கை வலிக்காமல் ஸ்கூல் பேக் சுலபமாக துவைக்க இதோ ஒரு சூப்பர் ஐடியா. உங்க குழந்தையோட ரொம்ப ரொம்ப அழுக்கு படிந்த, பழைய ஸ்கூல் பேகை கூட நிமிடத்தில் புதுசு போல ஜொலிக்க வைக்கலாம்.

bag
- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் ஸ்கூல் பேக், காலேஜ் பேக், ஹேண்ட் பேக் என்று எல்லாமே ஒரு சில நாட்களில் அழுக்கு படிய தான் செய்யும். வசதி உள்ளவர்கள் பழைய பேகை அழுக்கானால் தூக்கிப்போட்டு விட்டு, புதுசு வாங்கிக் கொள்வார்கள். ஆனால் எல்லோராலும் அது முடியாது. பழைய பேகை துவைத்து நம்மில் நிறைய பேர் பயன்படுத்துவோம். ஆனால் பழைய பேகை துவைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பேகை சோப்பு தண்ணீரில் ஊற வைத்து பிரஷ் போட்டு தேய்த்து துவைப்பதற்குள் கழுத்து வலியும், இடுப்பு வலியும் வந்துவிடும்.

அம்மாக்களுக்கு இருக்கும் இந்த கஷ்டமான வேலையை எளிமையாக்க ஒரு சூப்பரான குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். ஒரு அகலமான பக்கெடில் அல்லது டப்பில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பேக் முழுக்கும் அளவிற்கு தண்ணீர் இருக்கட்டும். ஒரே ஒரு பேக் என்றால் பின் சொல்லக்கூடிய பொருட்களின் அளவுகள் சரியாக இருக்கும். இரண்டு மூன்று பேக் துவைக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்றது போல் நீங்கள் பின் சொல்ல கூடிய பொருட்களை கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு பேக் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் என்றால் ஷாம்பு இரண்டு ஸ்பூன், ஆப்ப சோடா 2 ஸ்பூன், ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு, இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து விட்டு அந்த தண்ணீரில் அழுக்கு படிந்த பேக்கை போட்டு நன்றாக மூழ்க வைக்க வேண்டும். பேக் தண்ணீரின் மேலே மிதந்து வரக்கூடாது. அப்படி மிதந்து வந்தால் அதன் மேலே ஏதாவது ஒரு கனமான பொருளை வைத்து விடுங்கள். தண்ணீரில் அந்த பேக் இரண்டு மணி நேரம் கட்டாயம் நன்றாக ஊற வேண்டும்.

அதன் பின்பு அந்த பேகை எடுத்து சாதாரண நார் வைத்து தேய்த்தாலே போதும். பேக்கில் இருக்கும் அழுக்கு மொத்தமும் சூப்பராக பிரிந்து வந்துவிடும். பிரஷ் பயன்படுத்தக் கூடாது. ஒயரில் நார் வரும் அல்லவா. அதுபோன்று இருக்கக்கூடிய ஒரு நாரை பயன்படுத்தி லேசாக உங்கள் பேக்கை தேய்த்துக் கொடுக்க வேண்டும். அடர்த்தியாக எந்த இடத்திலாவது அழுக்கு படித்திருக்கும். அந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி தேய்த்துக் கொடுத்தால் பேக் சூப்பராக சுத்தமாகிவிடும்.

- Advertisement -

பேக் துவைக்க வேண்டும் என்றால் நன்றாக வெயில் காயும்போதுதான் துவைக்க வேண்டும். துவைத்து நல்ல தண்ணீரில் இரண்டு முறை அலசி பின்பு அந்த பேக்கை கொண்டு போய் நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து விட்டால், பேக் சூப்பராக புத்தம் புதுசு போல மாறிவிடும். இதே போலவே லன்ச் பேகையும் துவைக்கலாம். பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் கூட இப்படி துவைத்து கொள்ளலாம். வேலை சுலபமாக முடிந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: 1 கப் தண்ணீரை ஊற்றி விட்டாலே போதும். உங்களுடைய டாய்லெட் அப்படியே நிமிடத்தில் புத்தம் புதுசு போல ஜொலிக்கும். இந்த சோப்பு ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.

தேவைப்பட்டால் இதே போல நீங்கள் வெள்ளை ஷூக்களை கூட சுத்தம் செய்யலாம். கூடவே குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்கூல் பெல்ட் இருந்தால் அதையும் இந்த மெத்தடை ட்ரை பண்ணி சுத்தமாக துவைத்து விடலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -