- Advertisement -
- Advertisement -

60 வயதானாலும் முதுமை தெரியாமல் இளமையுடன் இருப்பதற்கு சிறு சிறு விஷயங்களை பின்பற்றினால் போதுமானது. சமச்சீர் உணவு, உடற்பயிற்சி மட்டுமல்லாமல் இந்த ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் நீங்கள் இளமையாக தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முதுமையை விரட்டியடிக்கும் அற்புதமான எளிய பப்பாளி ஃபேஸ் பேக் எப்படி போடுவது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.

முதுமையை விரட்டியடிக்கும் பப்பாளி பழம். பப்பாளி பழத்தில் ஏராளமான ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இந்த பப்பாளி பழம் முதுமையை விரட்டியடிக்கும் அற்புதமான சக்தியும் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பப்பாளி பழத்தை வெட்டி நன்கு பழுத்ததாக ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதனுடன் சுத்தமான சந்தனத்தை குழைத்து சேர்த்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டு ஊற விட வேண்டும்.

- Advertisement -

நன்கு ஊறி உலர்ந்ததும் ஈரத் துணியால் துடைத்து எடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முக சுருக்கங்கள் நீங்கி, முகம் ரொம்பவும் இளமையாக தெரியும். பப்பாளி பழத்தில் இருக்கும் என்சைம்கள் இறந்த செல்களை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளும். இதனுடன் சந்தனத்தை சேர்க்கும் போது முகம் குளிர்ச்சியாகவும், இளமையாகவும், சுருக்கங்கள் இல்லாமல் பளபளவென்று காட்சியளிக்கும். வாரம் இரண்டு முறை இதுபோல் செய்து வாருங்கள்.

முகத்திற்கு ஃபேஸ் பேக் மட்டும் போட்டுக் கொண்டால் போதாது. இளமையாக இருக்க வேண்டும் என்று உறுதியுடன் நினைப்பவர்கள் உடலையும் வலிமையாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும். தினமும் அரை மணி நேரம் ஆவது எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அப்படி மேற்கொள்ள முடியாதவர்கள் நடை பயிற்சி செய்யலாம். காலையில் அல்லது மாலை வேளையில் உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது, அரை மணி நேரம் எங்காவது வெளியில் வாக்கிங் சென்று வாருங்கள்.

- Advertisement -

வயதாகிவிட்டது நடக்க முடியவில்லை என்று அமர்ந்திருந்தால், இளமையுடன் இருக்க முடியாது. சமச்சீர் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை, மீன், தயிர், பால், காய்கறிகள், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள் போன்றவற்றை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பப்பாளி பழம், ப்ளூபெர்ரி, மாதுளை ஆகியவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்ள இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம். சர்க்கரை, அதிகம் எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விட்டு நார்ச்சத்து நிறைந்துள்ள காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
புடவை கட்டும் முறை

மேலும் குறைந்தது ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் ஆவது பருக வேண்டும். உடல் மட்டுமல்லாமல் மனமும் திடகாத்திரமாக இருக்க யோகா, தியானம் போன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அடிக்கடி சுத்தமான காற்றை வெளியில் சுவாசியுங்கள். வீட்டிற்குள்ளேயே இருந்து முடங்கி கிடந்தால் எப்படி இளமையுடன் இருக்க? இளமையை தக்க வைக்க சமச்சீர் உணவு,உடற்பயிற்சி, மன ஆரோக்கியம், சரும பராமரிப்பு ஆகிய அனைத்துமே ஒரு சேர கவனிப்புக்கு உள்ளடங்கியதாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றை தவிர்த்து நீங்கள் அலட்சியமாக இருந்தால், முதுமையை விரைவில் சந்திப்பீர்கள்! என்பதை மனதில் கொண்டு, உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமையுங்கள் இளமையை கொண்டாடுங்கள்.

- Advertisement -