- Advertisement -

கடன் அடைய சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நம்முடைய சங்கடங்களை தீர்க்கக் கூடிய வழிபாடு எனில் அது விநாயகர் வழிபாடு தான் ஆகையால் தான் இந்த வழிபாட்டிற்கு பெயரின் சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்று உள்ளது சங்கடம் என்றால் அது பல வகையில் நமக்கு உண்டு அதில் முக்கியமானதாக கருதப்படுவது பண பிரச்சனை தான் அதிலும் இந்த கடன் முதலிடத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை. அப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனை தீர விநாயகரை சங்கடஹர சதுர்த்தி நாளில் எப்படி வழிபட வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கடன் தீர சங்கடஹர சதுர்த்தி

இந்த சங்கடஹர சதுர்த்தியானது இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து முப்பது மணிக்கு மேல் வழிபாடு செய்வது சிறந்தது. அதே போல் இந்த வழிபாட்டை நாம் வீட்டில் செய்யலாம் ஆலயம் சென்று தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த வழிபாட்டிற்கு அருகம்புல்லும், தும்பை பூவும் மிகவும் அவசியம். இந்த இரண்டை மட்டும் கடைகளிலோ அல்லது கால் படாத சுத்தமான இடத்தில் இருந்தோ எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூக்களை சூடி வழிபாட்டிற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள். விநாயகர் படத்திற்கு முன்பாக தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். விநாயகருக்கு இந்த தீபம் மிகவும் உகந்தது. அடுத்தது நெய்வேதியமாக உங்களால் முடிந்த ஏதேனும் ஒன்று வையுங்கள் முடியாதவர்கள் ஒரு துண்டு வெல்லக் கட்டியை வைத்தாலும் போதும்.

இப்பொழுது விநாயகருக்கு முன்பாக அமர்ந்து கொண்டு விநாயகர் ருண விமோசன ஸ்லோகம் படிக்க வேண்டும். இது நெட்டில் போட்டால் கிடைக்கும் அல்லது youtube-யிலும் இருக்கும். இதை படிக்க முடிந்தவர்கள் கட்டாயமாக படியுங்கள் முடியாதவர்கள் மட்டும் youtube கேளுங்கள். இந்த வழிபாடு முடிந்த பிறகு நீங்கள் நைவேத்தியத்தை பகிர்ந்து உண்ணுங்கள். இன்று தொடங்கக் கூடிய இந்த வழிபாட்டை 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை இப்படி வழிபாடு செய்து உங்களின் மொத்த கடனும் அடைய வழி தேடி கொள்ளுங்கள். இந்த வழிபாடு செய்யும் 48 நாட்களும் அசைவத்தை மட்டும் தவிர்த்தால் போதும் வேறு எந்த விதிமுறைகளும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறை

விநாயகரை இப்படி எளிமையான முறையில் வழிபட்டு நம்முடைய தீராத கடன்களை தீர்த்து நிம்மதியாக வாழலாம். இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -