- Advertisement -
தமிழ்

Kadi jokes in Tamil | கடி ஜோக்ஸ் 2023 | Mokka jokes

- Advertisement -

தமிழ் கடி ஜோக்ஸ் | Kadi jokes in Tamil

Kadi Jokes in Tamil: விலங்கில் இருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுவதே சிரிப்பு தான். அந்த சிரிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது ஜோக்ஸ். ஒரு மனிதன் சிரித்து சந்தோசமாக இருந்தால் அவன் ஆயுள் கூடும் என்று கூறுகிறது ஆய்வுகள். அப்படி மனிதனின் ஆயுளையே கூட்டக்கூடிய சக்தி நகைச்சுவைக்கு உண்டு என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இங்கு நாம் தமிழ் கடி ஜோக்ஸ் (kadi jokes in Tamil), மொக்க ஜோக்ஸ் இப்படி பலவிதமான தமிழ் ஜோக்ஸ் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Kadi Jokes in Tamil

கடி ஜோக்ஸ் தமிழில்விடை
தம்பி தீக்குச்சியை பத்த வெச்சு ஏன் இட்லி மேல வைச்சு பார்க்கிற?நீங்க தானே இட்லி "பஞ்சு" மாதிரி இருக்குன்னு சொன்னீங்க! அதான் தீப்பிடிக்குதானு பார்த்தேன்!
'பாடத்தைக் கவனிக்காமல் இருந்ததால உன்ன டீச்சர் அடிச்சாங்களே, அதை ஞாபகம் வச்சிருக்கியா?நான் அதை "அடி"யோடு மறந்துட்டேன்.
வரலாறு ஏன்டா உனக்கு பிடிக்காதுன்னு சொல்ற?சார் நான் "விஜய்"யோட ரசிகன்!
வெண்ண வியாபாரி லெட்டர் எப்படி எழுதுவாரு?"உருகி, உருகி" எழுதுவாரு!
கணக்குப் பரீட்சையில, கணக்குப் போடாமல் எதுக்குடா டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்க?நீங்கதான் சார் சொன்னீங்க "ஸ்டெப்ஸ்" க்கு மார்க் உண்டுன்னு.
என் ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு டாக்டர்!சுமார் எத்தனை "வீக்"கா அப்படி இருக்கு?
நெஞ்சைத் தொடும் ஒரு வார்த்தை சொல்லுபனியன்
திருவள்ளுவர் ஒரு மிமிக்கிரி ஆர்டிஸ்ட்னு எப்படி சொல்ற?1330 குரளு(ல்)க்கு சொந்தக்காரர் ஆச்சே! அதான்
குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கேட்டிருக்கிங்களா?நாம கேட்டா கொடுப்பாரா?
என் உடம்புல இரும்புச்சத்து இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு!அதனால தான் "துரும்பா" இளைச்சு போயிட்டியா?
பாட்டி! நான் ஓட்டப் பந்தயத்திற்கு போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க!நல்லா "மெதுவா" பார்த்து ஓடிட்டு வா கண்ணு!
கண் ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால சூரியனை வணங்க சொல்றீங்களே! ஏன் டாக்டர்?"கண்"கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாது இல்ல! அதுக்கு தான்!
டானிக் சாப்பிடும்போது ரூம் கதவை மூடி கிட்டு ஏன் சாப்பிடுற?டாக்டர் தான் அரை(றை) மூடி சாப்பிட சொன்னாரு!
ராமன் கடன் வாங்கினான். இது என்ன காலம் சொல்லு?அது ராமனோட கஷ்டகாலம் சார்
நீ ஏன் பரட்டைத் தலையோட இருக்க?"எண்ணெய்" சேர்க்கக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காரு!
உனக்கு காற்று அடிக்கும் போது கூட வியர்க்குமா! எப்படி?நான் சைக்கிளுக்கு காற்று அடிக்கும்போது வியர்த்துடிச்சு
எதுக்காக ஸ்கேல பக்கத்துல வச்சிக்கிட்டு சாப்பிடறாருடாக்டர், அவரை அளவோட சாப்பிட சொல்லி இருக்கிறாராம்.
ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற?எங்க அம்மாவுக்கு "வேகமா" படிக்க வராது. அதான்!
அந்தப் பையனை எங்க கூட்டிட்டு போறீங்க?சாணம் பிடிக்கிற கடைக்கு. அவன் புத்தி ரொம்ப "மழுங்கி"ப் போச்சாம்.
பாய், தலையணை வியாபாரம் ஆரம்பிச்சீங்கலே! எப்படி இருக்கு?சுத்தமா "படுத்துடுச்சு".

டாக்டரிடம், நான் டெய்லர் வேலை பார்க்கிறதா சொல்லி இருக்கக் கூடாது!
ஏன்? என்னாச்சு?
என்னோட பையனுக்கு ஆப்பரேஷன் முடிஞ்சதும், நீங்களே “தையல்”‘ போட்டுக்கோங்கனு சொல்லிட்டாரு.

- Advertisement -

50 ரூபா கடன் கிடைக்குமா?
சுத்தமா பணம் இல்லைங்க!
“அழுக்கா” இருந்தாலும் பரவாயில்லைங்க!

ஏன்டா மணி! பரீட்சையில் எல்லா பாடத்திலேயும் கம்மியா மார்க் எடுத்து இருக்க?
நீ தான அப்பா எல்லாத்துலையும் சிக்கனத்தை கடைபிடிக்கனும்னு சொன்ன. அதான் மா.

- Advertisement -

கடி ஜோக்ஸ் தமிழில்

கடி ஜோக்ஸ்விடை
என்னப்பா எக்ஸாமுக்கு பிளம்பரோட வந்திருக்க?கொஸ்டின் பேப்பர் "லீக்" ஆவதுனு சொன்னாங்க சார் அதான்.
என்னடா வாயிலையும், கால்லையும் காயம்"வாய்க்கால்"ல விழுந்துட்டேன்.
அந்த மிளகாய் வியாபாரி மட்டும் ஏன் மழையில் நனையலஏன்னா அவர் விற்பது குடை மிளகாய்
மகாத்மா காந்திக்கு பிடித்த கிரகம் எது தெரியுமா?சத்தியா"கிரகம்" தான்.
நேத்து சபாபதி கச்சேரி எப்படி இருந்தது?கச்சேரி ஆரம்பிச்சதும் "சபா பாதி"யா ஆயிடுச்சு.
அவர் எந்த நேரமும் எல்லோரையும் திட்டிகிட்டே இருக்காரு. ஏன்?அட அவரு தாங்க "திட்ட" அலுவலர்
வெளியில மழை பெஞ்சா நீ ஏன் கையில் தாயத்து கட்டி இருக்க?"பேய்" மழையா இருக்கே அதான்.
டேய் பனியில் நிக்காதடா! சளி பிடிக்கும்.நான் பனியில நிக்கல டா! காலில் தான் நிற்கிறேன்.
நான் நாளை வெளியூர் செல்கிறேன். இது என்ன காலம்?இது எங்களுக்கு நல்ல காலம், சார்!
எதிரி நாட்டு அரசனை எப்படி பின்வாங்கச் செய்தீர்கள்குறவன், குறத்தியை அனுப்பி தான் "பின்" வாங்க வெச்சோம்.

கடி ஜோக்ஸ் தமிழ்:

“டாக்டர்! என் மகன், சாமி டாலரை முழுங்கிட்டான். எப்படியாச்சும் எடுத்து விடுங்களேன்”!
இப்போ டாலருக்கு மதிப்பு ரொம்ப கொறஞ்சிடுச்சி எங்க இருந்து எடுத்தாலும் நஷ்டம்தான். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நிலைமை சரியானதுக்கு அப்புறம் எடுத்துக்கலாம், லாபம் அதிகமாக கிடைக்கும்.

நீ வாழைப்பழம் திருடுறதை உங்க அப்பா பார்த்துட்டாரே. அப்புறம் என்ன செஞ்சாரு?
வீட்டுக்கு வந்து “தோலை” உரிச்சிட்டாரு.

- Advertisement -

எதுக்குமா குழந்தைக்கு சாப்பாட்டில் ஷாம்பூவை கலந்து கொடுத்த?
ஷாம்பூல புரோட்டின் அதிகம் இருக்கிறதா டி.வி விளம்பரத்தில சொன்னாங்க, டாக்டர். அதனால கொடுத்தேன்.

பில்கேட்ஸ் கிட்ட போய் உட்கார் என்று சொன்னா, அவர் உட்கார மாட்டாரு!
ஏன் தெரியுமா?
தெரியலையே!
ஏன்னா, அவருக்கு தமிழ் தெரியாதுல்ல!

புத்தி இல்லாமல் வியாபாரம் செஞ்சதால வியாபாரத்துல லாபம் கிடைக்கல
அப்படி என்ன வியாபாரம் செஞ்ச?
எனக்கு கை கொஞ்சம் நீளம்னு உனக்கே தெரியும். ஆனாலும் புத்தி இல்லாம “பூ வியாபாரம்” செஞ்சு தொலைச்சிட்டேன்.

கடி ஜோக்ஸ் கேள்வி: பாம்பிற்கும், ஷாம்பிற்க்கும் என்ன வித்தியாசம்?
“ஷாம்புவ நம்ம போட்டா தலையில் நுரை வரும். பாம்பு நம்பள போட்டா வாயில நுரை வரும்.”

மன்னா! நம் இளவரசருக்கு புலிகேசி என்று பெயர் வைத்தது பற்றி மக்கள் கிண்டல் பண்ணுகிறார்கள்!
உண்மையாகவா?
ஆம் மன்னா! எலிக்கு பிறந்தது புலியாகுமா என கேட்கிறார்கள் மன்னா!

மொக்க ஜோக்: எதுக்கு பஸ் ஸ்டாண்ட்ல நின்னுகிட்டு மேலேயே பார்த்துகிட்டு இருக்க?
மதுரை பஸ் நாலு மணிக்கு “மேல” வரும்னு சொன்னாங்க, அதுதான்!

கடி ஜோக்ஸ் கேள்வி – Kadi jokes in Tamil with answers

ஏண்டா! கணக்குப் பாடத்துல சைபர் எடுத்து இருக்க?

சார் நீங்க தானே சொன்னீங்க! கணக்கில் “சைபருக்கு” தான் அதிக மதிப்புனு!. அதனால தான் சார் நான் சைபர் மார்க் வாங்கியிருக்கேன்.

Kadi jokes in Tamil: ஏன் எப்ப பார்த்தாலும் இவன் வாயில் மை தடவிக்கிட்டு திரிகிறான்?

எப்பவுமே “வாய் மை” யோடு இருக்கணும்னு, அவங்க வாத்தியார் சொன்னாராம்.. அது தான்.

இதெல்லாம் முக்கிய கேள்வினு உனக்கு யாருடா சொன்னது? எல்லாம் ரொம்ப சுலபமான கேள்வியால்ல இருக்கு?

பதில் தெரியாமல் நான் “முக்கிய” கேள்விகள்னு சொன்னேன்.

உங்க பையன் எந்த கேள்வி கேட்டாலும் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிடுறான்?

எப்படி?

“தெரியாது”ன்னு.

Mokka jokes in Tamil: மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்தது யார்?

“போலீசார்”. எங்க அப்பா தொலைச்ச மோட்டார் சைக்கிளை போலீஸ் தான் கண்டுபிடிச்சி கொடுத்தாங்க சார்.

தமிழ் ஜோக்ஸ் – kadi jokes in Tamil

உங்க மகன் எந்த பாடத்திலும் நூற்றுக்கு முப்பது மார்க் கூட எடுக்கல!

அவன் எதிலேயும் “பேராசை”யெல்லாம் பட மாட்டான். சார்!

கடி ஜோக்ஸ் இன் தமிழ்: ஸ்கூல் வாத்தியார் வீட்டுக்கு ஓசி பேப்பர் படிக்க போனது, தப்பாப் போச்சு!

ஏன்?

படிச்ச நியூஸ் மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதி காண்பிக்க சொல்றாரே!

ஏண்டா! நான் சொன்ன பாடத்தை எழுதிக்கிட்டு வரல?

நீங்க தானே சார் நேத்து பாடம் நடத்தும் போது, யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிடாதீங்க, யோசிச்சு செய்யுங்கன்னு சொன்னீங்க!

கணக்கு புத்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா?

தெரியலையே!

ஏன்னா! அதுக்கு நிறைய “பிராப்ளம்ஸ்” இருக்கு இல்ல, அதனால தான்.

டாக்டர்! போன தடவை நீங்க கொடுத்த மருந்துக்கு 700 ரூபாய் செலவாயிடுச்சு. இந்த தடவை குறைச்சலா கொடுங்க

ஐயையோ! போன தடவை நான் மருந்தே தரலையே! பேனா எழுதுதான்னு கிறுக்கி பார்த்த சீட்டை எடுத்துட்டு போயிட்டியா?

Tamil Kadi Jokes – தமிழ் ஜோக்ஸ்

கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தாங்க!

அப்படியா ரொம்ப சந்தோஷம், சார்.

நீங்க வேற பெல் அடிச்சதும் அவன்தான் வகுப்பிலிருந்து முதலில் வெளியே வருவான்.

Tamil kadi jokes: அரசர் என்ன வேல் கம்பை கொண்டு பல் துலக்குகிறார்

ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி என்பதை தவறாக புரிந்து கொண்டார் போலும் நம் அரசர்.

என்ன டாக்டர்! கண் தெரியலங்கிறேன், மூக்கு கண்ணாடிக்கு பதிலாக, முகம் பார்க்கும் கண்ணாடிய கொடுக்குறீங்க?

இதுல பாருங்க, உங்க “கண்” தெரியும்.

Tamil mokka jokes: பள்ளிக்கூட விழாவுல நீ பிச்சைக்காரன் வேஷம் போட்டு நடித்ததற்கு உனக்கு பரிசு கொடுத்தாங்கன்னு சொன்னியே! என்ன பரிசு கொடுத்தாங்க?

ஒரு தட்டு!

Mokka Kadi jokes in Tamil

“மூணு மணி நேரமா ஒரு குச்சியை புடிச்சுகிட்டு கொஞ்சம் கூட அசராம டான்ஸ் ஆடினேன், பாத்தீங்களா?

பார்த்தேன். அதுக்காக இதுக்கெல்லாம் “குச்சி”புடி நடனம்னு பரிசு கொடுக்க முடியாது.

Mokka jokes in Tamil: கலாச்சார விழாவில் வில்லுப்பாட்டு கச்சேரி நடத்த கூடாதென்று மன்னர் பிடிவாதமாக இருக்கிறார்.

ஏன்?

வில்லை பார்த்தாலே மன்னருக்கு பயம் வந்துவிடுகிறது.

நான் கோபம் வந்தா மட்டும் கண்ணாடி போட்டுப்பேன்

ஏன்?

கோபம் “கண்ணை” மறைக்குமே!

தூங்கும்போது கையில ஸ்கேல் எதுக்கு?

டாக்டர் தான் “அளவோடு” தூங்கச் சொன்னார்.

கடி ஜோக்ஸ் – Kadi Jokes Tamil

எங்க சித்தப்பா தனியா இருக்கும்போது கூட “கால் மேல் கால்” போட மாட்டார். ஏன் தெரியுமா?

ஏன்?

டெலிபோன் சார்ஜ் அதிகம் ஆகிடுமே அதனால தான்.

தமிழ் ஜோக்ஸ்: ஒரு ஊர்ல, ஒரு வயசான பாட்டி இருந்தாங்க!

மாணவன்: பொய் சொல்லாதீங்க சார்! எந்த ஊர்லயும் “ஒரு” வயசு பாட்டி இருக்கவே மாட்டாங்க.

என்ன சார் சம்பளம் கேட்டா பலாப்பழம் தர்றீங்க?

அதான் அப்பவே சொன்னேனே சம்பளம் “சுளையா” தருவோம்னு.

காலத்துக்குத் தகுந்த மாதிரி நம்ம மன்னரும் மாறி விட்டாரே!

எப்படி?

வருகிறவர்களிடம் எல்லாம் புகழ்ந்து பாட வேண்டாம். “பஞ்ச் டயலாக்” மட்டும் சொன்னால் போதும் ன்னு சொல்லிட்டாரு.

சிறந்த கடி ஜோக்ஸ் – Mokka Kadi Jokes in Tamil

போக போக இந்த உலகத்துல அறிவே இல்லாம போய்டும் போல

என்னடா உளர்ற?

நம்ம வாத்தியாரு, நம்ம கிட்ட உலக அறிவைப் பெருக்கணும், உலக அறிவைப் பெருக்கணும் னு சொல்லிக்கிட்டே இருக்காரு. எல்லாத்தையும் பெருக்கு தள்ளிட்டா அப்பறம் எப்படி அறிவு இருக்கும்.

என்னை நாய் கடிச்சுடுச்சு டாக்டர்!

எங்க கடிச்சுது?

பெருமாள் கோயில் சந்துல!

தம்பி, உன் வயசு என்ன?

அஞ்சு வருஷமா நான் ரயிலில் போறேன். எப்பவும் எங்க அப்பா எட்டு வயசு தான் சொல்றாரு.

ஒரு கூடையில் 10 மாம்பழம் இருக்கு. கவிதாவுக்கு 4, பூரணிக்கு 4 கொடுத்தால் உனக்கு என்ன வரும்?

கோபம் தான் வரும், டீச்சர்.

விழாவும், அதுவுமா ஏன் அவ எல்லாரையும் திட்டிகிட்டே இருக்கா?

இன்னைக்கு பள்ளியில் நடக்கிற “வைர” விழாவை, “வைய்யிற”விழா னு தப்பா புரிஞ்சுகிட்டா போல இருக்கு!

தமிழ் ஜோக்ஸ் | Tamil Jokes

மேலே பந்து வீசினால் அது தானாக கீழே வந்துடுதே, எப்படி?

ஏன்னா, மேல பிடிக்க ஆள் இல்ல, அதான் கீழ வந்துடுது சார்.

ஏன் அவன் பளுவை தூக்கி வைத்துக் கொண்டே படிக்கிறான்?

ஏன்னா! அவங்க டீச்சர் “கஷ்டப்பட்டு” படித்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று சொல்லியிருக்கிறார்களாம்.

என்னப்பா நீ ஆணிய கையில வெச்சிகிட்டு எதை தேடிக்கிட்டு இருக்க?

” ஆணி”வேர் என்று சொன்னீங்களே! அது எந்த ஆணியில இருக்குனு தேடிக்கிட்டு இருக்கேன்

பாம்பு, நண்டு தவிர தோலுரிக்கும் 300 உயிரினம் எது?

வாத்தியார்?

எதிரி நாட்டிலிருந்து போர் ஓலை வந்து இருக்கிறது மன்னா!

ஆயுதங்கள் தான் அடமானத்தில் இருக்கிறதே! மீட்டெடுத்ததும் தகவல் கொடுப்பதாக எழுதிவிடும்.

Tamil Mokka Jokes – கடி ஜோக்ஸ் தமிழில்

அந்த எழுத்தாளர் மாவு மில்லில் வேலை பார்க்கிறாராம்.

அதான் அரைத்த மாவையே அரைக்கிறாரா

தானத்தில் சிறந்தவர் நமது மன்னர் என்று எப்படிப் பெயர் எடுத்தார்?

போர்க்களத்தில் கூட எதிரி நாட்டு மன்னரிடம் சமா”தானம்” பேசி சமாளித்து விடுவார்.

எங்கே ஈ காட்டு பாக்கலாம்?

நீங்க ‘ஈ” பார்த்ததில்லையா டாக்டர்!

2 ல 5 போகலைன்னா பக்கத்துல கடன் வாங்கணும்.

பக்கத்துல சரவணன் கிட்ட கேட்டேன் தர மாட்டேங்குறான், சார்!

பார்த்து அறிவது பலன் தருமா? பார்த்து தெரிவது பலன் தருமா? இல்லை பார்த்து புரிவது தான் பலன் தருமா?

பார்த்து எழுதுவதே பலன்தரும், சார்.

Tamil Mokka Jokes – Tamil kadi jokes

மன்னருக்கு கிரிக்கெட் பைத்தியம் முத்தி போச்சு.

எப்படி சொல்றீங்க?

எதிரி மன்னரிடம் போரை “பகல் – இரவு” போராக வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டு ஓலை அனுப்பி இருக்கிறார்.

முதுகில் பல்லி விழுந்தால் காலண்டரில் குழப்பம் னு போட்டிருக்கே!

நம்ம முதுகில் பல்லி விழுந்தால் காலண்டர்ல ஏன்டா குழப்பம் வரணும்.

நல்லா படிச்சு பரீட்சை எழுதியும் இப்படி ஃபெயில் ஆயிட்டோமேன்னு கொஞ்சம் கூட கவலை இல்லாம நிக்கிற?

நீங்கதானப்பா சொன்னிங்க “கடமையை செய் பலனை எதிர்பார்க்காதேனு”

ரவி! சாமிகிட்ட நல்ல அறிவை கொடுக்கணும்னு வேண்டிக்கொள்!

அப்பா உங்களுக்கு வேணும்னா நீங்களே சாமி கேட்க வேண்டிக்கறது தான! என்ன விட்டு ஏன் பா கேட்க சொல்றீங்க.

மொக்கை ஜோக்ஸ் தமிழ் – Jokes in Tamil

பாஸானா மிட்டாய் தருவாங்க! ஆனா உங்க பையன் ஃபெயிலானதுக்கு மிட்டாய் தரீங்களே! ஏன் சார்?

பாஸானா கம்ப்யூட்டர் வாங்கி தரேன்னு சொல்லிட்டேன். இப்ப அந்த பிரச்சனை இல்லை என்கிற சந்தோஷம் தான்.

இந்தக் கேள்வி ரொம்ப முக்கியமானது. தூக்கத்துல கேட்டா கூட பதில் சொல்லணும்.

சரி, நீங்க தூங்கும் போதா? இல்ல நாங்க தூங்கும் போதா?

போருக்கு கிளம்பும் முன் மன்னர் எதற்கு டுடோரியல் காலேஜ் போகிறார்?

“இங்கே வந்தால் வெற்றி நிச்சயம்” என விளம்பரப்படுத்தி இருக்காங்களாம் அதான்.

நம் மன்னரை கோழையென்று எப்படி சொல்கிறாய்?

எதிரி நாட்டு மன்னன் போருக்கு வரச்சொல்லி ஓலை அனுப்பியதற்கு, நம் மன்னர் “பிப்ரவரி மாதம் 30″ஆம் தேதி போருக்கு வருவதாக பதில் ஓலை அனுப்பி இருக்கிறார்.

ஆசிரியர் மாணவர் ஜோக்ஸ் – Student teacher jokes in Tamil

ஏண்டா பத்து நாளா கிளாஸுக்கு வரதில்லை?

ஒரே இடத்துக்கு அடிக்கடி போன மரியாதை இருக்காதுனு, எங்க அப்பா சொல்லி இருக்கார். அதான் சார் வரல!

கடி ஜோக்ஸ்: டேய் ராமு! காலில் முள் குத்தியது இது என்ன காலம்?

கஷ்டகாலம், சார்.

வள்ளுவருக்கு அதிகாரம் செய்வது என்றால் ரொம்ப பிடிக்குமா சார்?
ஏன் அப்படி?

1330 குறலையும் 133 “அதிகாரமா” எழுதியிருக்காரே அதான் கேட்டான்.

உங்க ஆசிரியர் ஒரு மாதத்தில் சுமாராய் எத்தனை பாடங்கள் நடத்துவார்?

எல்லா பாடங்களையும் “சுமாராய்” தான் நடத்துவார்!

இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும்?

எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும், சார்!

ஏன்டா பரிட்சை எழுத வந்துட்டு தூங்குற?

கேள்விக்கு பதில் தெரியலனா சும்மா “முழிச்சு”க்கிட்டு இருக்க கூடாதுன்னு எங்க அப்பா தான் சொன்னாங்க சார்.

Tamil Mokka Jokes – Tamil Jokes

எத்தனை முறை போர்க்களம் கண்டுள்ளீர்கள்? என்று மன்னரை கேட்டால் கோபப்படுகிறாரே!

புறமுதுகிட்டு ஓடி வந்த கணக்கை கேட்டால் யாருக்கு தான் கோபம் வராது

இரண்டு வீரர்கள் கத்தி சண்டை போட்டால் என்ன ஆகும்?

தெரியலையே

தொண்டை கட்டிகும்.

Kadi jokes in Tamil: போர்க்களம் செல்லும்போது மன்னர் வெள்ளை ஆடைகளையே அணிகிறார். ஏன்?

நிலைமை மோசமாகி, எதிரியின் கை ஓங்கினால், உடனே மன்னர் ஆடைகளை கழற்றி சமாதான கொடியை காட்டி விடுவார்.

என் தம்பி ரொம்பவும் பயந்த சுபாவம். சூடா இட்லி கூட சாப்பிட மாட்டான்.

ஏன்?

அதில் ஆவி இருக்குமே!

டாக்டர்! என் பையன் காய்ச்சல் வந்ததிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து முட்டை முட்டையா போட்டுக்கிட்டே இருக்கான் என்ன செய்ய?

அப்படியா, அப்ப அவனுக்கு வந்திருப்பது “பறவைக்காய்ச்சல்” தான்.

கடி ஜோக்ஸ் கேள்வி – Kadi jokes in Tamil

நான் பாடம் நடத்தும் போது தூங்கிக் கொண்டே இருந்தாயே! உனக்கு என்ன தண்டனை தரலாம்? நீயே சொல்.

அந்த பாடத்தை இன்னொரு தடவை நடத்திடுங்க சார்.

மன்னர் பண்ணுவது சரியா படல!

எப்படி சொல்ற?

எதிரி நாட்டுப் படைகள் நம்ம நாட்டுகுள்ள வரக்கூடாதுனு நம்ம நாட்டை சுற்றி “நோ என்ட்ரி போர்டு” வைக்க சொல்றாரு.

கான்வென்ட்டில் படிச்சதனால அவர் இங்கிலீஷ்காரர் மாதிரி பேசுவார்!

அவ்வளவு நல்லாவா இங்கிலீஷ் பேசுவாரு?

நீ வேற நான் அவர் பேசற தமிழ சொன்னேன்.

மன்னா! வாள் சண்டை, குத்துச் சண்டை எல்லாம் பழகாமல் புறமுதுகு காட்டி ஓடச் மட்டும் பயிற்சி அளிக்கிறீர்களே இது நியாயமா?

என்னை போல அவனும் உயிர் பிழைக்க வேண்டாமா!

நானும் உங்கள மாதிரி ஸ்டூடண்டா, இதே ஸ்கூல்ல படிச்சவன் தான். இப்போ இதே ஸ்கூலில் ஆசிரியர் ஆகிட்டேன். இதுல இருந்து என்ன தெரியுது?

இந்த ஸ்கூல்ல படிச்சா வேறு எங்கும் வேலை கிடைக்காதுனு தெரியுது, சார்.

கடி ஜோக்ஸ் இன் தமிழ் Kadi jokes in Tamil

அவனுடைய அப்பா, முன்னாடி லாட்டரி கடைக்காரரா இருந்ததால, அவன் தப்பிச்சான்!

எப்படி?

பரீட்சை ரிசல்ட்ல “ஒரு நம்பரில்” தானே பெயில் ஆகிட்ட, அடுத்த முறை பார்க்கலாம் என்று சொல்லிட்டாரு.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த பேஷண்ட்டுக்கு பிரஷர் குறைந்து தான் இருந்தது. திடீர்னு எப்படி ஏறிச்சு?

நீங்க பீஸ் கட்டணம் சொன்னவுடன் தானா ஏறிடுச்சு, டாக்டர்.

போரைத் தடுக்க எல்லா அஸ்திரமும் வீணாகிவிட்டது. கடைசியாக “பிரம்மாஸ்திரம்” உபயோகிக்க வேண்டியது தான்.

அது என்ன பிரம்மாஸ்திரம் மன்னா?

எதிரி நாட்டு மன்னனை தனிமையில் சந்தித்து காலில் விழுந்து விடவேண்டியதுதான்.

துன்பம் வரும்போது அவர் சிரிப்பார்.

அப்படியா? ஆச்சரியமா இருக்கே!

இதுல என்ன ஆச்சரியம். மத்தவங்களுக்கு துன்பம் வரும்போது அவர் சிரிப்பார்.

அவரை எப்படி போலி டாக்டர்னு கண்டுபிடிச்சீங்க?

கிளினிக்குக்கு முன்னால உள்ள போர்டில் பிளஸ் அடையாளம் போட்டு வட்டம் போடாமல், மைனஸ் அடையாளம் போட்டு வட்டம் போட்டு இருக்காரு!

Kadi jokes in Tamil

ஸ்டாண்டுல நிக்கிற எல்லா பஸ்சிலும் ஏறி சிறிது நேரம் இருந்துவிட்டு பிறகு இறங்குறியே! ஏண்டா?

நம்ம தமிழ் ஐயா தான் எங்கே “திருக்குறள்” எழுதிப் போட்டு இருந்தாலும் அதை படிக்க வேண்டும்னு சொல்லி இருக்காரு இல்ல!

மன்னா! எதிரி நாட்டு மன்னர் வீரத்தில் சிறந்தவராக இருக்கிறார்.

“அமைச்சரே! ஒவ்வொருக்கும், ஒவ்வொரு திறமை இருக்கும். அவரை என்னிடத்தில் “ஓட்டப்பந்தயம்” வரச்சொல்லும் யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

அந்த டாக்டர் போலினு எப்படி சொல்றீங்க?

வயித்துல கிருமி இருக்கு பூச்சிமருந்து தாங்கனு கேட்டேன். உடனே மருந்துல ஒரு பூச்சிய போட்டு கொடுத்துட்டாரு.

கருப்பா இருக்கிற மேகங்கள் மட்டும் ஸ்பீடா நகரும். ஏன் தெரியுமா?

ஏன்?

ஏன்னா அது “கார்”மேகம் அதனால தான் ஸ்பீடா நகருது.

உன் ஆசிரியர் ரொம்ப நல்லவர்னு எப்படி சொல்ற?

ஞாயிற்றுக்கிழமை கூடாது டியூஷன் வைத்து பாடம் நடத்தி எங்கள தூங்க வைச்சிடுவார்.

சிறந்த கடி ஜோக்ஸ் – Kadi Jokes Tamil

எங்க அப்பாவை நினைச்சா பாவமா இருக்குடா!

ஏன்டா?

எங்க வாத்தியார் கூட “முட்டாள் பையன் மகனே” னு சொல்றாரு டா.

உங்க தாத்தா பாஸ், பாஸ்னு சந்தோஷத்தில் குதிக்கிறார். நீ பரிட்சையில் பாஸ் ஆனதாக குதிக்கிறாரா?

இல்ல. அவர் முதியோர் கல்வி தேர்வில் பாஸ் ஆகிட்டார். அதுக்கு தான்.

மகாராஜாவின் மனைவி காற்றடிச்சா பறந்து விடுவார்கள்!

மகாராணி அவ்வளவு ஒல்லியா?

இல்ல அவங்க தான் “பட்டத்து” ராணி ஆச்சே!

நமது மன்னர் போர் புரிவது போல் அடிக்கடி கனவு வருவதாக சொல்கிறார். ஏன்?

கனவில்கூட போருக்கு செல்ல மாட்டார் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக தான்.

அப்பா நான் படிக்க போகல.

ஏன்டா?

“கம்ப்யூட்டர்” படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றாரு. அப்புறம் நான் எதுக்கு படிக்கணும்.

குரைக்கிற நாய் கடிக்காது! ஏன் தெரியுமா?

ஏன்?

“இரண்டு வேலையும் ஒரே நேரத்தில செய்ய முடியாது”.

Here we have kadi jokes in Tamil with answers. It is also called as Mokka jokes in Tamil. these are latest jokes in Tamil and latest Mokka jokes in Tamil with answers.

- Advertisement -