- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள்

கடன் தீர வழிபட வேண்டிய தெய்வங்கள்

- Advertisement -

கடனால் அவமானப்பட்டு மரியாதை போன்றவற்றை இழந்து வெளியில் தலை காட்ட முடியாமல் தலைமறைவாக இருக்கக்கூடிய நபர்கள் பலர் இருக்கிறார்கள். அதே சமயம் தன்னையும், தன் குடும்பத்தையும், தன் சொத்துக்களையும் இழந்து இன்னும் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை உயிர் மட்டுமே இருக்கிறது என்று நினைப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். அப்படி பட்ட கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எந்தெந்த தெய்வங்களை வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஒருவர் கடன் வாங்குகிறார் என்றால் அவருக்கு செவ்வாய் பகவானால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். ஒருமுறை கடன் வாங்க போகிறோம் என்னும் பட்சத்தில் நம்முடைய ஜாதகத்தை அலசி ஆராய்ந்து அந்த சமயத்தில் கடன் வாங்கினால் அதை திரும்ப அடைத்து விட முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வருமானம் என்ன அதற்குள் அந்த கடனை அடைத்து விட முடியுமா என்றும் யோசிக்க வேண்டும். பிறகுதான் கடனை வாங்க வேண்டும். அப்படி வாங்கிய கடனை நம்மால் திருப்பி அடிக்க முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகும் பொழுது தான் பரிகாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் வணங்க வேண்டிய தெய்வங்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்பவர்கள் செவ்வாய் பகவானுக்குரிய தெய்வமான முருகப்பெருமான வழிபாடு செய்வார்கள். செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஹோரையில் முருகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாடலை பாராயணம் செய்து வர முருகப்பெருமானின் அருளால் விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும்.

இதே போல் நரசிம்மரை செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் நெய் தீபம் ஏற்றி வைத்து குண விமோசன ஸ்லோகத்தை பாராயணம் செய்யும்பொழுது நரசிம்மரின் அருளால் கடன் பிரச்சினைகள் தீரும். இதற்கு அடுத்ததாக சரபேஸ்வரர். சரபேஸ்வரரை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றி வைத்து 13 முறை வலம் வந்து வழிபாடு செய்ய கொடுத்த கடனை திரும்ப பெற முடியும். நாம் வாங்கிய கடனையும் அடைக்க முடியும்.

- Advertisement -

இதேபோல் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையிலோ அல்லது ராகு காலத்திலோ அகோர வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வைத்து வலம் வந்து வழிபாடு செய்ய விரைவிலேயே கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பரிகாரங்களை செய்வதற்காக கடனை வாங்காமல் இப்படி கடனை அடைப்பதற்கு உரிய தெய்வங்களை நாம் முழுமனதோடு தொடர்ச்சியாக 13 வாரங்கள் வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழிகளை அந்த தெய்வம் காட்டுவார்.

இதையும் படிக்கலாமே: தெய்வ நடமாட்டத்தை உணர்த்தும் அறிகுறிகள்

எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முழு சரணாகதியுடன் நீயே எனக்கு துணை என்று மனதார நினைத்து வழிபாடு செய்ய அந்த தெய்வத்தின் அருளால் விரைவிலேயே நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்