- Advertisement -

மேஷம்:
குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும். திருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். உடலாரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. தன வரவுகள் தாராளமாக இருக்கும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

உங்கள் மனம் கவர்ந்தவரோடு காதல் பொருத்தம் பார்க்க இதோ : Love calculator

- Advertisement -

ரிஷபம்:
நீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். பெண்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் அவர்களுக்குண்டான வாய்ப்பை பெறுவார்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில பெரிய மனிதர்களின் தொடர்பு நன்மையை தரும்.

மிதுனம்:
புதிய பணியிலிருப்பவர்கள் அந்த பணியிலே சில காலம் தொடர்வது நல்லது. வீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான வருவாயே இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் எதையும் சற்று அனுசரித்து செல்ல வேண்டும். உடல்நலக் குறைபாடுகளும் அவ்வப்போது ஏற்பட்டு விலகும்.

கடகம்:
உற்றார் உறவினரிடம் கருதுவேறுபாடுகள் மனஸ்தாபங்கள் உண்டாகலாம். குடும்ப பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். புதிதாக எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமதம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று மந்த நிலையை அடைவார்கள். பண வரவு செலவுகளில் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பெண்களுக்கு உடலாரோக்கியம் நன்றாக இருக்கும். தொலைதூரப் பயணங்களால் சிறிது உடல்நலக் கோளாறை சந்திக்கக்கூடும்.

சிம்மம்:
திருமணம் காலதாமதம் ஆனவர்களுக்கு திருமணம் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் கல்வியில் சாதனைகளைச் செய்யக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் எதிலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நலம். பணிபுரிபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவிஉயர்வுகள், ஊதிய உயர்வுகளைப் பெறுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வெளிநாடுகள் செல்லக்கூடிய சூழலும் உண்டாகும்.

கன்னி:
உங்களுக்கு வரவேண்டிய பண வரவுகளால் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். வாங்கிய கடன்களை முழுமையாக அடைப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். சமுதாயத்தால் மதிக்கப்படும் நிலை உண்டாகும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் ஒன்றிணைவார்கள்.

துலாம்:
உங்களின் தொழில் வியாபார போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர பேறு கிட்டும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று தள்ளி வைப்பது நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

விருச்சகம்:
உடலாரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். பிறருக்கு பணம் கடன் கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்படும் தொழில் மற்றும் வியாபாரங்கள் நல்ல நிலையில் இருக்கும். எந்த ஒரு விடயமும் சற்று தாமதத்திற்கு பின்பே நிறைவேறும். மாணவர்கள் கவனமாக கல்வி கற்க வேண்டும்.

தனுசு:
அரசிலியலிலிருப்பவர்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். உங்களுக்கு எல்லாவற்றிலும் இதுவரை இருந்த தடைகளும், தாமதங்களும் நீங்கும். அவ்வப்போது சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் வட்டியுடன் வந்து சேரும். ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய அமைப்பும் ஏற்படும்.

மகரம்:
உங்களுக்கு உடலில் உஷ்ண சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படலாம். வீட்டில் உள்ள பெண்களின் உடல் நிலை சற்று பாதிப்படையும். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தடை ஏற்படாமல் வெற்றி பெறும். புதிய வீடு வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவீர்கள். புனித யாத்திரையை சிலர் மேற்கொள்வீர்கள். திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

கும்பம்:
மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். உறவினர்கள் மற்றும் வெளியாட்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில்களில் நல்ல லாபம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்படும்.

மீனம்:
கலைஞர்கள் நல்ல செல்வத்தையும், புகழையும் ஈட்டுவார்கள். அரசியல்வாதிகள் மக்கள் செல்வாக்கை பெறுவார்கள். சிலருக்கு மிகப்பெரும் லாபம் அவர்களின் தொழில் வியாபாரங்களில் கிடைக்கும். உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே மதிப்பு ஏற்படும். கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்ப்பீர்கள்.

தின பலன், வார ராசி பலன், மாத ராசி பலன், திருமண பொருத்தம், பெயர் பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have July month Rasi palan in Tamil. This is basically an astrological prediction for all zodiac signs. This July month Rasi palangal covers Mesham to Meenam Rasi and you will definitely feel the accuracy in the prediction.

- Advertisement -