணம் அவர்கள் செய்த கர்ம வினைகள் தான்.

எப்பேர்ப்பட்ட கர்ம வினையாக இருந்தாலும் சரி எந்த ஜென்மத்தில் செய்த கர்ம வினையாக இருந்தாலும் சரி, நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த செயல்களால் ஏற்பட்ட தோஷமாக இருந்தாலும் சரி இவை அனைத்தையும் நீக்குவதற்கு நமக்கு உதவி புரிவது புற்றுமண். இந்த புற்று மண்ணை எந்த முறையில் பயன்படுத்தினால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கர்மவினைகளும் தோஷங்களும் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

புற்று மண் வழிபடு

எறும்பு புற்று, கரையான் புற்று, குளவி புற்று என்று இருக்கிறது. குளவி புற்றுலே செங்குளவி புற்று, கருங்குளவி புற்று என்று இரண்டு வகைகள் இருக்கிறது. இப்படிப்பட்ட புற்றுகளின் மண்ணை நாம் எடுத்து உபயோகப்படுத்தினோம் என்றால் அதனால் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

கருங்குளவி கட்டும் கூட்டை அதன் குஞ்சுகள் பறந்து சென்ற பிறகு எடுத்து வைத்து அதில் சிறிது நெய்யை கலந்து தினமும் நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டு செல்வதன் மூலம் நாம் செல்லும் காரியத்தில் வெற்றி ஏற்படும் என்றும் எந்தவித தடைகளும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதே போல் தான் கரையான் புற்று அதாவது பலரும் சொல்லக் கூடிய பாம்பு புற்று. பாம்பு தானாக புற்றுக்கள் கட்டாது. கரையான் கட்டிய புற்றில்தான் பாம்பு குடியிருக்கும் என்பது பலரும் அறிந்த உண்மையே. பூமியில் இருந்து மண்ணை எடுத்து தன்னுடைய உமிழ்நீரால் புற்றை கட்டும்.

இப்படி கட்டப்பட்ட இந்த புற்று மண்ணை நாம் எடுத்து வந்து தினமும் நம்முடைய நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இதோடு மட்டுமல்லாமல் நமக்கு ஏற்பட்ட தோஷங்களும் விலக ஆரம்பிக்கும். கர்ம வினைகளும் தோஷங்களும் நீங்கி விட்டால் பிறகு என்ன நம்முடைய வாழ்க்கை நல்லவிதமாக தானே அமையும்.

- Advertisement -

இதற்காக பாம்பு புற்று இருக்கும் இடத்திற்கு சென்று மண்ணை எடுக்க முடியுமா? என்று கேட்பீர்கள். இதற்காகவே தான் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக் கூடிய ஷங்கரன் கோவில் இருக்கிறது. அங்கு புற்றுமண் தான் பிரசாதமாக தரப்படுகிறது. அந்த கோவிலில் இருக்கக் கூடிய கடைகள் அனைத்திலும் புற்று மண்ணுடன் மஞ்சள் கலந்து கட்டியாக தருவார்கள்.

இதை வாங்கி வைத்துக் கொண்டு தினமும் நம்முடைய நெற்றியில் வைப்பதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும். இதோடு மட்டுமல்லாமல் ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த புற்றுமண் திலகமானது மிகவும் அற்புதமாக வேலை செய்யும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெற சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் கர்ம வினைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

- Advertisement -