- Advertisement -

கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ அரச இலை பரிகாரம்

- Advertisement -

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அன்றைய காலத்தில் கணவனும் மனைவியும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் என்றும் இணைந்தே வாழ்ந்தார்கள். இன்றைய காலத்தில் சமத்துவம் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அதிகப்படியான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விரைவிலேயே பிரிந்து செல்லும் சூழ்நிலையும் உண்டாகுகிறது. பிரிந்த தம்பதிகளாக இருந்தாலும், அடிக்கடி சண்டை போடக்கூடிய தம்பதிகளாக இருந்தாலும் அரச இலையை வைத்து எப்படி பரிகாரம் செய்தால் ஒற்றுமையுடன் வாழலாம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அரச இலை பரிகாரம்

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்தால் அவர்களுக்குள் சண்டை சச்சரவு என்று எதுவுமே இருக்காது. ஆனால் இன்றைய காலத்தில் திருமணம் ஆன ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரியக்கூடிய தம்பதிகளும் இருக்கிறார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் தம்பதிகளும் இருக்கிறார்கள். ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும், சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொருவரும் இந்த பரிகாரத்தை செய்தால் போதும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு அரச இலை வேண்டும். இந்த அரச இலையை வியாழக்கிழமை அன்றுதான் அரச மரத்திலிருந்து பறிக்க வேண்டும். அன்றைய நாளில் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை நவமி, கரிநாள் போன்ற எதுவும் இருக்கக்கூடாது. அதேபோல் அரச மரத்திலிருந்து இலையை பறிக்கக்கூடிய நேரம் ராகுகாலமாகவும், எமகண்ட நேரமாகவும் இருக்கக் கூடாது. பறித்து வந்த அரச இலையை தண்ணீரில் சுத்தமாக கழுவி ஈரமில்லாமல் துடைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் வழக்கம்போல் பூஜை செய்து கொள்ள வேண்டும். காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் ஒரு கிண்ணத்தில் சந்தனத்தை போட்டு அதில் பன்னீரை ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஜவ்வாது பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த சந்தன விழுதை ஒரு குச்சியில் எடுத்து நம் சுத்தம் செய்து வைத்திருக்கும் அரச இலையின் கணவனின் பெயரை முதலில் எழுத வேண்டும். மற்றொரு அரச இலையில் மனைவியின் பெயரை எழுத வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் பச்சரிசி அல்லது வெள்ளை சர்க்கரையை பரப்பி அதற்கு மேல் முதலில் கணவனின் பெயர் எழுதிய இலையை வைத்து அந்த இலைக்கு மேல் மனைவியின் பெயர் எழுதிய இலையை வைக்க வேண்டும். இதன் நுனிப்பகுதி வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி வைத்துவிட்டு முதலில் விநாயகரை அடுத்ததாக குலதெய்வம், இஷ்ட தெய்வம் என்று அனைத்து தெய்வங்களையும் வேண்டி என்றும் இணை பிரியாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அந்த வாரம் முழுவதும் அது அப்படியே இருக்கட்டும்.

அடுத்த வாரம் வியாழக்கிழமை திரும்பவும் இதே போல் இலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து வெள்ளிக்கிழமை பழைய இலையை எடுத்து வைத்து புதிய இலையை வைக்க வேண்டும். பழைய இலையை சுருட்டி ஒரு மஞ்சள் நிற துணியில் மூட்டையாக கட்டி உங்களுடைய திருமண ஆடைகள் இருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இப்படி தொடர்ச்சியாக ஏழு வாரங்கள் செய்ய வேண்டும். ஏழு வாரங்களும் நாம் சேகரித்து வைத்த அந்த இலைகளை மூட்டையாக கட்டி ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு திருமண ஆடைகள் இருக்கக்கூடிய இடத்தில் நிரந்தரமாக வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கணவன் மனைவிக்கிடையே எந்தவித சண்டை சச்சரவுகளும் வராது. பிரிந்த நிலையில் இருக்கக்கூடிய கணவன் மனைவிகளும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே:குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க செய்ய வேண்டிய தானம்

முழு நம்பிக்கையோடு கணவனும் மனைவியும் இந்த ஒரு அரச இலை பரிகாரத்தை செய்தாலே போதும். தம்பதிகளுக்கு இடையே இருக்கக்கூடிய எப்பேர்பட்ட மன வருத்தமும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -