- Advertisement -
சமையல் குறிப்புகள்

இந்த தீபாவளிக்கு, இந்த முறுக்கு தாங்க உங்க வீட்ல. இட்லி அரிசியில், கையே வலிக்காமல் இப்படியும் முறுக்கு சுடலாம்.

- Advertisement -

15 நாட்கள் ஆனாலும் இப்படி சுட்ட முறுக்கு சிக்குவாடை அடிக்காது. நமத்து போகாது, இந்த முறுக்கு சுட கையும் வலிக்காது, எண்ணெயும் குடிக்காது. எல்லோர் வீட்டிலும் இருக்கக்கூடிய இட்லி அரிசியை பயன்படுத்தி தான் இந்த முறுக்கு ரெசிப்பியை பார்க்கப் போகின்றோம். இந்த முறுக்கு ரெசிப்பியை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்த முறுக்கு செய்ய தேவையான பொருட்கள். இட்லி அரிசி – 1 டம்ளர், வரமிளகாய் 5, பொட்டுக்கடலை – 1/4 கப், உப்பு தேவையான அளவு அவ்வளவுதான்.

இட்லி அளந்த டம்ளரிலேயே, 1/4 கப் அளவு பொட்டுக்கடலையை அளந்து எடுத்து, மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பொடி செய்து சலித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொட்டுக்கடலை மாவு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

எடுத்து வைத்திருக்கும் இட்லி அரிசியை சுத்தமாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி, 3 மணி நேரம் ஊற வைக்கணும். ஒரு சிறிய கிண்ணத்தில் 4 லிருந்து 5 வரமிளகாய்களை போட்டு தண்ணீரை ஊற்றி அதையும் 3 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். இந்த இரண்டு பொருட்களும் மூன்று மணி நேரம் ஊறினால் தான் மிக்ஸி ஜாரில் அரைக்கும் போது நைஸ் ஆக அரைபட்டு வரும். 1 மணி நேரம் ஊற வைத்துவிட்டு இதே மாவை கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுத்துக் கொள்ளலாம். அது உங்கள் விருப்பம்

மூன்று மணி நேரம் ஊறிய வர மிளகாய் முதலில் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். கொரகொரப்பாக மிளகாய் அரைந்து வந்த பிறகு ஊற வைத்திருக்கும் அரிசியையும் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக மிளகாய் ஊற வைத்த தண்ணீரை தெளித்து, இந்த மாவை எந்த அளவுக்கு கட்டியாக நைசாக அரைக்க முடியுமோ, அந்த அளவுக்கு கட்டியாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். மாவு கொஞ்சம் சூடாக அரைப்பட்டு இருக்கும்.

- Advertisement -

இதை ஒரு அகலமான பவுலில் ஊற்றி, லேசாக ஆற விட்டு விடுங்கள். அதன் பின்பு இதோடு அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை மாவை கொட்டி, பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன், எள்ளு – 1 ஸ்பூன், ஓமம் – 1/2 ஸ்பூன், சேர்த்து நன்றாக உங்கள் கையை கொண்டு பிசைய வேண்டும்.

 

- Advertisement -

ஆரம்பத்தில் மாவு கையில் பிசுபிசுவென ஒட்டும். ஆனால் பொட்டுக்கடலை மாவு முழுமையாக அந்த அரிசி மாவில் கலந்து ஊறிய பின்பு முறுக்கு மாவு பதம் சரியாக நமக்கு கிடைத்துவிடும். மாவை பிசைந்து முடித்த பிறகு இறுதியாக, இதில் சுட சுட 2 சின்ன குழி கரண்டி அளவு ‘தேங்காய் எண்ணெயை’ கொதிக்க கொதிக்க காய்ச்சி ஊற்றி, ஒரு ஸ்பூனை வைத்து முதலில் கலந்து விட்டு, கை பொறுக்கும் சூடுக்கு மாவு வந்தவுடன், மாவை மீண்டும் ஒருமுறை கையை கொண்டு பிசைந்து விடுங்கள். மேல் சொன்ன முறைகளை சரியாக பின்பற்றி மாவு பிசைந்து இருந்தால் உங்களுடைய மாவு இலக்கமாக சூப்பராக கிடைத்திருக்கும்.

முறுக்கு அச்சுக்கு உள்ளே எண்ணெய் தடவி தேன்குழல் முறுக்கு அச்சு  போட்டு, தயாரான மாவை சிறிய பாகங்களாக பிரித்து முறுக்கு அச்சில் போட்டு, எப்பவும் போல முறுக்கு பிழிந்து எண்ணெயில் விட்டு சுட்டு எடுக்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு இந்த முறுக்கு போட்டு சுட்டு எடுங்க. (சூடு செய்த தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நீங்கள் முறுக்கு சுடுவதற்காக காயவைக்கும் எண்ணெயை கூட ஊற்றலாம். இருப்பினும் தேங்காய் எண்ணெய் ஊற்றும் போது இந்த முறுக்கின் சுவை கூடுதலாக கிடைக்கும்.)

இதையும் படிக்கலாமே: சப்பாத்தி, பூரி, நாணுக்கு இதை விட ஒரு ஹெல்தியான சைடிஸ் இருக்கவே முடியாது. பாலக் பச்சைப் பயிறு கிரேவி.

பின்குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு முறுக்கு மாவு ரொம்பவும் கெட்டியாகிவிட்டது, முறுக்கு பிழியும் போது உடைகிறது என்றால், முறுக்கு மாவு சரியான பதத்தில் இல்லை என்று அர்த்தம். பொட்டுக்கடலை மாவு அதிகமாகிவிட்டது என்று அர்த்தம். அதில் கொஞ்சம் அரிசி மாவை சேர்த்து மீண்டும் தண்ணீர் தெளித்து பிசைந்து முறுக்கை பிழிந்து சுட்டு எடுக்க வேண்டும்.

- Advertisement -