- Advertisement -
வீட்டு குறிப்புகள்

ஜன்னலில் ஒட்டி இருக்கும் கொசுவலைகளை இப்படி துவைத்தால், மீண்டும் அந்த கொசு வலையில் ஒட்டடை சேராமல், பூச்சிகள் வந்து உட்காராமல், முட்டையிடாமல், கூடு கட்டாமல் இருக்கும்.

- Advertisement -

வீட்டிற்குள் கொசு வராமல் இருப்பதற்காக ஜன்னலில் கொசுவலை அடித்திருப்போம். ஆனால் அந்த கொசு வலையில் ஏகப்பட்ட சின்ன சின்ன கொசு, சின்ன சின்ன பூச்சி, சிலந்தி வந்து உட்கார்ந்து வலையைக் கட்டி அசுத்தம் செய்து வைக்கும். ஜன்னலை சுத்தம் செய்வது ஒரு வேலை என்றால், இந்த கொசு வலையை சுத்தம் செய்வது அதைவிட மிகப்பெரிய வேலை. இல்லையென்றால் அதில் உட்கார்ந்து முட்டை இடக்கூடிய கொசுக்களின் மூலம், அந்த பூச்சிகளின் முட்டைகளின் மூலம், நம் வீட்டிற்கு தான் பாதிப்புகள் வரும். இதே போல உங்களுடைய வீட்டில் பெட்டுக்கு மேலே கொசுவலை பயன்படுத்தினாலும், அந்த கொசுவளையையும் அடிக்கடி துவைத்து சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால் அசுத்தம் நிறைந்த கொசு வலைகளின் மூலம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு வந்துவிடும்.

சரி, இந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எப்படி சுத்தம் செய்வது என்று வரிசையாக பார்த்து விடுவோம் வாருங்கள். முதலில் ஜன்னலில் ஒட்டி வைத்திருக்கும் கொசு வலையை ஜன்னலில் இருந்து எடுத்து விடுங்கள். உங்கள் வீட்டு ஜன்னலில் இப்போது ஒட்டடையும் தூசியும் படிந்து இருக்கும். அதை ஒரு துடைப்பத்தை வைத்து அல்லது தூசு தட்ட கூடிய பிரஷ் வைத்து எல்லாவற்றையும் தட்டி விடுங்கள். ஒரு சின்ன பக்கெட்டில் 1/4 பக்கெட் அளவு தண்ணீரை எடுத்து, அதில் 1 பூச்சி கற்பூரத்தை நசுக்கி போட்டு, வினிகர் 2 பெரிய மூடி, டெட்டால் 1 சின்ன மூடி ஊற்றி, லைசால் அல்லது பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஏதாவது ஒன்றை ஊற்றி அந்த தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை தொட்டு உங்களுடைய ஜன்னலை துடைக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு நீளமான ஒட்டடைக்குச்சி அல்லது வேறு ஏதாவது குச்சி இருந்தால் கூட அதன் முனையில் திக்காக ஒரு துணியை மடித்து சுருட்டி ரப்பர் பேண்ட் அல்லது நூல் போட்டு இறுக்கமாக கட்டிக்கோங்க. அந்த துணியை தண்ணீரில் நனைத்து கீழே நின்றபடியே சுலபமாக ஜன்னல் கம்பிகளை, ஜன்னல் கண்ணாடிகளை துடைத்து விடலாம். இப்படி நீளமான குச்சியில் இறுக்கமாக தடிமனாக துணியை கட்டி ஜன்னல் தொடைக்கும்போது நமக்கு சுலபமாக வேலை முடிந்து விடும். நாற்காலியின் மேல் ஏறி மேலே வரை துடைக்க வேண்டும் என்ற சிரமம் இருக்காது. இதில் இருக்கும் டெட்டால் வினிகர் வாசத்திற்கு நீண்ட நாட்களுக்கு அந்த ஜன்னலில் ஒட்டடை பூச்சிகள் கொசுக்கள் வந்து தங்காமல் இருக்கும்.

அடுத்து ஜன்னலில் இருந்து எடுத்த கொசுவலை படுக்கையறையில் பெட்டுக்கு மேலே போட்டு இருக்கும் கொசு வலையை சுத்தம் செய்ய ஒரு ஐடியா. ஒரு அகலமான டப்பில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் லைசால் 1 மூடி, வினிகர் 1 பெரிய மூடி, துணி துவைக்கும் பவுடர் 1 ஸ்பூன் போட்டு நன்றாக கரைக்க வேண்டும். இதில் அழுக்கு படிந்த வளையை மூன்றாக அல்லது நான்காக மடித்து அப்படியே தண்ணீரில் நனைத்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த வலையை நீங்கள் எடுத்தாலே தெரியும். உங்கள் வலையில் இருக்கும் அழுக்கு மொத்தமாக அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். இந்த வலையை மீண்டும் நல்ல தண்ணீரில் அலசி சுலபமாக காய வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து பெட்டுக்கு மேலே கொசு வலை போட்டு இருப்பீர்கள் அல்லவா. அதை துவைக்கலாம். ஒரு அகலமான பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி, இதற்கு ஷாம்பு போட வேண்டும். ஷாம்புடன், டெட்டால் 1 மூடி ஊற்றி நன்றாக கரைத்து இந்த தண்ணீரில் கொசு வலையை போட்டு 15 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து நல்ல தண்ணீரில் அலசி, அப்படியே எடுத்து தரையில் வைத்து விடுங்கள். கொசு வலையில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் வடிந்த பிறகு எடுத்து காய வைத்தால் வேலை சுலபமாக முடியும்.

இதையும் படிக்கலாமே: கை வலிக்காமல் ஸ்கூல் பேக் சுலபமாக துவைக்க இதோ ஒரு சூப்பர் ஐடியா. உங்க குழந்தையோட ரொம்ப ரொம்ப அழுக்கு படிந்த, பழைய ஸ்கூல் பேகை கூட நிமிடத்தில் புதுசு போல ஜொலிக்க வைக்கலாம்.

துவைத்த வலையை ஜன்னலில் ஒட்டிட்டு பிறகு, ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்குள் கொஞ்சமாக வினிகர், கொஞ்சமாக சூடம் சாமிக்கு ஏற்றுவோம் அல்லவா கற்பூரம், அதை அந்த வினிகளில் நசுக்கி போட்டு, 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி இதை ஒரு லிக்விட் போல தயார் செய்து கொள்ளுங்கள். இந்த லிக்விடை உங்களுடைய ஜன்னலில் ஒட்டி இருக்கும் வலையில் உடனடியாக ஸ்பிரே செய்து விடுங்கள். சுத்தம் செய்த வலையில் உடனடியாக இதை ஸ்பிரே செய்து வைத்து விட்டால் அந்த வலையில் கூட பூச்சிகள் வந்து அமராமல் இருக்கும். மேலே சொன்ன ஐடியா பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -