குலதெய்வத்திற்கென்று அற்புதமான சக்திகள் இருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கையில் எந்தவித நன்மைகளும் நடக்கவில்லை என்றால் அவருக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்க வில்லை என்றுதான் அர்த்தம். அவர் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்தை வழிபட்டால் மட்டுமே அவருக்கு நன்மைகள் நடைபெறும். அப்படி பல அற்புதமான சக்திகள் கொண்ட குலதெய்வத்தை நம் வீட்டிற்கு வரவழைத்து அதன் மூலம் நன்மைகள் நடைபெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
நன்மைகள் நடைபெற குலதெய்வ வழிபாடு
ஒவ்வொருவருக்கும் அவருக்கு என்று குலதெய்வம் கண்டிப்பாக இருக்கும். குலதெய்வம் தெரியாது என்பவர்களுக்கு இது விதிவிலக்கு என்றாலும் அவர்களுக்கும் கண்டிப்பான முறையில் குலதெய்வம் இருக்கும். தங்களுடைய முன்னோர்களிடம் இருந்து கேட்டு தெரிந்துகொண்டு அந்த வழிபாட்டை செய்வது என்பது சிறப்பு. யார் ஒருவர் தொடர்ச்சியாக குலதெய்வ வழிபாட்டை செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் ஏறு முகம் மட்டுமே இருக்கும்.
அதே போல் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் குலதெய்வத்தை வழிபட்டு விட்டு செய்தால் அந்த செயலில் வெற்றிகள் உண்டாகும். இப்படி பல விஷயங்களை நாம் கூறலாம். இதோடு மட்டுமல்லாமல் எந்த தெய்வத்தை நாம் வழிபட்டாலும் அவர்களின் அருளை நாம் பரிபூரணமாக பெற வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் குலதெய்வத்தின் அருள் நமக்கு வேண்டும். இவ்வளவு சிறப்பு மிகுந்த குலதெய்வத்தை நம்முடைய வீட்டில் எந்த முறையில் நாம் வைத்து வழிபட்டால் வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஒருவருடைய வீட்டு பூஜை அறையில் எந்த தெய்வத்தின் படம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் குலதெய்வத்தின் படம் என்பது கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். அதிலும் மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் குலதெய்வத்தின் படம் தான் இருப்பதிலேயே பெரியதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மத்திய பகுதியில் இருக்க வேண்டும். இந்த விஷயத்தை பலரும் பின்பற்றுவது இல்லை.
வீட்டில் பெருமாளின் படத்தை பெரியதாகவும் முருகப்பெருமானின் படத்தை பெரியதாகவும் மாட்டி வைத்திருப்பார்கள். ஆனால் குலதெய்வத்தின் படம் மிகவும் சிறிய அளவில் இருக்கும். அப்படி இல்லை என்றால் குலதெய்வ படமே இல்லாமல் இருக்கும். இப்படி இருக்கக் கூடாது. இப்படி குலதெய்வத்தின் படத்தை சிறியதாக வைத்திருந்தால் குலதெய்வத்தின் அருளையும் ஆசீர்வாதத்தையும் நம்மால் பெற முடியாது.
ஒரு சிலரின் குலதெய்வத்திற்கு புகைப்படம் இருக்காது. ஏன் உருவமே இருக்காது. அப்படிப்பட்டவர்கள் எந்த இடத்தில் குலதெய்வம் இருக்கிறது என்று வழிபாடு செய்கிறார்களோ அந்த இடத்தை ஒரு புகைப்படமாக எடுத்து பெரியதாக வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் குலதெய்வத்தின் பெயரை கூறியவாறு தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
இப்படி ஏற்றி வைத்து விட்ட பிறகு பலரும் எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று வேண்டுதலை வைப்பார்கள். அந்த மாதிரி வேண்டுதலை வைக்காமல் உங்களின் பரிபூரண ஆசீர்வாதம் எனக்கு வேண்டும் என்றுதான் நாம் குலதெய்வத்திடம் வேண்ட வேண்டும். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் நமக்கு கிடைத்து விட்டாலே நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.
இதையும் படிக்கலாமே: வளர்பிறை பிரதோஷ வழிபாடு
மிகவும் எளிமையான இந்த குலதெய்வ வழிபாட்டை அனைவரும் மேற்கொண்டு அவர்கள் வாழ்க்கையில் நன்மைகளை பெறலாம் என்று கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.