- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

- Advertisement -

பாடாகப்படுத்தி எடுக்கும் கடன் சுமையிலிருந்து வெளிவர தானே வாழ்க்கையில் இத்தனை பெரிய போராட்டம் நடக்கிறது. அந்த கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், இந்த நாளை யாரும் தவறவே விடக்கூடாது. நாளை 16-02-2025  ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி திதி. இன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால் கடன் சுமையிலிருந்து நிரந்தரமாக வெளிவரலாம்.

ஆனால், மேலும் மேலும் கடன் வாங்கி கொண்டே, ஆடம்பர செலவு அதிகரித்துக் கொண்டே இருந்தால், கடன் சுமை குறையாது. கடன் வாங்கவே கூடாது. வருமானத்திற்கு தகுந்தபடி செலவு செய்ய வேண்டும். சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்து, இந்த பரிகாரத்தை செய்யுங்கள். வாங்கிய கடனை திருப்பி அடைக்கும் வரை புது கடன் வாங்க கூடாது என்று ஒரு சபதத்தையும் இன்றோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சரி நாளைய தினம் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது. எந்த ஒரு பொருளை விநாயகர் கோவிலில் நின்று தலையை சுற்றி போடுவது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

இந்த கடன் சுமையை நமக்கு கொடுத்து நம்மை கேளிக்கை செய்து பார்க்கக்கூடிய வேலை யாருக்கு தெரியுமா. இந்த கேது கிரகத்துக்கு தான் இருக்கிறது. கேது நமக்குத் தரும் கடன் துன்பத்திலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால், ஆணை முகத்தானை, ஐந்து கரத்தனை நாம் வழிபாடு செய்ய வேண்டும். இந்த விநாயகரை சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்தால், சங்கடங்கள் தீரும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த சங்கடஹர சதுர்தியில், விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். ஒரு கைப்பிடி கொள்ளு தானியத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். கொள்ளு கேதுக்கு உரிய தானியம். விநாயகரை மனமுருகி வேண்டி இன்றோடு என்னுடைய கடன் சுமையெல்லாம் என்னை விட்டு விலக வேண்டும், மீண்டும் மீண்டும் நான் கடன் வாங்கி இந்த தவறை செய்ய மாட்டேன்.

இந்த கடன் சுமையிலிருந்து மட்டும் என்னை காப்பாற்று என்று மனம் உருகி வேண்டி கையில் இருக்கும் ஒரு பிடி கொள்ளை தலையை மூன்று முறை இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாக சுற்றி, அந்த கொள்ளை விநாயகர் கோவிலிலேயே தூவி விட்டு வர வேண்டும்.

- Advertisement -

அந்த விநாயகர் கோவிலில் மரம் செடி கொடிகள் இருந்தால், அந்த இடத்தில் தூவி விடுங்கள். காக்கை குருவிகள் வந்து அந்த கொள்ளை சாப்பிட்டு விடும். இவ்வளவுதான் பரிகாரமே. அரசமரத்தடி பிள்ளையார் இருந்தால் இன்னும் சிறப்பு. அந்த பிள்ளையாரிடம் சென்று அரச மரத்தை 27 முறை வளம் வந்து, இந்த கொள்ளை உங்கள் தலையை சுற்றி அந்த அரச மரத்தைச் சுற்றி தூவி விட்டு வந்து விடுங்கள். உங்களுடைய கடன் சுமை வெகு சீக்கிரத்தில் அடைந்துவிடும்.

கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பதிவு ஒரு வரம். விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். விநாயகருக்கு விளக்கு போடுங்கள். பரிகாரத்தை செய்யுங்கள் ஒரு சிதறு தேங்காயை உடையுங்கள். நேராக வீடு திரும்புங்கள். இவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே: சனி பகவானால் வரும் தாக்கத்திலிருந்து தப்பிக்க பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிடாமல் என்னால் வாழவே முடியாது என்றெல்லாம் சொல்லக்கூடாது. காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளாவது இந்த பரிகாரத்தை செய்துவிட்டு, பின்பு உங்கள் வாழ்க்கை வழக்கத்தை தொடருங்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -
Published by