- Advertisement -

வீட்டை காக்கும் கடவுளின் அருளை பெற வழிபாடு

- Advertisement -

மார்கழி மாதம் நிறைவடைய போகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளாக தான் போகிப் பண்டிகை என்பது கொண்டாடப்படும். பலரும் போகிப் பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து வீட்டில் இருக்கக் கூடிய பழைய பொருட்கள் அனைத்தையும் எரித்து புதிதாக சில பொருட்களை வாங்கி வருவார்கள். மேலும் அன்றைய தினத்தில் காப்பு கட்டும் முறையும் இருக்கிறது. ஒவ்வொரு ஊர் வட்டாரங்களிலும் ஒவ்வொரு விதமாக போகி பண்டிகை என்பது கொண்டாடப்படுகிறது. எந்த ஊராக இருந்தாலும் இந்த போகி பண்டிகை அன்று இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்தார்கள் என்றால் அவர்கள் வீட்டை காக்கும் தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடவுளின் அருளை பெற வழிபாடு

நாம் சொந்த வீட்டில் இருந்தாலும், வாடகை வீட்டில் இருந்தாலும் அன்றாடம் நாம் தெய்வங்களை வணங்கத்தான் செய்கிறோம். இந்த தெய்வங்களை வணங்குவதற்கு காரணம் நம்முடைய கஷ்டகாலத்தில் இந்த தெய்வங்களின் அருள் நமக்கு கிடைக்கும் என்றும், அந்த கஷ்ட காலத்தில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும் என்றும், நம்மை அந்த தெய்வங்கள் காப்பாற்றுவார்கள் என்றும்தான். அப்படி நம்மை காப்பாற்றக்கூடிய தெய்வம் எந்த தெய்வமாக இருந்தாலும் குறிப்பாக குலதெய்வமாகவோ அல்லது இஷ்ட தெய்வமாகவோ இருக்கும் எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்று நினைப்பவர்களும், எந்த தெய்வம் என்று தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு தெய்வம் கண்டிப்பான முறையில் நம்மை காப்பாற்றுகிறது என்ற நம்பிக்கையில் இந்த வழிபாட்டை செய்தால் நம்மையும் நம் குடும்பத்தையும் காக்கும் கடவுளின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை போகிப் பண்டிகை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு தான் செய்ய வேண்டும். அதாவது மாலை 6 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நாம் பச்சரிசியை சாதமாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பச்சரிசி சாதத்தை ஒரு பாத்திரத்தில் முழுவதுமாக நிரப்பி அமுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஒரு வாழை இலையை விரித்துக் கொள்ளுங்கள். அந்த வாழை இலையில் நாம் அமுக்கி வைத்திருக்கும் பச்சரிசி சாதத்தை அப்படியே கொட்ட வேண்டும். அப்படி கொட்டும் பொழுது அந்த பாத்திரத்தின் அச்சுடன் பச்சரிசி சாதம் என்பது இலையில் விழும். அதை உடைத்து விடாமல் அந்த அச்சின் மேல் துள்ளுமாவை துவ வேண்டும்.

அதற்கு மேல் இரண்டு வாழைப்பழங்களை தோலுரித்து பிணைந்து மேலே வைக்க வேண்டும். அதற்கு மேல் மூன்று அச்சு வெல்லங்களை வைக்க வேண்டும். இவ்வாறு வைத்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி “எந்த தெய்வம் எங்களை இவ்வளவு நாள் வரை கஷ்டத்திலிருந்து காப்பாற்றியதோ அந்த தெய்வம் பரிபூரணமாக எங்கள் வீட்டில் வந்து குடியேற வேண்டும், நாங்கள் செய்த தவறுகள் அனைத்தையும் மன்னித்து இனிமேல் வரக்கூடிய கஷ்ட காலங்களிலும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும், எங்களை காத்த ரசிக்க வேண்டும்” என்று முழு மனதோடு வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்து முடித்த பிறகு இந்த நெய்வேத்தியத்தை பிணைந்து வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பிரசாதமாக உண்ண வேண்டும். போகி பண்டிகை அன்று பலவிதமான செயல்களில் நாம் ஈடுபடுவோம். அந்த செயல்களுடன் இந்த வழிபாட்டையும் நாம் செய்தோம் என்றால் நம்மை காக்கும் கடவுளின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:போகி அன்று வழிபாடு செய்ய வேண்டிய கடவுள்கள்

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தெய்வம் நம்முடைய கஷ்டகாலத்தில் துணையாக இருக்கும். அந்த தெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும், வீட்டில் குடியேற வைப்பதற்கும் செய்யக்கூடிய இந்த போகி பண்டிகை வழிபாட்டை அனைவரும் செய்து பலன் அடைவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -