- Advertisement -

ஒருவர் தன்னுடைய பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏதாவது ஒரு வேலையை செய்வார் அல்லது தொழிலை செய்வார். பண தேவை என்பது ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல பணத்தேவை என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும். அப்படி பணத்தேவை அதிகரித்துக் கொண்டே செல்லும் பொழுது அவர்கள் பெரும் வருமானமும் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

அப்படி வருமானம் அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் அந்த வருமானத்தை அதிகரிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி முயற்சிகளை மேற்கொண்டும் வருமானம் அதிகரிக்கவில்லை என்னும் பட்சத்தில் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு

கண்கண்ட கடவுளாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். முருகப்பெருமானுக்கு என்று அறுபடை வீடுகள் இருக்கிறது. ஆறுமுகங்கள் இருக்கிறது. இதில் கடைசி முகமான ஆறாவது முகத்தை யார் ஒருவர் மனதார நினைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கடன் தீர வேண்டும் என்றால் திருச்செந்தூர் செல்ல வேண்டும், திருமண வரம் வேண்டும் என்றால் திருப்பரங்குன்றம் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு அறுபடை வீட்டிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது. அப்படிப்பட்ட முருகப் பெருமானை நாம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படவோ, சம்பள உயர்வு பெறவோ எப்படி வழிபட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

எந்த ஒரு முருகன் ஆலயத்திற்கு செல்வதாக இருந்தாலும் அந்த முருகனுக்கு பரிவட்டம் கட்டுவதற்கு துண்டு வாங்கி கொடுக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அவருடைய கிரீடத்தில் பூ சுற்றுவதற்கு தேவையான அளவை தெரிந்து கொண்டு பூக்களை வாங்கி தர வேண்டும். அதாவது மலர்களால் அவருக்கு கிரீடம் செய்து தர வேண்டும். இப்படி தருவதன் மூலம் பதவி உயர்வு ஏற்படும்.

இதோடு மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை அன்று அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று அவருக்கு ஆறு தீபங்களை ஏற்றி வைத்து அவரை ஆறு முறை வலம் வந்து மனதார வழிபடுபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்க வேண்டும்.

- Advertisement -

அன்று மாலை முருகன் ஆலயத்திற்கு சென்று தீபமேற்றி அவரை வழிபடுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதோடு மட்டுமல்லாமல் ஏதாவது ஒரு ஆலயத்தை தேர்வு செய்து ஒரு மாதத்திற்கு முருகனுக்கு தேவைப்படுகின்ற மலர்களை வாங்கித் தரலாம் அல்லது ஒரு மாதத்திற்கு தினமும் மாலை வாங்கி கொடுப்பதும் மிகவும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தரும்.

இந்த வழிமுறைகளில் ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி தொழில் அல்லது வேலையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவதோடு வருமானத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: நோய்கள் தீர தானம் செய்யும் முறை

கலியுக தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானை முழுமனதுடன் நம்பி இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் செய்யும் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு வருமானமும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -