- Advertisement -

கடன் தீர்வதற்குரிய பண வரவு உண்டாக பஞ்சமி பரிகாரம்

- Advertisement -

பஞ்சமி திதிக்கு உகந்த தெய்வமாக கருதப்படுபவள் வாராஹி அம்மன். பலரும் பஞ்சமி திதி வரக்கூடிய நாளன்று வாராகி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வாராஹி அம்மனுக்குரிய பஞ்சமி தினத்தில் மஞ்சளையும் மிளகையும் வைத்து எப்படி பரிகாரம் செய்தால் கடன் தீரும் பணம் அதிக அளவில் வந்து சேரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண வரவு உண்டாக பஞ்சமி பரிகாரம்

எந்த ஒரு தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கென்று சிறப்பு வாய்ந்த ஒரு நாள் இருக்கும். அந்த நாளில் அந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். அந்த வகையில் வாராகி அம்மனுக்குரிய நாளாக கருதப்படுவது தான் பஞ்சமி நாள். அந்த நாளில் வாராகி அம்மனை நினைத்து வழிபாடு செய்வதோடு இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யும் பொழுது நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய பணவரவு உண்டாகும்.

- Advertisement -

பங்குனி மாதத்தின் தேய்பிறை பஞ்சமி என்பது மார்ச் மாதம் 18ஆம் தேதி இரவு 8:40 மணிக்கு தொடங்கி மார்ச் மாதம் 19ஆம் தேதி இரவு 10:40 மணி வரை இருக்கிறது. பகல் முழுதும் இருக்க கூடிய பஞ்சமி திதி என்பது மார்ச் மாதம் 19ஆம் தேதி புதன்கிழமை வருவதால் அன்றைய தினத்தில் நாம் பஞ்சமி திதிக்குரிய வழிபாட்டையும் பரிகாரத்தையும் செய்யலாம். அந்த வகையில் மார்ச் மாதம் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் இந்த ஒரு பரிகாரத்தை செய்ய வேண்டும்.

பலரும் தங்களுடைய இல்லத்தில் வாராஹி அம்மனின் படத்தை அல்லது சிலையை வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வழக்கத்தைப் போலவே பஞ்சமி திதி தினத்தன்று வழிபாட்டை செய்து கொள்ளுங்கள். ஒரு சிலர் தங்கள் வீட்டில் வாராஹி அம்மனின் படம் அல்லது சிலையில்லாமல் வெறும் தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்டவர்களும் அவர்களுடைய வழக்கத்தை போலவே வழிபாட்டை செய்து கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டோடு சேர்த்து இந்த ஒரு பரிகாரத்தையும் செய்தால் போதும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு மஞ்சள் தூள் மற்றும் மிளகு இருந்தால் போதும். மஞ்சள் என்பது வாராகி அம்மனுக்கு மிகவும் உகந்த ஒரு மங்களகரமான பொருள். மிளகு என்பது நம்முடைய எதிரிகளையும் கஷ்டங்களையும் விலக்கக்கூடிய ஒரு பொருளாக திகழ்கிறது. இவை இரண்டையும் ஒன்றாக நாம் சேர்த்து வைக்கும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையான கடன் பிரச்சனை தீர்வதற்குரிய பணவரவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

ஒரு சிறிய கிண்ணம் அல்லது அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப மஞ்சள் தூள் போட்டுக் கொள்ளுங்கள். மஞ்சள் தூளுக்கும் மேலாக ஐந்து மிளகை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாராகி அம்மனின் மந்திரம் உங்களுக்கு எது தெரியுமோ அதை 108 முறை கூற வேண்டும். மந்திரம் எதுவும் தெரியாது என்பவர்கள் “ஓம் வாராஹிதாயே போற்றி” என்னும் மந்திரத்தை கூட கூறலாம். இப்படி கூறி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு, இந்த மஞ்சளும் மிளகும் அப்படியே வாராகி அம்மனுக்கு முன்பாகவே இருக்கட்டும்.

- Advertisement -

மறுநாள் அதாவது வியாழக்கிழமை அன்று அந்த மஞ்சளில் இருக்கக்கூடிய மிளகை எடுத்து எந்தெந்த இடத்தில் எல்லாம் பணத்தை வைப்பீர்களோ அந்தந்த இடத்தில் எல்லாம் ஒன்று என்ற வீதம் பேப்பரில் மடித்து வைத்துக் கொள்ளலாம். ஒரே இடத்தில் தான் பணத்தை வைப்பீர்கள் என்றால் ஐந்து மிளகையும் ஒரே பேப்பரில் மடித்து அப்படியே வைத்து விடலாம். மஞ்சளை தினமும் நெற்றியில் வைத்து வாராகி அம்மனை நினைத்து தினமும் நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த முறையில் பரிகாரம் செய்பவர்களுக்கு வாராகி அம்மனின் அருளால் அனைத்து விதமான சுப நிகழ்வுகளும் நடைபெறுவதோடு கடன் பிரச்சினை தீருவதற்குரிய பண வரவும் உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் பங்குனி தேய்பிறை பஞ்சமி வழிபாடு

வீட்டில் இருக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை வைத்து வாராகி அம்மனை நினைத்து பஞ்சமி திதி அன்று பரிகாரம் செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை தீர்வதற்குரிய பண வரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -