
ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக திகழ்கிறது. இந்த கடன் பிரச்சினை வருவதற்கு மிகவும் முக்கிய காரணமாக திகழ்வது அவர்களுடைய வருமானம் பற்றாமல் இருப்பது தான். ஒருவருக்கு வருமான பற்றாக்குறை ஏற்பட்டு விட்டால் அவசர சூழ்நிலையில் அவரால் சமாளிக்க முடியாத பட்சத்தில் கண்டிப்பான முறையில் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களால் கடனை திருப்பி அடைக்கவும் சிரமப்படுவார்கள். வருமானத்தை அதிகரிப்பதற்கும் கடன் பிரச்சினை தீர்ப்பதற்கும் கால பைரவரை வழிபடும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்றால் நம் கால பைரவரை வழிபட வேண்டும். காலத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி இன்பகரமான வாழ்க்கையை அருளக்கூடிய தெய்வமாக தான் காலபைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட காலபைரவரை எந்த முறையில் நாம் வழிபட்டால் நம்முடைய வருமானம் அதிகரித்து அதன் மூலம் கடன் பிரச்சினை தீரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி போன்ற தினங்களில் செய்யலாம். அவ்வாறு இயலாத பட்சத்தில் அவர்களின் ஜென்ம நட்சத்திர நாளன்றும் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை கண்டிப்பான முறையில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயங்களில் இருக்கும் பைரவர் சன்னதியில் தான் செய்ய வேண்டும்.
பைரவர் சன்னதிக்கு முன்பாக ஒரு தலைவாழை இலையை விரித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு படி நெல்லை கொட்டி பரப்ப வேண்டும். அதற்கு மேல் மற்றொரு தலைவாழை இலையை விரித்து அதற்கு மேல் ஒரு படி பச்சரிசியை கொட்டி பரப்ப வேண்டும். பிறகு மஞ்சள் குங்குமம் நெய் இவை மூன்றையும் கலந்து அந்த பச்சரிசியின் மேல் தூவி விட வேண்டும். அடுத்ததாக ஐந்து வகை எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் நெய் இப்படி ஐந்து வகை எண்ணெய்களை எடுத்து அவை ஐந்தையும் கலக்காமல் தனித்தனியே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இந்த ஐந்து எண்ணெய்களிலும் சிறிது மிளகை நுனுக்கி போட வேண்டும். அதேபோல் மஞ்சள் தூளை கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
30 பழங்களை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த பழம் எந்த பழமாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த பழத்தின் மேல் சிறிது பள்ளம் செய்து அதற்குள் இந்த எண்ணையை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். ஒவ்வொரு எண்ணிலும் ஆறு விளக்குகள் என்ற வீதம் ஆறு பழங்களில் எண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
மொத்தம் 30 பழங்களில் ஐந்து எண்ணெய்களை பயன்படுத்தி ஆறு ஆறு விளக்குகளாக போட்டு அந்த பச்சரிசியை சுற்றி வைத்து தீபமேற்றி உங்களுடைய வருமானம் அதிகரிக்க வேண்டும், உங்களுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று மனதார காலபைரவர் இடம் வழிபாடு செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டத்தை தீர்க்கும் கல் உப்பு
முழு நம்பிக்கையுடன் காலபைரவரை இப்படி வழிபாடு செய்வதன் மூலம் பணவரவு அதிகரிப்பதற்குரிய வழிகளை கால பைரவர் காட்டுவார் அதனால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்