
இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய சுமை என்ன என்றால், அது கடன் சுமை தான். வாங்கிய கடன் சுமையிலிருந்து சுலபமாக வெளிவர வேண்டும். இனிமேல் கடன் வாங்க கூடிய சூழ்நிலை உண்டாகக் கூடாது. கடன் இல்லாமல் வாழ இந்த பிரபஞ்சம் எனக்கும் ஒரு வழியை காட்டித் தர வேண்டும் என்ற நம்பி, அமாவாசை இரவு, அம்பாளின் மீது பாரத்தை போட்டு, இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள்.
உங்களுடைய கடன் சுமை தீர, ஏதாவது ஒரு வகையில் அந்த அன்னை ஒரு வழியை காட்டிக் கொடுப்பாள். அம்பாளை நினைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் வழிபாட்டு முறைகள் எதுவும் நமக்கு ஏமாற்றத்தை கொடுக்காது.
மிக மிக சுலபமாக வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே தான் இந்த பரிகாரத்தை செய்யப் போகின்றோம். கல்லுப்பு பரிகாரத்திற்கு மிகப்பெரிய பவர் உண்டு. அதிலும் அமாவாசை திதியில் செய்யக்கூடிய கல்லுப்பு பரிகாரத்தை, பற்றி சொல்லவே வேண்டாம். நூறு சதவிகிதம் பலனை கொடுக்கும். இந்த பரிகாரத்தை பற்றிய விரிவான தகவல் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் உங்களுக்காக.
குடும்பத் தலைவன் தலைவி, யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். திருமணமாகாதவர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கும் கடன் சுமை இருக்கிறது. நீங்களும் கைநீட்டி கடன் வாங்கி சிக்கலில் சிக்கி இருக்கிறீர்கள் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது.
வங்கியில் வாங்கிய வீட்டு லோன் பைக் லோன் இதுபோல ஏதேனும் லோன் திருப்பி அடைக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பு வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பரிகாரத்தை முடித்துவிட்டு நேராக வந்து தூங்குவது சிறப்பான பலனை கொடுக்கும்.
உங்கள் கை மூழ்கும் அளவுக்கு ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். வலது உள்ளங்கைகளில் கல் உப்பை வைத்து இருக்க மூடி கொள்ளுங்கள். அந்த கல்லுப்பு உங்கள் கையை லேசாக குத்தும் அளவிற்கு கையை இறுக்கமாக மூடி, என்னுடைய கடன் சுமை குறைய வேண்டும். அதற்கு நீ தான் ஒரு நல்ல வழியை காட்டித் தர வேண்டும் தாயே சக்தி தேவி என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து “ஓம் அபர்ணாய நமஹ” என்ற மந்திரத்தை சொல்லுங்கள்.
மந்திரம் கணக்கு வைத்துக் கொள்ளாமல் சொல்லுங்கள். ஐந்து நிமிடம் கையில் கல் உப்பு குத்தட்டும். வாயில் இந்த மந்திரமும் உச்சரிக்கட்டும். பிறகு உங்கள் முன்பு இருக்கும் பாத்திரத்தில், கையில் இருக்கும் கல் உப்பை கரைத்துக் கொண்டே “இந்த கல் உப்பு எப்படி தண்ணீரில் கரைகிறதோ அதேபோல என்னுடைய கடன் சுமையும் கறைய வேண்டும் என்று, அந்த கல்லுப்பை தண்ணீரில் கரைத்து விட்டு தண்ணீரை சிங்கில் கொட்டி விட்டு, நீங்கள் சென்று கை கால் முகம் கழுவிக்கொண்டு வந்து தூங்கி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: சித்திரை அமாவாசை இரவு கடன் தீர்க்கும் பரிகாரம்
எப்படியும் கடன் அடைந்து விடும் என்ற நம்பிக்கையோடு தூங்க செல்லுங்கள். நிச்சயம் கடன் தீர அம்பாள் ஒரு வழியை உங்களுக்கு காட்டி தருவாள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.