- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனி பகவானால் வரும் தாக்கத்திலிருந்து தப்பிக்க பரிகாரம்

சனி பகவானால் வரும் தாக்கத்திலிருந்து தப்பிக்க பரிகாரம்

- Advertisement -

அவரவர் செய்த கர்ம வினைக்கு ஏற்பவாறு ஏழரை சனி காலத்தில் கட்டாயமாக துன்பங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். நீங்கள் நல்ல கர்மாக்களை செய்திருந்தால், ஏழரை சனி காலத்தில் ராஜாவைப் போல வாழலாம். கெட்ட கர்மாக்களை செய்திருந்தால் ஏழரை சனி காலத்தில் பிச்சை எடுக்கும் அளவிற்கு கூட உங்களுடைய வாழ்க்கை தலைகீழாக மாறும் என்பது ஜோதிடர்களின் கருத்து. அதற்காக யாரும் பயந்து விட வேண்டாம்.

சந்தோஷமாக நல்ல நேரத்தில், வாழும் நாட்களில், அடுத்தவர்களுக்கு நன்மையே செய்யுங்கள். கெடுதல் நினைக்காதீர்கள். ஏழரை சனி வரும்போது உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்சமயம் உங்களுக்கு ஏழரை சனி காலம் நடந்து கொண்டிருக்கிறதா. உங்களுக்கு தீராத துன்பங்கள் பின் தொடர்கிறதா. இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆன்மீகம் சார்ந்த சில பரிகாரங்களை பின்பற்றி பாருங்கள் நிச்சயமாக சனிபகவானால் வரக்கூடிய துன்பங்கள் விலகிவிடும். சனிபகவான் என்ற நாமத்தை உங்கள் காதால் கேட்டால் “சிவ சிவ” என்ற வார்த்தையை இரண்டு முறை சொல்லி விடுங்கள் நல்லது

- Advertisement -

சனி பகவான் பரிகாரம்

சனிக்கிழமை காலையில் எழுந்து முதலில் சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். பிறகு வழக்கம் போல சமைத்து விடுங்கள். சமைத்த உணவில் இருந்து சிறிது வெள்ளை சாதத்தை மட்டும் எச்சில் படாமல் எடுத்து வைத்துவிட்டு, அதில் சிறிதளவு உப்பு, சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து காகத்திற்கு உணவாக வைக்க வேண்டும். சனிக்கிழமை தயிர் சாதத்தை காகத்திற்கு வைத்துவிட்டு பிறகு சாப்பிடுவது ரொம்பவும் நல்லது. தாளித்த தயிர் சாதத்தை காகத்திற்கு வைக்கக் கூடாது. உப்பு போட்ட வெள்ளை நிற, வெறும் தயிர் சாதத்தை மட்டும் காகத்திற்கு வைக்க வேண்டும்.

சனிக்கிழமை சிவன் கோவிலுக்கு நல்லெண்ணெய் தானம் செய்ய வேண்டும். சிவன் ஆலயங்களில், நவகிரகங்கள் இருக்கும். அந்த நவகிரகங்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்தாலும் சரி, அல்லது சிவபெருமானுக்கே நல்லெண்ணெய் தானம் செய்தாலும் சரி, அது உங்களுடைய விருப்பம். சனிக்கிழமை நல்லெண்ணெய் வாங்கி தானம் கொடுத்தால் ஏழரை சனி காலத்தில் நல்லது நடக்கும்.

- Advertisement -

ஏழரை சனி காலத்தில், சனிக்கிழமை கருப்பு உளுந்தால் செய்யப்பட்ட உணவை நாம் சாப்பிடுவதும் நல்லது. அதேசமயம் கருப்பு உளுந்தால் செய்யப்பட்ட பொருட்களை தானமாக கொடுக்கலாம். கருப்பு உளுந்தையே வாங்கி ஒரு பிராமினருக்கு தானமாக கொடுப்பதும் நல்லது.

ஒரு சின்ன கப்பில் கொஞ்சமாக தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் அளவு கருப்பு உளுந்து போட்டு, நன்றாக ஊற வைத்து விடுங்கள். ஒரு மணி நேரம் ஊறினாலும் போதும். நன்றாக ஊறிய பிறகு இதை அப்படியே எடுத்து உங்களுடைய தலையை 9 முறை சுற்றி உங்களுடைய வீட்டிற்கு வெளிப்பக்கத்தில் ஏதாவது ஒரு மரத்தடியில் கொண்டு போய் வைத்து விட்டு வர வேண்டும்.

- Advertisement -

இப்படி மாதத்தில் ஒரு நாள், ஒரே ஒரு சனிக்கிழமை மட்டும் தயிரில் ஊற வைத்த கருப்பு உளுந்தை உங்கள் தலையை சுற்றி போட்டால் சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் அதிவிரைவாக குறையும் என்பதும் பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. சனிக்கிழமை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ரொம்ப கஷ்டத்தில் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தையும் செய்து பலன் அடையலாம்.

ஏழரை சனி காலத்தில் சில பேர் ரொம்பவும் வாட்டமாக இருப்பார்கள். முகத்தில் ஒரு தெளிவே இருக்காது. தேவையற்ற உடல் உபாதைகளும் வரும். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள்ளு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் சிறப்பாக பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: தடைகள் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட பரிகாரம்

மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் விட ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு விஷயம். ஊனமுற்றவர்களுக்கு இயலாதவர்களுக்கு முதியவர்களுக்கு உதவி செய்வது. நீங்கள் செய்யும் தான தர்மம் உங்களை சனி பகவானிடம் இருந்து பத்திரமாக காப்பாற்றி கொடுக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்