- Advertisement -
சமையல் குறிப்புகள்

வேலை குறைவாகவும் அதிக செலவு இல்லாமலும் செய்யக்கூடிய இந்த ஸ்வீட் ரெசிபியை தீபாவளிக்கு சுலபமாக உங்கள் வீட்டில் செய்திடுங்கள்

- Advertisement -

தீபாவளி என்றாலே ஒவ்வொரு வீட்டிலும் என்ன இனிப்ப செய்ய வேண்டும் என்ற பேச்சுதான் அடிபடும். அவ்வாறு இனிப்பு சாப்பிட்டு கொண்டாடி மகிழ வேண்டிய ஒரு சிறப்பான நாள் தீபாவளி பண்டிகை. நரகாசுரனை அழித்து மக்கள் தங்களின் விடுதலை சுதந்திரத்தை மனமார கொண்டாடிய நாள் தீபாவளி திருநாள் ஆகும். எனவே அன்றைய நாள் செய்யக்கூடிய இனிப்புகள் எப்பொழுதையும் விட அதிக சுவை மிக்கதாக இருக்கும். எனவே ஒரு சிலருக்கு அதிக வேலைகள் இருக்கும் இனிப்பு வகைகளை செய்வதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கும். ஆனால் சமைக்கத் தெரியாதவர்கள் கூட இந்த ஸ்வீட் ரெசிபியை சுலபமாக செய்திடலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – 4 ஸ்பூன், முந்திரி – 10, பாதாம் பருப்பு – 10.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் பொட்டுக்கடலை, 10 முந்திரி மற்றும் 10 பாதாம் பருப்பு இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நல்ல பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு பேனை வைத்துக் கொள்ள வேண்டும்.

பேண நன்றாக சூடானதும் ஒரு கப் சர்க்கரையை அதில் சேர்த்து அதனுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் அடுப்பை சிறிய தீயில் வைத்து நன்றாக கலந்து விட்டு கொண்டே இருக்க வேண்டும் சிறிது நேரத்தில் இந்த கலவையை கரண்டியில் எடுத்து லேசாக தொட்டு பார்த்தால் ஒரு கம்பிப் பதம் வந்திருக்க வேண்டும் அந்த சமயத்தில் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு பொடி செய்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை சர்க்கரை பாகுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பொட்டுக்கடலை மாவு சர்க்கரைப் பாகுடன் நன்றாக கலந்ததும் மீண்டும் அடுப்பை பற்ற வைத்து சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கை விடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். இடையிடையே ஒவ்வொரு ஸ்பூன் நெய்யை சேர்த்து கிளற வேண்டும்.

இவ்வாறு நான்கு ஸ்பூன் நெய்யையும் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். மாவு சற்று கெட்டியாகி சுருண்டு வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் ஒரு தட்டில் லேசாக நெய் தடவி இந்த கலவையை அதில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். கொஞ்சம் வெது வெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது கத்தியை வைத்து நமக்கு தேவைப்பட்ட வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இவை நன்றாக ஆறியதும் இந்தப் பர்ஃபியை ஒரு டப்பாவில் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளலாம். மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். விருப்பப்படும் நேரத்தில் எல்லாம் எடுத்து சாப்பிட்டு மகிழலாம்.

- Advertisement -