- Advertisement -

இன்று 8-7-2025 அதிசக்தி வாய்ந்த பிரதோஷ வழிபாடு

- Advertisement -

இன்றைய தினம் 8-7-2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து பிரதோஷமும் வந்திருக்கிறது. இதை ருண விமோசன பிரதோஷம் என்று சொல்லுவார்கள். ருணம் என்பது தீராத நோய் நொடிகளையும், தீராத கடனையும், தீராத துன்பத்தை கொடுக்கும் கஷ்டங்களை குறிக்கும். எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபட, நாளைய தினம் சிவன் கோவிலில் சொல்ல வேண்டிய மந்திரம், சிவன் கோவிலில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கடன் தீர்க்கும் சிவன் வழிபாடு

நாம் அனைவருக்கும் தெரியும். மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம். நாளை இந்த நேரத்தில் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். செல்லும்போது மிளகு போட்ட வெண்பொங்கல் பிரசாதமாக செய்து கொண்டு போங்க. வெண்பொங்கலங்களை செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு நெய்வேத்தியம் வைத்து, அந்த பிரதோஷ நேர பூஜை முடிந்தவுடன் அந்த பொங்கலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையால் பிரசாதமாக கொடுத்தால் கடன் சுமை குறையும்.

- Advertisement -

முடிந்தால் இந்த பொங்கலை ஏழை எளியவர்களுக்கு தானமாக கொடுப்பது இன்னும் அதிசிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும். நாளைய தினம் முடிந்தவர்கள் கட்டாயம் வெண் பொங்கல் தானம் கொடுக்க பாருங்க. கடன் சுமையிலிருந்து வெளிவர அந்த ஈசன் நல்லதொரு வழியை காண்பித்துக் கொடுப்பான் இது முதல் விஷயம்.

இரண்டாவதாக இந்த பிரதோஷ வேளையிலேயே சிவபெருமானுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே, நீங்கள் சிவபெருமான் கோவிலை 11 முறை வலம் வரவேண்டும். மனதிற்குள் உங்கள் கடன் சுமை தீர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு, பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கோயிலை 11 முறை வலம் வந்தால் எப்பேர்பட்ட கடனும் அடையும் என்பது நம்பிக்கை. அது என்ன மந்திரம்.

- Advertisement -

கடன் தீர்க்கும் சிவ மந்திரம்.

ஓம் சிங் வங் நமசிவாய !

இவ்வளவுதான். ஒரு வரி மந்திரம் தான். முடிந்தால் கையில் ஒரு வில்வ இலையை வைத்துக்கொண்டு, இரு கைகளையும் கூப்பி, இறைவனை வணங்கியபடியே கோவிலை 11 முறை வலம் வர வேண்டும். இரண்டு கைகளுக்கு நடுவே வில்வ இலை அப்படியே இருக்கட்டும். இந்த மந்திரத்தை உதடுகள் உச்சரிக்க, மனது முழுங்க, கண்கள் நிரம்ப ஈசன்தான் நினைவில் இருக்க வேண்டும். வேறு எந்த சிந்தனையும் உங்கள் மனதில் இருக்கக் கூடாது.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்பட

செவ்வாய்க்கிழமை மேல் சொன்ன இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால், நிச்சயமாக அடுத்த பிரதோஷ தினம் வருவதற்குள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். கடன் பிரச்சனை தீரும். குறைந்தபட்சம் 11 நாளில் உங்கள் பிரச்சனைக்கு ஏதாவது ஒரு வகையில் அந்த ஈசன் நல்லதொரு வழியை காண்பித்துக் கொடுப்பான் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -
Published by