- Advertisement -

கடனை தீர்க்கும் சக்தி வாய்ந்த தோரண கணபதியை வீட்டில் இவ்வாறு வழிபட்டு பாருங்கள். கடன் அடைய நல்ல வழியை காட்டுவார்.

- Advertisement -

கடன் என்ற ஒன்று யாருடைய வாழ்க்கையிலும் வரக்கூடாது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் யாரும் இல்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் கடனை வாங்கிவிட்டு அதை அடைக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் இக்கட்டான சூழ்நிலையில் வாங்கும் கடனை திருப்பி அடிக்க முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியுடன் நாம் தோரண கணபதியை நம் வீட்டில் எவ்வாறு வழிபட்டால் கடன் விரைவில் அடையும் என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகரை, நாம் எவ்வளவோ விஷயங்களுக்காக வணங்குவோம். அவருக்கு பல பரிகாரங்களை நாம் மேற்கொள்வோம். அதிலும் கடனுக்காக நாம் விநாயகரை வணங்குகிறோம் என்றால் அதற்கு மிகவும் சிறப்பு மிகுந்தவராக திகழக் கூடியவர் தான் தோரண கணபதி. நாம் கோவிலுக்கு சென்று தான் வழிபட வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை. அவரை மனதார நினைத்து அவர் புகைப்படத்தை வீட்டில் வைத்து அவரை வழிபடலாம்.

- Advertisement -

தோரண கணபதியை நாம் வீட்டில் வைத்து வழிபடும் பொழுது நம்முடைய கடன் சுமைகள் அனைத்தையும் அவர் குறைத்து, நம்முடைய கடனை விரைவில் அடையச் செய்வார். தோரண கணபதி புகைப்படம் ஒன்றை வாங்கி நம் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, நம் வீட்டு பூஜை அறையில் தோரண கணபதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும்.

அவரின் புகைப்படத்திற்கு முன்பாக ஒரு அகல்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி புது திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். கடன் பிரச்சினை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் அது கடன் சுமையிலிருந்து நம்மை மீள செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு ஒரு வாழை இலையில் இரண்டு கைப்பிடி பச்சரிசி, 2 கைப்பிடி வெல்லம் வைத்து தோரண கணபதிக்கு மலர்களை சூட்டி வழிபட வேண்டும்.

- Advertisement -

இலையில் இருக்கும் பச்சரிசியையும், வெல்லத்தையும் பிள்ளையார் பிடிப்பது போல் மூன்று பிள்ளையார் ஆக பிடித்து வைத்துக்கொண்டு, “என்னுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும், ஐஸ்வர்யம் நிலைக்க வேண்டும், சகல சௌபாக்கியமும் கிடைக்க வேண்டும்” என்று தோரண கணபதியிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு “ஓம் தோரண கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை குறைந்தபட்சம் 3 முறையும் அதிகபட்சம் 108 முறையும் கூற வேண்டும். பூஜை முடிந்த பிறகு பிடித்து வைத்திருக்கும் அந்த பச்சரிசி வெல்ல பிள்ளையாரை எடுத்து பறவைகளுக்கு வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கோடிக் கடனும் காணாமல் போக நாளை ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மனை நினைத்து இந்த தீபத்தை வீட்டிலே ஏற்றி வழிபட்டாலே போதும்.

இவ்வாறு நாம் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தோரண கணபதியை வழிபடுவதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்குரிய வழிகளை அவர் நமக்கு காட்டுவார். விடா முயற்சியுடன் தோரண கணபதியையும் நாம் வழிபட்டு நம் கடன் சுமையிலிருந்து விரைவில் விடுபட்டு மகிழ்ச்சியுடனும், ஐஸ்வர்யத்துடனும் வாழலாம்.

- Advertisement -