இந்தப் பாலக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க செய்வதில் இந்த கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கீரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த கீரையை அதிகம் சாப்பிடலாம். கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த கீரை ஒரு நல்ல மருந்து. அதே போல தான் இந்த பச்சை பயிறும், தலைமுடி, சருமம் போன்றவற்றுக்கு அதிக அளவில் நன்மை தரக்கூடியது. இதிலும் வைட்டமின் ஏ, சி, எண்ணற்ற போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு, இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்களும் நிறைந்து இருப்பதோடு உடலுக்கு நல்ல குளுமையை தரும். இவை இரண்டையும் வைத்து சுவையாக இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்: பாலக்கீரை – 1கட்டு, ஊற வைத்த பச்சை பயிறு – 100 கிராம், தக்காளி – 2, வெங்காயம் – 3 பச்சை மிளகாய் – 3 பூண்டு – 10 பல், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன் ,சீரகம் – 1 ஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன், கஸ்தூரி மேத்தி – 1/2 ஸ்பூன், கொத்தமல்லி சிறிதளவு.
முதலில் பச்சை பயிரை ஒரு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் கீரையுடன் சேர்த்து வேக வைக்கும் போது பயிறு சீக்கிரம் வெந்து வரும்.
பிறகு கீரை கட்டை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு குக்கரில் ஒரு கட்டு கீரையுடன் ஒரு வெங்காயதை நாளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு ஐந்து பல், ஊற வைத்து பச்சை பயிறு என அனைத்தும் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். குக்கர் விசில் இறங்கியதும் கொஞ்சம் உப்பு சேர்த்து கீரையை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் சேர்த்து அடிக்க வேண்டாம். மேஷர் இருந்தால் அதில் மசித்து கொள்ளுங்கள் இல்லை என்றால் வீட்டில் பருப்பு கடையும் மத்து இருந்தாலும் அதை வைத்து மசித்து கொள்ளுங்கள் இது அப்படியே ஒரு புறம் இருக்கட்டும்.
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம் போட்டு பொரிந்ததும் ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கி அதில் சேர்த்து கொள்ளுங்கள். மீதம் இருக்கும் பூண்டையும் நசுக்கி அதில் சேர்த்து வதக்கி விடுங்கள். பூண்டை இப்படி நசுக்கி சேர்க்கும் போது அதன் வாசம் அதிகமாவதுடன் ருசியும் நன்றாக இருக்கும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்த பிறகு வேக வைத்து மசித்த கீரையை அதில் சேர்த்து நன்றாக ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியாக கஸ்தூரி மேத்தியை தூவி ஒரு நிமிடம் கொதித்தால் போதும். அடுப்பை அணைத்த பிறகு கடைசியாக மேலே கொஞ்சம் மல்லி தழை தூவி விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: 1 கப் பொட்டுக்கடலை இருந்தா போதும் அருமையான கீரை வடை இப்படி செஞ்சு பாருங்க இவ்வளவு ஈஸியா என்று நீங்களே வாயை பிளப்பீங்க!
இந்த கிரேவி பூரி, சப்பாத்தி, நாண் என அனைத்து டிபனுக்கும் நல்ல சைடு டிஷ். அது மட்டுமின்றி இது சாதத்திற்கும் நன்றாக இருக்கும். பயிறு கீரை இரண்டுமே ஊட்டச்சத்து மிகுந்த உணவு. இந்த முறையில் கீரையும், பருப்பும் சேர்த்து செய்து கொடுக்கும் போது உங்கள் பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துப் பாருங்கள் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.