- Advertisement -
- Advertisement -

கடன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய ஒன்றாகி விட்டது. அது எவ்வளவு பெரிய கடனாக இருக்கிறது எவ்வளவு சிறிய கடனாக இருக்கிறது என்பது மட்டுமே வேறுபாடாக திகழ்கிறது. சாதாரண கூலி வேலை செய்பவராக இருந்தாலும் அவருக்கும் கடன் இருக்கத்தான் செய்கிறது. கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டக்கூடிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவருக்கும் கடன் இருக்கத்தான் செய்கிறது.

அந்த கடனை சமாளித்து அந்த கடனிலிருந்து வெளியே வருவது தான் இன்றைய காலத்தில் மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. அப்படி கடனிலிருந்து வெளியே வருவதற்கு இந்த ஆனி மாதத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான தான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கடன் காணாமல் போக செய்ய வேண்டிய தானம்

நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நம்முடைய வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நிர்ணயிக்கக் கூடிய கர்ம வினையை நாம் முதலில் சரி செய்ய வேண்டும். கஷ்டங்களை தரக்கூடிய கர்ம வினைகளை நாம் சரி செய்வதற்கு நம்மால் இயன்ற அளவிற்கு தான தர்மங்களை மேற்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இந்த ஆனி மாதத்தில் நாம் செய்யக்கூடிய தானமானது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் சுமையை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தானத்தை பற்றி தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

பொதுவாக கடன் கரைந்து போக வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்போம். அப்படி கரைந்து போகக்கூடிய தன்மை மிகுந்ததாக இருப்பது தான் கல்லுப்பு. இது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக திகழ்கிறது. இந்த கல்லுப்பு எந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் இருக்கிறதோ அந்த அளவிற்கு மகாலட்சுமியின் அருளும் நமக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த கல்லுப்பை வைத்து பல பரிகாரங்களையும் நாம் செய்வோம். கண் திருஷ்டி நீங்க, வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் விலக என்று பல வழிகளில் கல் உப்பை வைத்து பரிகாரம் செய்வோம். அதேபோல் கடன் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய கிரகமாக திகழ்வர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் கடன் பிரச்சனையிலிருந்து விரைவிலேயே நம்மால் வெளியில் வந்து விட முடியும்.

- Advertisement -

அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய கிழமையான செவ்வாய்க்கிழமை அன்று நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் அனைத்தும் காணாமல் போவதற்கு கல் உப்பை வாங்கி அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு தானமாக தரவேண்டும். குறைந்தது ஒரு பாக்கெட் கல் உப்பு ஆவது தானமாக தரவேண்டும்.

எவ்வளவு பெரிய கடன் சுமை இருந்தாலும் அதற்கேற்றார் போல் நாம் இந்த கல்லுப்பை வாங்கி பெண் தெய்வம் பிரதானமாக இருக்கும் எந்த கோவிலாக இருந்தாலும் அந்த கோவிலுக்கு செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் தானமாக தருவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக கரைந்து ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

இதையும் படிக்கலாமே: நன்மைகள் நடக்க குலதெய்வ வழிபாடு

இந்த எளிமையான கல் உப்பு தானத்தை நம்பிக்கை இருப்பவர்கள் விருப்பத்துடன் செய்து தங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தகவலை கூறி இந்த பதிவை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -