- Advertisement -

செல்வந்தராக்கும் அம்ச கலச வழிபாடு

- Advertisement -

நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு முயற்சியை செய்து அந்த முயற்சியில் வெற்றி அடைந்து அந்த வெற்றியின் மூலம் பணத்தை சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு உயர வேண்டும், இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்று தான் போராடிக் கொண்டிருப்போம். பலருக்கும் அந்த முயற்சிகளை செய்வதற்கே பல தடைகள் ஏற்படும். அப்படி ஏற்படக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்குவதற்கும் அதே சமயம் அந்த முயற்சியின் மூலம் செல்வங்கள் பெருகுவதற்கும் வீட்டில் வைக்கக் கூடிய கலசத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வந்தராக்கும் அம்ச கலச வழிபாடு

பொதுவாக கலச வழிபாடு என்பது மகாலட்சுமிக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது. அஷ்ட லட்சுமிகளும் அந்த கலசத்தில் வீற்றிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் கோவில்களில் பூஜைகள் செய்வதாக இருந்தாலும் முதலில் கலசத்தை வைத்த பிறகு தான் செய்ய ஆரம்பிப்பார்கள். அந்த அளவிற்கு தெய்வ சக்தி என்பது நிறைந்திருக்கும். அப்படி தெய்வ சக்தி நிறைந்திருக்க கூடிய கலசத்தை நம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யும்பொழுது நம் வீட்டிற்கு அந்த தெய்வ சக்தி என்பது ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தெய்வ சக்தி மிகுந்த கலசத்தை எந்த முறையில் வைக்க வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த கலசத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி போன்ற தினங்களில் வைப்பது என்பது மிகவும் சிறப்பு. இதற்கு ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை ஒரு பேப்பரில் எழுதி அந்த பச்சரிசியின் மேல் வைக்க வேண்டும். பிறகு அந்த தட்டிற்கு ஏற்றார் போல் ஒரு பித்தளை சொம்பை எடுத்து அதில் முக்கால் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அந்த தண்ணீரில் பச்சை கற்பூரத்தை போட வேண்டும். அடுத்ததாக கலச பொடி அல்லது அபிஷேக கூட்டு என்று நாட்டு மருந்து கடைகளில் விற்கும். இந்த இரண்டு பொடிகளில் ஏதாவது ஒரு பொடியை வாங்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு அதில் போட வேண்டும். அடுத்ததாக அந்த தண்ணீரில் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தாமரை பூவின் இதழ்களை போட வேண்டும். அப்படி தாமரைப் பூ கிடைக்காத பட்சத்தில் செம்பருத்தி பூவின் இதழ்களை போட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக அந்த சொம்பிற்கு ஏற்றார் போல் ஒரு தேங்காயை எடுத்து அதை சுத்தம் செய்து மஞ்சள் தடவி குங்குமம் வைத்துக் கொள்ளலாம். அந்த தேங்காயை சுற்றி 8 மா இலைகளை வைத்து தேங்காயை வைக்க வேண்டும். தென்னங் பூ கிடைக்கும் பட்சத்தில் அதையும் மாயிலைகளோடு சேர்த்து வைத்துக் கொள்ளலாம். இப்படி கலசத்தை வைக்கும் பொழுது நம்முடைய மனதுக்குள் “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை மட்டும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

தினமும் தீபம் விளக்கேற்றும் பொழுது கலசத்திற்கு தூப தீப ஆராதனை காட்டி உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதார கூற வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை கலசத்தில் இருக்கக்கூடிய தண்ணீரை மாற்ற வேண்டும். பழைய தீர்த்தத்தை வீடு, தொழில் செய்யும் இடம், பணம் வைக்கும் இடம், நகை வைக்கும் இடம் இப்படி அனைத்து இடங்களிலும் தெளிக்க வேண்டும். மீதம் இருக்கும் பட்சத்தில் குளிக்கும் தண்ணீருடன் கலந்து இந்த தீர்த்தத்தை உபயோகப்படுத்த வேண்டும். தேங்காயை மாதத்திற்கு ஒருமுறை மற்றும் ஆற்றினால் போதும்.

இதையும் படிக்கலாமே:கடன் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள்

இந்த எளிமையான கலசத்தை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நம் வீட்டில் தெய்வ சக்தி ஏற்படுவதோடு நம்முடைய முன்னேற்றத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளும் நீங்கும். மேலும் மகாலட்சுமியின் அம்சம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -